கிழக்கின்கரையோரம் கீழ் வானில் ஏழு நிறங்கள் வளைந்து இசை பாடும் வானவில்லின் அழகும் மேகங்கள் ஒன்றுடன்ஒன்று மோத கதிரவன் ஒளிக்கீற்று பூமியெங்கும் பரவ மாநிறம் கொண்டு வளைந்தாடும் மங்கையின் வதனம் சனக் கூட்டத்துக்குள் என் கண்ணுக்கு தெரிந்தது அவள்தான் என் ஆனந்தி
ஓடி விளையாடும் பிஞ்சுகள் .வயதில் முதிர்ந்த தாத்தாக்கள் நெஞ்சை பிடித்த வண்ணம் ஓலமிட்டு திரிகிறார்கள் விமானங்களின் இறச்சல் சப்தங்களும் ஆங்காங்கே குண்டுகளின் சப்பதங்கள்,கேட்ட வண்ணம் இருந்தது,
மூட்டை மூட்டையாய் துணிகளும் மூட்டை மூட்டையாய் சமயல் பாத்திரங்களையும் தலையிலும் தோழிலும் சுமந்த வண்ணம் படுத்துறங்க கையில் ஓலைப்பாயுடனும் தன் ஊர் சொந்தங்களுடன் இடம் பெயர்ந்து போகிறாள்
குண்டுகளின் ஆணவ அகோரத் தாண்டவம் அவள் உடல் எங்கும் பதம் பார்த்தது அவள் இரத்தம் துவைந்த உடையுடன் அழுத குரலுடன் தன் காதலனை பார்க்க வேண்டும் என்ற மன ஏக்கத்துடன் தன்னால் முடிந்தளவு அவள் போராடி ஒரு தன்னம்பிக்கையுடன் ஒரு பக்க கரையை அடைகிறாள்
அவள் பாதுகாப்பாக கரை ஒதுங்கிய இடத்தில் சிறு சிறு தரைப்பால் குடிசைகள் குனிந்து நிமிர முடியாதவாறு அந்த குடிசை அமைந்துள்ளது அவளின் சிந்தனை தன் உடம்பில் உள்ள குண்டுக் காயங்களை பற்றியோ, அல்லது அவள் வாழும் சின்னக் குடிசை பற்றியோ அல்ல
அவள் உயிருக்கு உயிராக மனசார நினைத்த காதலன் (ஆனந் )பற்றிய நினைவுதான் அவள் நினைவில்அலையலையாய் ஓடிக் கொண்டிருந்தது,அவள் தனிமையில் இருந்து யோசிக்கும் போது தன்னுடன் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மல்லிகா வந்து என்ன பிள்ளை எப்ப பார்தாலும் ஏதோ யோசிக்கிறாய்,,,,,,,,,,,, என்று கேட்டாள் மல்லிகா
அதற்கு ஆனந்தி சொல்லகிறால்,,,,,,,,,,,,,,நான் உயிருக்கு உயிராக நேசித்த என் (ஆனந்தின் ) நிலை என்னவென்று தெரியாது அவனைப் பற்றிய நினைவுதான் என் சகோதரங்கள் அம்மா அப்பா எல்லோரும் இறந்தாங்கள் அந்த கவலை எனக்கு பெரிதா தெரிய வில்லை என் காதலன் (ஆனந் ) பற்றிய கவலைதான் எனக்கு பெரிதாக தெரிகிறது என்று பதில் கூறினால்,,,பின்பு
என்ன இறைவா இந்த சோகத்தையும் வேதனையும் ஒன்றாக என் வாழ்வில் அனுபவிக்க விட்டாயா? என்ற கேள்விக் கனையை தன் மனதுக்கு தொடுத்தாள்
குடிசையில் வாழும் மக்களின் வாழ்வு நிலை ஒரு இயல்பு வாழ்கைக்கு திரும்பியது பின்பு (ஆனந்தி) தன் காதலன் (ஆனந்தை) தேடும் பயணத்தை தொடர்கிறாள் அவள் ஒவ்வொரு இடைத்தங்கள் முகாமாக அவன் முகவரியை கையில் பிடித்த வண்ணம் அலைந்து திரிகிறாள் பல உயர் அதிகாரிகளை சந்தித்து என் வாழ்வில் இழக்க முடியாத என்ன உறவுகளை இழந்தேன் அந்த வேதனை ஒருபக்கம் இருக்க
,,,,என் கதாலன்(ஆனந்துக்கு ) இந்த நிலையா என்ற வினாவினை பேசுகிறாள் என் ஆனந்தை எப்படியாவது தேடி எடுத்து தாருங்கள் என்று கேஞ்சி மண்ணடாடினால் அதற்கும் பதில் கிடைக்க வில்லை
பல மாதங்கள் கடந்த நிலையில் தேடித்தேடி அலைந்ததுதான் மிச்சம் அவளால் கண்டு பிடிக்க வில்லை,,,,,
(ஆனந்தி) யுத்தத்தாள் தன் உடமைகளை இழந்தவள் அதைய நேரம் அவளுடைய அடையள அட்டையை யுத்தத்தில்இழந்தாள் அவள் தன்னுடைய அடையாள அட்டை எடுப்பதற்காக அடையாள அட்டை பெறும் திணைக்களத்துக்கு சொல்லுகிறாள் அங்கு அவள் வரிசையாக நின்று சில மணி நேரத்துக்குப் பின்பு அடையாள அட்டை கிடைத்தது அதை வேண்டிய வண்ணம் வீதியோரமாக சோகம்கலந்த முகத்துடன் போகும் போது எதேச்சியாக (ஆனந் வாருகிறான் என் ஆனந்)மாமா என்று பெரிய சந்தோச அழுகையுடன் கட்டிப்படித்தாள் பின்பு (ஆனந் ) அம்மாவின் வீட்டுக்கு அளைத்துச் சென்றான் பாசங்களை மாறி மாறி பகிர்தார்கள் ஆனந்தியின் மீது ஆனந் குடும்பம்
ஆனந்தியின் வாழ்கையில் யுத்தத்தில் பட்ட துன்பத்தை விட தன் காதலனை அடைய வேண்டும் என்ற ஒரு எழுச்சின் வடிவம் அவள் மனதில் காதல் ஒரு போராட்டாமாக மாறியது அவள் இறுதி வரை போராடினால் கடசியில் அவள் தன் காதலில் வெற்றி வகை சூடினால் ஆனந்தியைப் போன்ற பெண்கள் எத்தனை பேர் காதலுக்காக போரடி வெற்றியடைந்த பெண்களும் உள்ளார்கள் அதைய போன்று காதலுக்காக வாழ்வில் போராடிக் கொண்டு இருக்கும் பெண்கள் எத்தனை பேர் அவர்களின் காதலும் வாழ வேண்டும் காதல் வாழ்க காதல் வாழ்க,,,,,,காதல் வாழ்க,,,காதல் வாழ்க
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் எதீர் நீச்சல் வேண்டும் அதுதான் வாழ்க்கைப் போராட்டம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-