காலம் வரை கருவறையில்.
சுமந்திட்டேன் மகனே.
நீ.காலவாகும் தேதி.
தெரியவில்லை மகனே.
கருவறையில் சுமந்திட்ட -நான்.
உன்னை பெற்றேடுக்க -நீண்ட.
நாள் காத்திருந்தேன்.
அன்னையின் கருவறையில்லிருந்து.
நீ நிலவறைக்கு வரும் போது.
தக தக வென்ற பென்போல. இருந்தாயட.-மகனே.
உன்னை சுமந்திட்ட காலத்தில்.
அளவில்லாத ஆசை வளத்தேன்-மகனே.
நீ.யார் இடமும் சொல்லாமல்.-நீ.
எட்டுக்கால்(8)பந்தலில் போவாய் என்று.
எனக்கு தெரியவில்லை-மகனே.
என்னுடைய வேதனையை யார்ரிடம்.
சொல்வதடா……..
உனக்கு ஐந்து(05) வயதினிலே.
வளர்க்க என்ன பாடு பட்டேன் மகனே.
நீயும் நாலுபேரைப் போல.நல்லா.
வாழவேண்டுமென்றுதான்-தளராத .
ஆசை வளர்த்தேன் மகனே.
இப்படியும் ஒரு நிற்கதி
வருமென்று நினைக்க வில்லை மகனே.
உன் அப்பன் சீமான்தான்.
நீ கருவறையில் இருக்கும் போது.
படைத்த இறைவன் கொண்டு போனான்.
என் கருவறையில்லிருக்கும்.-நீதான்.
மிச்சமென்று மெத்திச்சு பூரிப்படைந்தேன்.
அதவும் ஒப்பாரி கீதத்தில் போகுமென்று.
கனவில் கூட நினைக்க வில்லை.
உன் அப்பன் இறப்பினாலும்
உன் இறப்பினாலும்.-என்.
வாழ்வு.சீரழிந்து போனதடா.
உன் அப்பன் சீமான் இறந்த.
வேலையில் உடன் கட்டை.
ஏற புறப்பட்டேன்.-என்.
சொந்த பாசங்கள் முட்டுக்கட்டையா.
இருந்ததடா.ஏன் என்றால்.
என் வயிற்றில் நீ.
வளருகின்றாய் மகனே.
அப்போது தடுத்து இருக்கா விட்டால்.
மூவா உயிரும்.அமைதியா
சாந்தியடைந்திருக்கும்.
மகனையும் கணவனையும்.
இழந்து தனி மரமாய்
கலியுக காலத்தில்-காலம் கழியுதடா.
என் சோக வாழ்வை பார்க்க.
நீயும் தந்தையும் இல்லையே…….
எப்போது விடிவு வரும்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-