பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே……..
காப்பகம்
All posts for the month மார்ச், 2012
பேனாவின் நரம்பு-வளிஓடும்.
உதிரத்தில் உலக சரித்திரத்தை
புரட்டிப் போட்டவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.
அங்கே எல்லாம்
முதற்ப்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்
பேனா சிறிய விலை என்றாலும்
அதன் நூனியில் இருந்து -வடியும்
கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி
உலக சரித்திரத்தையோ-சொல்லிவிடும்
ஆயுத முனையில் யுத்தம்-செய்யும்
எதிரியை விட
பேனா முனையில் எழுதி
யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்
உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்
ஆயுதத்தாள் யுத்தம் செய்வதை- விட
பேனா முனையில் யுத்தம் செய்பவன்
மிக வலிமை படைத்தவன்
பேனா முனையில் யுத்தம்-செய்பவன்
நீதி நியாயம்.தர்மம் எல்லாம்
பக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்
எரிகின்ற தீப்பிளம்புக்கு-மத்தியில்
தன் உயிரே துச்சமென -பாராமல்
அர்ப்பணம் செய்பவன்
நாட்டு மக்களுக்கு-சுதந்திர
தாகத்தை இதமாக -சுவாசிக்க
பெற்றுக் கொடுப்பவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ மனித குலத்துக்கு
எதீராக அடக்கு முறைகளும்
இன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ
ஒரு இனத்தை ஒருஇனம்
எங்கே ஒடுக்குகின்றார்கலோ
அங்கல்லாம் பேனா முனைப்
போராளியின்-குரல்
சர்வதேச அரங்கெல்லாம்
கம்பீரமாக ஓங்கி ஒலிக்கும்
சிலநேரம் அணுகுண்டு-வெடித்து
சில எல்லைகளைத் தான்-அழிக்கும்
ஆனால் பேனா முனைப் போராளி
எடுக்கும் அணுகுண்டு(பேனா)
அது உலகெங்கும் அதிர்வுகளை
உணர வைக்கும்-அந்த
நிஜமான அணுகுண்டை-விட
பல மிக்க —சக்தி
பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்
ஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்
யுத்தம் செய்யும்-வீரர்கள்
பல இழப்புக்களை
உதிரம் சிந்தித்தான்
நாட்டு எல்லையை மீட்க வேண்டும்
ஆனால் பேனாமுனைப் போராளி
உதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்
பேனா முனையில் எழுத்து வடிவில்
புரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.
அவன்தான் போனாமுனைப் போராளி.
யுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்
பேனா முனைப் போராளியின்
பலம்பல -மடங்கு என்று பொருள்படும்
எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
தன் தாய் நாட்டுக்காகவும்
தன் சமுதாயத்துக்காகவும்
அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
அவர்களை இன்று இருக்கின்ற
எம் சமுதாய உறவுகள்
தினம் தினம் பூசிப்போம்……………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வான வெளி ஓடையில்
வாழ்விழந்த பொம்மையாய்
வாழ வேண்டிய நிலை வந்ததடி
வாழ்வா?சாவா? என்று இருக்கையில்
துடுப்பு இழந்த ஓடத்துக்கு
துணையா துடுப்பு போட-வந்தாயடி
பங்குனி வெயிலில்
பகலவன் கொட்டத்தில்
பாதியுள்ளம் வெகுதடி
பார்க்க நீ இல்லையடி
அழுத கண்ணீரை யார்-துடைப்பார்
வெந்த மனசு நெந்து நெந்து-போனதடி
வாழ்வென்ற போர்க்களத்தில்
வாழவேண்டுமென்று
நான் குதித் தேன்
வாழ வேண்டாம்மென்று
விதி வந்து தடை போட்டதடா?
விதியை மதியால் வெல்ல-முடியாமல்
மதி கேட்ட மனிதனாய்-நின்று
கண்ணீர் வடிக்கின்றேன்
அழுத கண்ணீரை யார் துடைப்பார்
உன் வரவுக்காய்
என் உள்ளம் ஏங்குதடி
எப்போது வருவாயடி
என் அழுத கண்ணீரை-துடைக்க
உன் அன்புக்காய் ஏங்கித் தவிக்கும்.
ஒரு இதயத்தின் உள்ள ஏக்கமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
18-ம் நூற்றாண்டில், தென் தமிழ் நாட்டில் வாழ்ந்த குழுக்களுக்கிடையே நிலவும் பழக்க வழக்கங்களும் நடக்கும் போராட்டங்களும்தான் அரவான்.
மஹாபாரத யுத்தம் தொடங்கும் முன் களப்பலி கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும், அரவான் பாத்திரத்தோடு, காவல்காரர்களாகவும், கள்ளர்களாகவும் இருந்த சமூகத்தின் கலவையே இந்தப்படம்.
முதல் பாதி, கதை நடக்கும் காலகட்டத்தையும், அந்த காலகட்டத்தில் இருந்த நடைமுறைகளை, வாழ்வியல் முறைகளையும் தெளிவாக சொல்கிறது. அந்த தெளிவுதான் இரண்டாம் பாதியின் வெயிட்டை தாங்கிப்பிடிக்கிறது. 18-ம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களையும், பழக்கவழக்கங்களையும் நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் வசந்தபாலன். அதற்கான உழைப்பு மிக அதிகம். அதற்காக வசந்த பாலனுக்கு பாராட்டுகள். வசந்தபாலனுக்கு தோள் கொடுத்துள்ள ஒளிப்பதிவாளர் சித்தார்த்துக்கும் சிறப்பான பாராட்டுகள்.
மீண்டும் ஒரு விஷுவல் விருந்து. படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் என்று தெரியாதவாறு மிகவும் கவனமாக உருவாக்கியதற்குப் பின்னால் மிகப் பெரிய உழைப்பும் பண முதலீடும் தெரிகிறது. கதை என்று பார்த்தால் அது படத்தின் இரண்டாம் பாதியில் வருகிற ஆதியின் பிளாஷ்பேக் காட்சிகள் தான். ஆனால் படத்தின் முதல் பாதி முழுவதும் பசுபதி மற்றும் அவரது கிராமத்தாரின் வாழ்க்கை முறையை மிக அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
வானத்து விண்மீன்களை பார்த்து களவாணி தொழிலுக்கு கிளம்புவதில் இருந்து அந்த திருட்டு நகைகளை விற்று ஊர் மக்களுக்கு தானியம் கொண்டுவருவதில் தொடங்குகிறது படம். கள்வர்கள் நிறைந்த ஊரில், கள்வர்களுக்கு தலைவராக பசுபதி. இவர்களின் ஊருக்கு வந்து சேர்கிறார் ஆதி. பசுபதி ஆதியை ஏற்றுக்கொள்ள, பசுபதியின் தங்கை ஆதியை காதலிக்க, பசுபதியும் “என் தங்கையை மணந்து கொள்” என்கிறார். ஆதி அப்போது, தனக்கு திருமணம் ஆகி விட்டது என்கிறார். ஜல்லிக்கட்டில் பசுபதி காயமுற, ஆதி தான் யார் என்ற உண்மையை சொல்லி விட்டு களத்தில் இறங்குகிறார். ஜல்லிக்கட்டில் வெல்லும் ஆதியை, அவர் சொந்த ஊர்க்காரர்கள் வந்து அடித்து இழுத்து செல்கின்றனர். ஏன் என கேட்கும் பசுபதியிடம் “ஆதி ஒரு பலியாடு. பலி ஆக வேண்டியவன்” என்கிறார்கள்.
இடைவேளைக்கு பின் ஆதியின் கதை விரிகிறது. அந்த ஊர் ராஜாவின் சூழ்ச்சியால், ஆதியை பலி கொடுக்க நாள் குறிக்கின்றனர். உண்மையை சொல்லாமல் ராஜா தற்கொலை செய்து கொள்கிறார். பத்து ஆண்டுகள் மறைந்திருந்து திரும்பினால், பலி தர மாட்டார்கள் என்பதால், மறைந்து வாழ்கிறார் ஆதி. 9 ஆண்டுகள் முடிந்த நிலையில் என்னவாகிறது என்பதுதான் மீதிக்கதை.
ஆதியின் உழைப்பை என்ன சொல்லி பாராட்டுவது? படம் முழுதும் வெய்யிலில் சட்டையோ, செருப்போ இன்றி கல்லிலும் முள்ளிலும் ஓடுகிறார். ‘சரசர’வென சுவற்றில் ஏறுகிறார். வெறும் உடம்புடன் மரத்தில் கட்டி தொங்க விடுகிறார்கள். ஜல்லி கட்டில் டூப் இன்றி வீரம் காட்டுகிறார் (பசுபதிக்கு டூப் போட்டது தெளிவாய் தெரிகிறது. ஆதிக்கு சிறிதும் டூப் இல்லை). கன்று குட்டியை தூக்கி கொண்டு ஓட்டப் பந்தயம் ஓடுகிறார். நீர்வீழ்ச்சி மேலிருந்து குதிக்கிறார். மாடு மேல் சவாரி செய்கிறார். சிக்ஸ் பேக் உடல் படம் முழுதும் பராமரித்துள்ளார்.
இவை அனைத்துமே கஷ்டப்பட்டோம் என சொல்ல, துருத்தி கொண்டு தெரியாமல், மிக இயல்பாக அமைந்துள்ளது. எந்திரனில் ரஜினியை ‘பெண்டு’ நிமிர்த்திய மாதிரி இதில் ஆதியை வேலை வாங்கி உள்ளனர். அவரது உயரம், உடலை வைத்து அவர் செய்யும் அனைத்தையும் நம்ப முடிகிறது. நடிப்பும் நிச்சயம் குறை சொல்ல முடியாத விதத்தில் உள்ளது. ஆதி என்பவர் ஸ்டார் இல்லை என்பதால், அந்த பாத்திரமே மனதில் நிறைகிறது. (ஆனாலும் விக்ரம் அல்லது சூர்யா நடித்திருந்தால் இந்த படத்தின் ரீச்சே வேறு என்றும் தோன்றுகிறது. அவர்கள் ஆதி அளவு உழைத்திருப்பது சந்தேகமே எனினும், அதிகளவு ரீச்சாகியிருக்கும்.
பசுபதி கள்வன் பாத்திரத்தை மிக அழகாக செய்துள்ளார். தேர்ந்த நடிகர் என்பதை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபிக்கிறார். ஆதிக்கு அடுத்து முக்கியத்துவம் உள்ள கேரக்டர் இது தான். “எவ்வளவோ ரகசியம் தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா உன்னை பத்தின ரகசியம் மட்டும் தெரியவே இல்லையே” என்று ஆதியிடம் சொல்லும் இடமாகட்டும், திருட்டுக்கு கூட்டி போகவில்லையென கோபிக்கும் மகனை சமாதானம் செய்வதாகட்டும், இறுதிக் காட்சியில் ஆதியிடம் பேசுவதாகட்டும்…மிக நிறைவாய் செய்துள்ளார். தமிழில் இந்த வருடத்தின் சிறந்த துணை நடிகர் விருது அநேகமாய் இவருக்கு தான்.
ஆதியின் மனைவியாக தன்ஷிகா! ‘பேராண்மை’யில் அறிமுகம் ஆனவர். அப்போது அதிகம் கவரா விட்டாலும் தற்போது தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டு விட்டார். பெண்கள் அதிகம் வெள்ளையாய் இருந்தாலும் அதிக கருப்பாய் இருந்தாலும் பிடிப்பதில்லை. கோதுமை நிறம் தான் அழகு தன்ஷிகா அந்த கேட்டகரியில் வந்து விடுகிறார். பின்னணி குரல் எடுத்தவுடன் சொதப்பினாலும் போக போக பழகிடுது.
ஆதி வாழப் போவது முப்பதே நாள் எனும் போது “உன்னிடம் பிள்ளை பெத்துக்குரேன் அவனை பார்த்தே மிச்ச வருஷம் வாழ்வேன்” என சொல்லி ஆதியை மணக்கிறார் இவர். ஆதியோ சாக போகிறோமே என வெறுப்பில் திரிகிறார். இவரை கண்டு கொள்ளவே இல்லை. இருந்தும் அவரை தன் வழிக்கு கொண்டு வருகிறார் தன்ஷிகா. பத்து மாசத்தில் பிள்ளை தயார்! என்ன இருந்தாலும் கிளைமாக்சில் 9 வருஷத்துக்கு பின் ஆதியை அப்படியே சிறிதும் மாற்றமின்றி காட்டிய இடத்தில் இயக்குநர் சறுக்கி விட்டார்.
அர்ச்சனா கவி: பசுபதி தங்கையாக, ஆதியை ஒரு தலையாய் காதலிப்பவராக வருகிறார் இந்த மாடர்ன் பெண், இத்தகைய ஒரு கிராமத்து பாத்திரத்தில், இவரை நன்கு நடிக்க வைத்தது ஆச்சரியம். திருமுருகன்: ‘களவாணி’யில் வில்லன் இதில் நண்பனுக்காக பலியாகும் நபராக வருகிறார். இறக்க போகும் போதும் சிரிப்புடன், நண்பனை பற்றி உயர்வாய் பேசி விட்டு இறக்கும் தருணத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்குரியது.
சிங்கம்புலி: இவர் வந்தவுடன் தியேட்டரில் வந்த விசிலை பாக்கணுமே, இவருக்கு இவ்ளோ ஆதரவா என ஆச்சரியமா இருந்தது. “என் பொண்டாட்டி மேலே கண் வச்சான். அதைக்கூட பொறுத்துக்கலாம். என் மச்சினிச்சி மேலே கண்ணு வைக்கிறாம்பா என் மச்சினிச்சி மேலே அவன் கண்ணு வைக்கலாமா? நீயே சொல்லு” எனும்போது தியேட்டரே ரணகளமாகிறது.
ஆதி அம்மாவாக: T.K. கலா (பின்னணி பாடகி). வழக்கமான சினிமா அம்மா. ஆதி – தன்ஷிகா திருமணம் ஆன இரவு தன்ஷிகா உடன் இவர் பேசும் இடத்தில் மட்டுமே கவர்கிறார்.
கரிகாலன்: கஸ்தூரி ராஜாவின் ‘சோலையம்மா’வில் நெகடிவ் ஹீரோவாக நடித்த கரிகாலனுக்கு வில்லன் வேடம். வித்தியாச தலை முடியுடன் ஆதியை தேடி அலைகிறார். கடைசியில் இவரின் புன்னகை பக்கா வில்லத்தனம்.
அஞ்சலி: ஓ! காட்! இது அஞ்சலியா? ஒத்துக்கவே முடியாது! ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு முன்பே இப்படத்தில் இவர் நடித்த காட்சிகள் எடுத்திருப்பார்கள் போலும். செம குண்டு!
இசையமைப்பாளர் கார்த்திக்கின் பாடல்களும் சரி, பின்னணியும் சரி அவ்வளவாக சோபிக்கவில்லை. இது போன்ற படங்களுக்கு பின்னணி இசை மிக முக்கியமான ஒன்று. அதில் சிறப்பானதை கொடுக்க தவறிவிட்டார்கள். ஒளிப்பதிவு பிரம்மாண்டம், திரைக்கதை பாடல் கட்சிகள் தவிர வேறெங்கும் தொய்வில்லாத திரைக்கதை. அரவான் மிக நல்ல படம்.
அன்பே உன் நினைவுச் சுவடுகளை
நித்தம் நித்தம் சுமந்து கொண்டு
உன் நினைவலையில் வாடுகின்றேன்
நீ என்னை காதலிக்கும்- போது
நீ உயிர் ஊட்டி வார்த்த வார்த்தைகள்
ஒவ்வென்றும் என் அடி நெஞ்சை
ஒரு கனம் புரட்டிப் பார்க்குது-அன்பே
நீ உயிருடன் இருக்கும் போது
என் நினைவுகள் தினம் தினம்
உன்னிடம்- ஆனால்
எனக்காக நீ வரைந்த
வாழ்துமடல்-சுவடுகள்லுடன்
தினம் தினம் வாழ்கின்றேன்,அன்பே
நீ காதல் நினைவுக்காக-வரைந்த ஓவியத்தையும்
நீ எனக்கு பேனாவின் கண்ணீர்த்துளியால்
எழுதிய கவிதையை-நித்தம் நித்தம் பார்த்து
என் கண்ணீரில் இருந்து
கண்ணீர் துளிகள் வடியுதடி-அன்பே
அன்பே நீஎன்னை விட்டு
நிரந்தரமாய் போய் விட்டாய்
ஆனால் உன் ஆத்மா
என்னைப் பற்றி நினைக்கும்
என் காதலன் வேறுமனம் செய்து-விட்டானா?
என்ற ஞாபக நினைவலைகள்
உனக்குள் ஊசலாடும்
அப்படியில்லை,வாழ்ந்தால் உன்னோடுதான்
என்ற உறுதி மொழியை தினம் தினம்
உன் கல்லறையில் பூசித்து வருகின்றேன்-அன்பே
நீ கண்னுக்கு தூரமாய்
என் கண்னுக்கு-உயிராய்
கல்லறையில் வாழ்கிறாய்
உன் நினைவுகள் எனக்கு-சுமையில்லை
உன்கல்லறை சுவருடன்
வாழ்கிறேன்-அன்பே
என் இமைகள் மூடும் போதெல்லாம்
உன் நினைவுகள்-என்னை
தென்றலாய் வந்து தாலாட்டுதே-அன்பே
என் கற்பனைகள் உதயமாகும் போதெல்லாம்
உன் அன்பேன்னும் சுவடுகள்-மட்டும்
எனக்கு ஆறுதலாய் -உள்ளது அன்பே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிட்டுக் குருவி போல-சுதந்திரமாய்.
வாழ்ந்து வந்த எம் தமிழ் இனம்-இன்று
சிதர்உண்டு சிதையுண்டு
சின்னாபின்னமாகினார்கள்
சுதந்திரக் காற்றினை ஓர் அளவு.
சுவாசித்து வாழ்ந்த எம்மினம்
இன்று வாழ்விடம் இழந்த
அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
வாழ வேண்டும்மென்று -பிறந்த
எம் வாலிபர்கள்-என்ன பிழை செய்தார்கள்.
செய்யாத தப்புக்கு சில ஆண்டு சிறைவாசம்.
அந்த கொடுமையின் வேதனையை பாருங்கப்பா?
சிறைவாசம் வாடும் பிள்ளையை-பார்க்க.
ஈன்றெடுத்த தாயானவள்-கையில் பணம் இல்லாமல்.
பிச்சை எடுத்து பார்க்கப் புறப்படுகின்றால்
பெற்ற பாசம் சும்மா விடுமா???
எங்கள் தமிழ் இனம் அன்றும்- இன்றும்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
ஏர் பிடித்து நிலம் உழுது
வாழ்ந்த எம் தமிழ் இனம்
இன்று பாத்திரம் ஏந்தி-ஒருசான் வயிற்றுக்கு
வீதி ஓரமாய் நின்று பிச்சை எடுக்கும்
காலம் வந்து விட்டதய்யா………….
இந்த அவல வாழ்கைக்கு தள்ளப்பட்டு விட்டோமே.
எம் தமிழ் இனம் வந்தாரை வா என்று
அழைத்து விருந்தோம்பும் பண்பு.
கொண்ட எம் தமிழ்இனம்-இன்று
வா.வா.என்றுநம்ம அழைத்தவர்கள்-இன்று.
நமக்கு விருந்தோம்பல் செய்கின்றார்கள்.
இது காலத்தின் தண்டனையா?-அல்லது.
இறைவனின் தண்டைனையா?
அன்றும் இன்றும் எம் தமிழ் இனம்
வாழ்விடம் இழந்த அனாதைகள் ஆகிவிட்டார்கள்.
இதையும் தட்டிக் கேட்க -யாரும் இல்லையா?????
அடிமைகள் போல வாழ்விடம்
இழந்த அனாதைகள் போல வாழ்கிறார்கள்.
எம் தமிழ்இனம்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விழியோரம் கண்ணீரைச்-சுமந்து
வலியோடு தாங்கி
வலியோடுவயிற்றில்-நீ சுமந்தாய்.
உன் கருவறையில் நான் -வாழும் போது
எட்டி எட்டி எத்தனை தடவை-உதைத்திருப்பேன்
அந்த வலியையும்-விழியோரம் தாங்கி.
கண்ணீர் வடிய வடிய
பொறுமை காத்தாயே-தாயே.
உன் வயிற்றில் இருந்து-பூமா தேவியில்
குதித்தவுடன் நீயடைந்த இன்பம்-மேல்தாயே
உன் பிள்ளை கண்ணீர் வடிக்கையில்
உதிரத்தை பாலாக்கி-பசி தீர்த்தாயே
உன் பிள்ளையின் பசி போக்கி
மழளை மொழியில்-சிரிக்கையில்
உனக்கு. பசியே வரமாட்டாது தாயே.
விழியோரம் கண்ணீர் வடித்து.வடித்து.
வலியோடு என்னை சுமந்தாய்.
என்னை இளமை வரை வளர்த்தாயே-தாயே.
இரவென்றும் பகல்என்றும் பாராமல்
நீ.பட்ட துன்பத்தை நான் அறிவேன்- தாயே.
நீ என்னை இளமை வரை வளத்து விட்டாய்
ஆனால் உன்னை முதுமை வரை-பார்க்க
நீ இருக்க வில்லை தாயே.
இப்போ உன் மகன் உயர் பதவியில்-இருக்கின்றேன்.
அதைப் பார்க்க நீ இல்லை -தாயே
நீ உயிருடன் இருந்திருந்தாள்
உன் மகனை பார்த்து-நீ
ஆனந்த புன்னனக பூத்திருப்பாய்.
உன் நினைவுகளை சுமந்து -கொண்டு
தனிமையில் வாழும் போது.
என் விழியோரம் வலிகள்-தாங்கிய
கண்ணீ வடிக்குதம்மா.
என் துன்பத்தை அறிய-நீஇல்லை தாயே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-