ஆதவன் உலகை எழுப்பி விட்டான்
இன்னும் என் சின்னக்குயில் -ஒலி எழுப்ப வில்லை
காரணம் என்ன வென்று புரியவில்லை-கொஞ்சம்
தேடிகண்ட பிடித்துச் சொல்லண்டா-நண்பா
அவள் முகத்தை இது வரை பார்த்ததில்லை
அவள் முகவரி கூட அறிந்ததில்லை
அகத்தால் ஆளும் சின்னக் குயில்தான்-கூவி
அழைக்காது இருப்பதேன் அதை புரிந்து
சொல்வாயடா நண்பா
பால் போன்ற வெள்ளை உள்ளம்-என்றும்
அகம் மகிழ வெளிப்படையாகச் சிரிக்கும்-மலரது
அவள் குறும்பு பேச்சால் என் மனது-அவளை
கொள்ளை கொள்ள வைத்தது-ஏன்
சொல்லிக்க வில்லை தெரிந்த வா-நண்பா
இருவர் உறவை கைபேசி மூலம் வளர்ந்தது-கவிதை
உணர்வை பேச்சு மூலம் வளர்ந்தது
திறமை கொண்ட கவிதைப் புத்தகம்
கூவா திருப்பதேனோ??-அதை
அறிந்து வா நண்பா
என் சின்னக் குயில்தான்
இன்னும் கூவவில்லை-ஏன்
ஊமை என்று தெரியவில்லை
எனக்கு மின்னல் போல்-பாயுது துன்பம்
என் மனக் கோட்டை
மண் கோட்டையா மாறிச்சா-என்ன
முடிவென்று அறிந்து வா-நண்பா
தூது அனுப்பினேன் உனக்கு-என் நண்பனை
என் சின்னக் குயிலுக்காக
நீ பிடி வாதம் பிடிக்காதே-சின்னக் குயிலே-என்
துன்பத்தை அறிந்து
என் வருத்தம் போக்க
கரம் நீட்டும் சின்னக் குயிலே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே
(இன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை) என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கவிதையை படித்து உங்கள் கருத்தை மறக்காமல் இடவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-