ஆண்டு பிறந்தது அன்னை-அரசினில்
ஆண்ட பரம்பறை நீயல்லவோ-அட.
ஈண்டு முழங்கிட எக்காளம்-ஊதிட
எழுக எழுகென்று நான் சொல்லவோ
தூண்ட மணிச் சுடா வையமெல்லாம்-உருது.
தோன்றிடும் என்பது மெய்யல்லவோ-அன்று.
நீண்டு வளர்ந்த நம் தாயாரின் -ஆயங்கள்.
மீண்டும் துலங்கிடும்-தையல்லவோ.
சோற்றுக்கும் மாட்டுக்கும் சுரைப்பானை.புடலைக்கும்.
சொன்னான் வணக்கங்கள்.-தமிழனன்றோ.
ஓடும் ஆற்றுக்கும் வயலுக்கும்.
அறுகுப் பானைக்கும்-அமைத்தான். விழா ஒன்று-தமிழனன்றோ.
ஆளும் நாட்டக்கும் வீட்டுக்கும்-உழவே தலையென்று.
நச்சசென்று சொன்னவன்-தமிழனன்றோ
என் பாட்டுக்கு மாறுகிறாய் மறைக்கின்றாய்-போடா.
உன் பாட்டனும் பூட்டனும்-தமிழனன்றோ!
புத்தாண்டு தமிழனுக்கு பொன்னான தைமாதம்.
புரியாமல் அலையாதீர் பைத்தியங்கள்.-இங்கு.
வித்தாண்டு விதையாண்டு விழு றூற்றாண்டாடு!.
விளைவதால் மறவாதீர் பைத்தியங்கள்.-உடன்.
இத்துண்டு தல்கண்டு எம்மோடு-சேருவீர்.
இனியேனும் தெளிவிர்கள் பைத்தியங்கள்.
தூய சத்தாண்டு வருகின்ற-தைமாதம்
பொங்கலே தரவேண்டம்.-யாவருக்கும் வைத்தியங்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-