57 comments on “ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்

 1. புலமை என்பது
  போட்டிகளில் தான் மின்னும்
  போட்டிகள்
  புலமைசாலிகள் பலரை மின்ன வைக்கும்
  நடுவர்கள் பாடு திண்டாட்டம் தான்…
  எப்படியோ
  வெற்றியாளர்கள் தெரிவு முடிந்ததே!
  வெற்றியாளர்கள், போட்டியாளர்கள்
  எல்லோருக்கும் வாழ்த்து!
  போட்டியை நடாத்திய
  பெரியோன் ரூபன் அவர்களுக்கு
  கோடி நன்றி – அவரே
  சிறந்த படைப்பாளிகளை
  அரங்கேற்ற முன்நின்றவரே!
  ரூபன் அவர்களுக்குத் துணை நின்ற
  எல்லோருக்கும் நன்றி!

 2. வாழ்த்துக்கள்! இது போன்று படைப்பாளிகளை ஊக்குவித்து, பரிசு வழங்கி பாராட்டி, சீராட்டி பிறர் எழுத்தையும், ஆர்வங்களையும் வளர்க்கும் உங்களது இந்த சேவை மிகமிக உயர்வானது! பாராட்டப்படவேண்டிய ஒன்று! பெருமையாகவும் இருக்கிறது!. உங்கள் இந்த சேவை தொடர எங்கள் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்! தொடருங்கள்! வெற்றி பெற்ற அனைவருக்கும் மட்டுமல்ல, ஆர்வத்துடன் கற்பனையைத் தட்டிவிட்ட அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

 3. அருமை நண்பரே,
  வணக்கம். போட்டி நடத்தி வாய்ப்பினை ஏற்படுத்தியமைக்கு நன்றி.உங்களின் அறிமுகம் அதனால்தான் கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். அன்புடன் – ரவிஜி…

 4. வணக்கம்

  வண்ணத் தமிழ்மணக்க வார்த்த கவிபடித்து
  எண்ணம் பெருகும் இனித்து!

  கற்றவா் போற்றும் கவிமன ரூபனைப்
  பெற்றவா் பெற்றனா் பேறு

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

 5. அன்பின் ரூபன்…
  வணக்கம்.
  மிக அருமையானதொரு காரியத்தை மிகவும் சிரத்தை எடுத்துச் செய்து முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் உங்களுக்கு,

  உங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உதவி செய்யும் எண்ணம் கொண்ட தனபாலன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்…

  சிறப்பாக கவிஞர்களைத் தேர்வு செய்த ஐயா, அம்மா, அக்கா மூவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  தொடர்ந்து கலக்குங்க…
  வாழ்த்துக்கள் ரூபன்.

 6. வெற்றி பெற்ற அனைவருக்கும் நல வழ்ழ்த்துக்கள். இந்தப் போட்டியை நடத்தி பரிசு வழங்கி பாராட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.இந்த சிந்தனை தோன்றியவுடன் அதை உண்டே செயல் படுத்தத் துணிந்து சொந்தப் பணத்தை செலவு செய்து போட்டியை அறிவித்து நல்ல நடுவர்களிடம் அப்பணியை ஒப்படைத்து விரைவில் முடிவினையும் அறிவித்து சாதித்த ரூபனை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
  மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ரூபன்
  சிறப்பான கவிதைகளை தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கும் நன்றிகள்

 7. போட்டியில் இரண்டாமிடம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளித்தது!

  முதற்கண் இந்தப் போட்டியை ஏற்பாடு செய்த திரு ரூபன் அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றி! சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பது போல் இத்தனைபேரை எழுதத் தூண்டிய அவருக்கு என் சிரந்தாழ்ந்த வணக்கம்!

  திரு திண்டுக்கல் தனபாலன் அவர்கள் எனது வலைப்பூவிற்கு தொடர்ந்து வருகை தந்து எனக்கு ஊக்கமளித்து வருபவர். அவரின் பணி இந்தப் போட்டியைப் பொறுத்தவரை மகத்தானது. அவரது படைப்புகளில் திருக்குறள் மற்றும் பொருத்தமான பாடல்களை மேற்கோள் காட்டி எழுதும் விதம், கேள்வியும் நானே! பதிலும் நானே! என அமைக்கும் விதமும் கண்டு வியந்து போயிருக்கிறேன்! ஐயா! தங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!

  அடுத்ததாக நடுவர்கள் மூவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்! சிரந்தாழ்ந்த வணக்கங்கள்! இத்தனை படைப்புகளிலிருந்து மூன்றினைத் தேர்வு செய்வதென்பது
  மிகவும் கடினமான பணி!

  பங்குபெற்ற அனைத்து திறமைசாலிகளுக்கும் என் பாராட்டுகள்! பரிசு பெற்ற மற்றவர்களுக்கும் என் வாழ்த்துகள்!காரஞ்சன்(சேஷ்)

  • வணக்கம்
   ஐயா

   தங்களின் வருகையும் கருத்தும் எனக்கு ஒரு உந்த சக்தியாக இருக்கும் என்பது ஐயமில்லை… தனபாலன்(அண்ணாவையும்) நடுவர்கள் 3பேரையும் வாழ்த்தி கூட என்னையும் சேர்த்து வாழ்த்தி அத்தோடு பரிசு பெற்ற அனைவருக்கு வாழ்த்து சொல்லிய விதம் அருமை கருத்துக்கு மிக்க நன்றி ஐயா

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

 8. இது போன்றதொரு போட்டியை செவ்வனே நடத்தி சீரோடு முடித்த ரூபன் மற்றும் தனபாலன் அவர்களுக்கு நன்றிகள். போட்டியின் நடுவர்களுக்கும், ஊக்கமும் பாராட்டுகளும் அள்ளித் தந்தோர்க்கும் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

 9. இதில் நானும் கலந்து கொள்ள எண்ணி எழுதியவைகள் உரிய நேரத்தில்
  பிரசுரிக்கமுடியாமல் போய்விட்டது
  ஹாஸ்பிட்டல் வாசத்தை சுவாசித்துக்கொண்டிருந்ததால்..

  இதில் பங்கு பெற்றுவெற்றி வாகை சூடியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
  இதனை நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவிக்க எண்ணிய சகோதரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

 10. பரிசு பெற்ற அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் இந்தப் போட்டியில் நானும் பங்கு பெற்றதில் பெருமையடைகிறேன்
  ஆக்கபூர்வமான போட்டி வாழ்க்கைக்கு அவசியம்தான் இதைச் சிறப்பாக நடத்திய திரு ரூபனுக்கு வாழ்த்துக்கள்

  • வணக்கம்
   அம்மா
   வெற்றி தோல்வி என்பது ஒவ்வொரு மனிதனும்சந்திக்கும் காட்சி முதல் படி தோல்வி என்றால் இரண்டாவது படி வெற்றி என்பது உறுதி… தைப்பொங்களுக்கு ஒரு போட்டி வைப்பேன்….கட்டாயம் தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

 11. தமிழ் மீது கொண்ட அளவிடமுடியா ஆர்வத்தால்
  போட்டி அறிவித்ததிலிருந்து
  முடிவு அறிவிக்கிறவரை தொடர்ந்து
  தொய்வின்றி ஆர்வமுடன் செயல்பட்டத் தங்கள்
  திறனும் அடக்கமான பண்பும்
  மிகவும் மனம் கவர்ந்தது
  தங்கள் தொடர்பு கிட்டியது எனக்குக் கிடைத்த
  அரிய பாக்கியமாகவே கருதுகிறேன்
  வாழ்த்துக்களுடன்…

 12. வெற்றி பெற்ற அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்…! எடுத்த கருமத்தை இனிது நடத்தி முடித்த தம்பி ரூபனுக்கும் அன்பு கலந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
  அதற்கு ஒத்தாசையாக இறுதி வரை இருந்து சிறப்பான கவிதைகளை தேர்ந்தெடுத்த ரமணிஐயா அவர்களுக்கும்,ரஞ்சனி அம்மா, சகோதரி சசிகலா அவர்களுக்கும், சகோதரன் தனபாலு அவர்களுக்கும் நன்றியும்,வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்
  அனைவரும் தம்பணியை செவ்வனே செய்து முடித்தது சிறப்பே. இதில் நானும் பங்கு பற்றியதில் மிகுந்த மகிழ்ச்சியே.

  • வணக்கம்
   இனியா……
   தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது
   நடுவர்கள் தனபாலன்(அண்ணா) மற்று என்னையும் சேர்த்து வாழ்த்திய உங்களுக்கு நன்றிகள் பல…..
   வெற்றி தோல்வி என்பது மனிதனின் வாழ்க்கைப் பயணத்தில் குறுக்கிடுவது வழக்கம்… முதல் படி தோல்வி என்றால் இரண்டாம் படி வெற்றி என்பது உறுதி… போட்டியில் கலந்து கொண்டது பெரிய விடயம்..அல்லவா..?…நன்றி….

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

 13. அன்பு சகோதருக்கும் வணக்கம்.
  மாபெறும் போட்டியில் வெற்றி பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.
  போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.
  இணைய உலகம் வியக்கும் வகையில் ஒரு கவிதை போட்டியை திறம்பட நடத்தி முடித்தமைக்கு எனது அன்பான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களுக்கு பலவகையிலும் உறுதுணையாக இருக்கும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், நடுவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

 14. வெற்றி பெற்ற அனைத்து நண்பர்கட்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுதல்களும்.

  நல்லதோர் போட்டியை நடத்திய தங்களுக்கும் திரு. திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  இத்தனை போட்டியாளர்கள் மத்தியில், எனது படைப்பையும் பரிசுக்குரியதொன்றாய் தேர்வு செய்து, மேலும் பல ஆக்கங்களைப் படைக்க ஊக்கமளித்த நடுவர்கள் திரு.ரமணி ஐயா, திருமதி.ரஞ்சனி அம்மா மற்றும் சகோதரி சசிகலா மூவருக்கும் எனது நன்றிகள்.

 15. வெற்றி பெற்ற அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…

  திரு. ரூபன் சார் அவர்களுக்கு இது போன்ற தங்களின் தமிழ் மொழி மீது கொண்ட அன்பினால் நடத்தப்படும் போட்டி என்னை போன்றவர்களுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. அதற்கு மிக்க நன்றி.

  இது போன்றதொரு போட்டி நடைபெறுவதை எனக்கு தெரியப்படுத்தியும், உங்களுக்கு பக்கபலமாகவும் விளங்கும் திரு. தனபாலன் சார் அவர்களுக்கும் எனது நன்றி.

  உங்கள் இந்த அறிய முயற்சிக்கு உறுதுணையாய் இருந்த நடுவர் பெருமக்களுக்கும் எனது நன்றிகள்.

  நன்றி.

  நட்புடன்,
  நடராஜன் வி.

  • வணக்கம்
   ஐயா
   தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது…
   தங்களின் கவிதையும் தேர்வானது எனக்கும் மிக்க மகிழ்ச்சி…
   அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் பல….
   உங்கள் வலைப்பூவில் தொடர்ந்து எழுதுங்கள்….

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

 16. தங்களின் தமிழ் ஆர்வம் எங்களையும் இந்த அற்புதப் போட்டியில் பார்வையாளராக இருக்க வாய்ப்பளித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி சகோ.
  போட்டியில் கலந்து கொண்டஅனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவரின் எழுத்துமே அழகிய நல்முத்துக்கள் எதை எடுக்க எதை தேர்வு செய்ய என்று மிகவும் குழம்பியே போனோம். எனினும் ஒரு சிறு நூலிழை வேறுபாடு இருக்க நடுவர்கள் 3வரின் தேர்வும் ஒன்றாக இருக்கும் படி அமைந்த பகிர்வுகள் தேர்வு செய்யப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு. நடுவர்களுக்கும் இப்போட்டியை சிறப்பாக நடத்திய தனபாலன் சகோதரருக்கும் சகோதரர் ரூபனுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • வணக்கம்
   சகோதரி
   தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் உறவுப்பாலம் கிடைத்தது அத்தோடு கவிதைப் போட்டிக்கு நடுவராக தலைமை தாங்கியும் உள்ளிர்கள் உங்ளையும் ரமனிஐயா.ரஞ்சனிஅம்மா.தனபாலன்அண்ணா ஆகியயோரை என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிர்கள்…நன்றிகள்….பல…பல..
   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

 17. அருமை! சிறந்த நிறைவான வெற்றியாளர் தெரிவுகள்!

  *** வெற்றியாளர்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்!***

  சகோதரரே!.. உங்களின் அளப்பரும் முயற்சிக்குக் கிடைத்த நல்ல வரவேற்பும் நிறைந்த அங்கீகாரமும் இது!
  மிகுந்த முயற்சியுடன் கவிஞர்களை ஊக்குவித்த
  உங்கள் உன்னதமான பண்பு மிகச் சிறப்பு!

  உங்களுக்கும் உடனிருந்து உங்களுக்கு உதவிய சகோதரர் தனபாலனுக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!

  நிறைந்த போட்டிக் கவிதைகளை ஆய்வு செய்து
  வெற்றியாளர்களைத் திறம்படத் தெரிவு செய்து
  உங்களுடன் தங்கள் பணியைச் சிறப்புடனாற்றிய
  நடுவர்களுக்கும் என் அன்பு வணக்கமுடன் வாழ்த்துக்களும்!..

 18. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்! இத்தனை திறமைசாலிகள் இடையில் எனக்கு ஒரு பரிசு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி! நடுவர்கள் ரமணி ஐயா, ரஞ்சனி அம்மா மற்றும் தோழி சசிகலா மூவருக்கும் எனது நன்றி! போட்டி நடத்திய உங்களுக்கும் திரு.தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி!

 19. வணக்கம்
  என் வாசக நெஞ்சங்களே
  இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டியில் மகுடம் சூட்டிய வெற்றியாளர்கள்)
  என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(பதிவைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  • தீபாவளியை முன்னிட்டு கவிதைப்போட்டியை அறிவித்து மிகச்சிறப்பாக நடத்திய நண்பர் ரூபனுக்கும், நடுவர் குழுவினர்களுக்கும் இதில் பங்கு பெற்ற அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

   போட்டியில் வெற்றிபெற்ற தோழமைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் அனைவரின் எழுத்து மழை தொடர வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 🙂

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s