52 comments on “பெற்றவளின் ஓர் அழுகை

  1. பஞ்சடைத்த என்னுள்ளம்
    நெஞ்சடைத்து போகுதோ….
    உன் அம்மாவின் கூக்குரல்
    விண்னுக்கு கேட்கிறதா மகனே!//
    மகனை பிரிந்த தாயின் கதறல் மனதை பிழிகிறது.
    இந்த நிலை எந்த தாயுக்கும் இனி வரக்கூடாது என்று கடவுளை வேண்டச்சொல்கிறது.

  2. ஒருதாயின் பாசப்பிணைப்போடு, தேசப்பிணைப்பினையும் சேர்த்தே ஒலிக்கிறது சோகம்.
    என் அம்மாவின் புத்திரசோகம் கண்முன் ஓடி மறைந்தது.
    ஓலங்கள் கூட உணர்ச்சிப் பிழம்பாய் கண்முன் நிற்கிரது.
    பனிக்கும் கண்கள்தான் இதன் பின்னூட்டம். நன்றி ரூபன்

  3. ஊனுயிர் ஈந்த உணர்வோடு தாயவள்
    தானுயிர் தாங்கிடுமோ சொல்!

    மனதை உருக்கிடும் வலிமிக்க கவிவரிகள் சகோ!..

    தாளமுடியாத் துயரம் தாங்குமோ இன்னும்…

  4. வணக்கம் சகோதரா,
    ஒரு அம்மாவின் மனதை
    அவளின் மீள முடியா துயரத்தை வார்த்தைகளால்
    சொல்ல முடிந்த உங்களால் பிற்காலத்தில்
    தந்தைக்கு தந்தையாய் தாய்க்கு தாயாய்
    தாயுமானவராய் இருப்பீர்கள் என்பதில்
    எள்ளளவும் சந்தேகமில்லை!!

  5. தீபம் ஏற்றும் நாளில்
    தீராத துயரங்கள்

    பஞ்சடைத்த என்னுள்ளம்
    நெஞ்சடைத்து போகுதே ….

    இந்த வரிகள் வலிக்கத் தான் வைக்கிறது. ரசித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்.

    மண்ணின் மைந்தர்கள் என்றும்
    நம் கண்ணில் கரைந்திடுவர்
    மனதோடு வாழ்ந்திடுவர்.

  6. அன்பு சகோதரருக்கு வணக்கம்…
    தாயின் வேதனையும், கண்ணீரையும் என் கண்களை நனைத்தது. அற்புதமாக உணர்வுகளை கவியாய் வடித்த விதம் கவர்கிறது சகோதரர். நிச்சயம் தாயின் மனம் அறிந்து நன்மகனாய் நீங்கள் இருப்பீர்கள் என்பது தங்கள் எண்ணங்களில் பளிச்சிடுகிறது. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே..

  7. என்னே அருமையான கவிதை!!!! தாயுள்ளத்தின் வேதனையும், கண்ணீரும் மனதை உலுக்கியது! இது போன்று, எத்தனை தாய்களின் கண்ணீர் தமிழ் பூமியை நனைக்கிறதோ?! உங்கள் எழுத்துக்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!!

  8. வரலாற்றை ஒருபோதும்-எம்மினம் மறக்காது
    துன்பங்களை சுமந்தவன்
    துயரங்களை எப்போதும்-நன்கறிவான்
    உன் வித்துடல் சங்கமித்த-மண்ணில்
    புதிய வரலாறு உருவாகும்

    நம்பிக்கை விதைக்கும் வரிகள்..!

  9. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(பெற்றவளின் ஓர் அழுகை)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்