வான வெளி ஓடையில்
வாழ்விழந்த பொம்மையாய்
வாழ வேண்டிய நிலை வந்ததடி
வாழ்வா?சாவா? என்று இருக்கையில்
துடுப்பு இழந்த ஓடத்துக்கு
துணையா துடுப்பு போட-வந்தாயடி
பங்குனி வெயிலில்
பகலவன் கொட்டத்தில்
பாதியுள்ளம் வெகுதடி
பார்க்க நீ இல்லையடி
அழுத கண்ணீரை யார்-துடைப்பார்
வெந்த மனசு நெந்து நெந்து-போனதடி
வாழ்வென்ற போர்க்களத்தில்
வாழவேண்டுமென்று
நான் குதித் தேன்
வாழ வேண்டாம்மென்று
விதி வந்து தடை போட்டதடா?
விதியை மதியால் வெல்ல-முடியாமல்
மதி கேட்ட மனிதனாய்-நின்று
கண்ணீர் வடிக்கின்றேன்
அழுத கண்ணீரை யார் துடைப்பார்
உன் வரவுக்காய்
என் உள்ளம் ஏங்குதடி
எப்போது வருவாயடி
என் அழுத கண்ணீரை-துடைக்க
உன் அன்புக்காய் ஏங்கித் தவிக்கும்.
ஒரு இதயத்தின் உள்ள ஏக்கமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் உறவுகலே
இரவுக்கும் பகலுக்கும் இடையில் புரட்சி செய்து என் வாசக உள்ளங்களுக்கு
அழுத கண்ணீரை யார் துடைப்பார் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கவிதையை படித்த பின்
அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை பதியுங்கள் .
-நன்றி-
-என்றும் அன்புடன்-
-ரூபன்-