உலகின் நான்கு பக்கமும் அதிர்ந்தது-அன்று
உலகில் உள்ள மனித குலம் மிதந்ததும்-அன்று
மாட.மாட கோபுரம் சாய்ந்ததும்-அன்று
தொலைத் தொடர்பு அற்றதும்-அன்று
மின்சார கோபுரம் சாய்ந்ததும் -அன்று
பிஞ்சு உள்ளம் தத்தளித்ததும்-அன்று.
பெரியோர்கள் சிறியோர்கள் மாண்டதும் -அன்று
மதி கெட்டு நின்றது மனித குலம்-அன்று
சந்தோசகாற்று.வீசிய பூமி எங்கும் -அன்று.
உலகெங்கும் சோக கீதங்கள் வீசியது
உயரத்தில் பறந்த உலக நாட்டுக் கொடிகள்
அரைக் கம்பத்தில் பறந்தது -அன்று
இலட்சியத்தை முழு வீச்சைக் -கொண்டு.
பள்ளிக் கூடம் சென்ற கள்ள கபடமற்ற.
மணவ உள்ளங்கள் தண்ணீரில் மூழ்கியது-அன்று
உலகில் வழும் கிறிஸ்த்தவ-உறவுகள்
பண்டிகையை கொண்டாட ஆடம்பரமாய்
இருந்தது-அன்று
சொல்லாமல் கொள்ளாமல்-பூகம்பம் வந்தது
சுமத்திரா தீவினிலே-அன்று.
பூமி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டது-அன்று
சாதி மத பேதமின்றி-அன்று
உயிரை காவு கொண்டது-அன்று
அதுதான் சுணாமி(ஆழிப் பேரலை)
ஆழிப் பேரலையின் வடுக்கள்-ஒவ்வெரு
ஆண்டும் வரும் கிறிஸ்மஸ் நாளில்-நினைவுவரும்.
மாண்டவர்கள் மீண்டும் வருவதில்லை.
வாழ்கின்ற மனித குலம்
மனித நேயத்துடன் வாழ்ந்தாள்
மனித குலத்தின் வாழ்வு சிறக்கும்.
அன்றைய வடுக்கள் மனித குலத்தின்.
நெஞ்சை உறைய வைத்ததும்-அன்று.
உலகை அதிர வைத்ததும்-அன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-