
போட்டிக்கான தலைப்பு :
1. இணையத்தின் சமூகப் பயன்பாடு.
2. இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்.
3. போதைப் பழக்கமும் அடுத்த தலைமுறையின் முன்னேற்றமும்.
4. உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
5. தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
போட்டியின் விதிமுறைகள் :
1. இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருந்தால் நல்லது.
2. ஒருவரே எல்லாத் தலைப்புகளிலும் கட்டுரையை தங்களின் தளத்தில் பதிவிடலாம். பதிவர்கள் அல்லாதவர்கள் அனுப்பலாம். ஆனால் ஒரு தலைப்பில் ஒரு கட்டுரை மட்டுமே ஏற்கப்படும்.
3. கட்டுரையை தங்கள் தளத்தில் 10/01/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. பதிவர் அல்லாதவர்களும் எதிர்காலத்தில் வலைத்தளத்தை தொடங்க ஊக்கம் பெறலாம் என்பதால் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். கட்டுரைகளை படமாக (jpg) எடுத்து அனுப்பாமல் யுனிகோடு தமிழ் லதா (Unicode Tamil Font) எழுத்துருவில் அனுப்ப வேண்டும்.
5. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
6. உங்களின் தளத்தில் கட்டுரையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : svramani08@gmail.com, rupanvani@yahoo.com, dindiguldhanabalan@yahoo.com, pandi29k@gmail.com
நடுவர்கள் விபரம்

பரிசுகள்
முதல் மூன்று பேர்களுக்கு : பதக்கம் + சான்றிதழ்
ஆறுதல் பரிசு ஏழு பேர்களுக்கு : சான்றிதழ்
புத்தகப் பரிசு : நடுவர் குழுவை ஒத்த முடிவுகளைத் தேர்வுசெய்யும் மூன்று வாசகர்களுக்கும் பரிசு உண்டு. அவர்கள் விரும்பும் நூல்களை திரு. முத்து நிலவன் ஐயா அனுப்புவார்கள். அதனால், ஒவ்வொரு பதிவரின் கட்டுரையில், நீங்கள் இடும் சிறப்பான பின்னூட்டங்களும் கருத்தில் கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்ற முறை தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அனுப்பிய சான்றிதழ் உங்கள் பார்வைக்காக :
பெருவாரியான எண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ் வளர்க்க வாரீர் வாரீர் என்று வரவேற்கிறோம்…! மேற்கொண்டு விளக்கம் தேவையெனில் தயங்காது மேலே குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளுங்கள்… கருத்திடும் அன்பர்கள் தங்களின் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…
குறிப்பு-எனது புதிய வலைப்பூவுக்கு தங்களின் தளத்தில் இணைத்து ஆதரவு தாருங்கள்
http://tamilkkavitaikalcom.blogspot.com
Nandri Nanpare, kaala neettippu 21.02.2014 yenpathai therinthu konden ..
Anbudan Nanbarukku,
Vanakkam, katturai pottiyil kalanthukollum poruttu dtp centeril thattachu seithathil harddisk failure anathal naalai (11.01.2014) Anuppalaama?
Anbudan Nanbarukku,
vanakkam. katturai pottiyil. panguperamporruttu dtp centeril thattatchu seithathil kaniniyin hard disk repair. Enave katturaiyai nalai (11.01.2014) anuppalaama?
மீண்டும் சிறப்பான முயற்சியில் இறங்கியுள்ளீர்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
தங்கள் உயர்ந்த பணிக்கு
எனது வாழ்த்துகள்!
வணக்கம் ரூபன்
அருமையான முயற்சி சிறப்பாக நிறைவேற என் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல நோக்கம் என்னை கவர்ந்தது.
நல்ல தலைப்புக்கள். அதில் கலந்து கொள்ளும் நடுவர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி….!
வணக்கம் அண்ணா…
சிறப்பான தலைப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.. தங்கள் முயற்சி பாராட்டிற்குரியது… வாழ்த்துக்கள்…
தீபாவளி போட்டியில் தான் கலந்து கொள்ள இயலவில்லை. இதில் கட்டாயம் கலந்துகொள்வேன் என நம்புகிறேன்… பாராட்டுக்கள்…
அருமையான தலைப்புகள். மிகவும் சீரிய முயற்சி
போட்டி வெற்றிபெற வாழ்த்துகின்றேன்
அருமையான தலைப்புகள்ஐயா
போட்டிகள் சிறப்பாக நடைபெறவும்
வெற்றி பெறவும் மனமார்ந்த வார்த்துக்களைத்
தெரிவித்து மகிழ்சின்றேன்
அன்பு சகோதரருக்கு வணக்கம்
போட்டி குறித்த நடுவர்கள் அறிவிப்பும், தலைப்புகள் குறித்த அறிவிப்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி தொடர்பான பணிகளில் தங்கள் பங்களிப்பைக் கண்டு உண்மையில் மெய்சிலிர்த்து போனேன் சகோதரர். நிச்சயம் போட்டி மிகச் சிறப்பாக நடந்தேறும் என்பது முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மிக அருமையான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவர்களுக்கும் அன்பான நன்றிகள். போட்டி பற்றிய அனைத்திலும் தனது முழு பங்களிப்பை அளித்து வரும், உற்ற துணையாக, ஆனிவேராக விளங்கும் சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பகிர்ந்த தங்களுக்கு எனது நன்றிகள். தங்களோடி இணைந்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து எல்லாவற்றிலும் இணைந்திருப்போம். நன்றிங்க சகோ…
valai thalam illaatha, pinnalilum thodangaathavargal indha pottiyil kalanthukollalaama..
வணக்கம்
ponmathu
தங்களின் வினாவுக்கான பதில் இதோ.
நிச்சயம் பங்கு பற்ற முடியும்.. வலைத்தளம் இல்லாவிட்டால் கட்டுரைகளை jpg.பயிலாக மின்னஞ்சலில் அனுப்பலாம்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Nallathu Nanbare.. Thankalukkum, indha panigalil thangalukku udhavum anaivarukkum enadhu nandrikalum vaazhthukkalum
Endrum Nandriyudan
ponmuthu
வணக்கம்
தங்களின் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது …
நீங்கள் புதிதாக ஒரு வலைப்பூ ஆரம்பித்தால் நல்லா இருக்கும் இது என்னுடைய கருத்து. தங்களின் கருத்து என்ன ?
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Anbudan Nanbarukku,
Vanakkam, katturai pottiyil kalanthukollum poruttu dtp centeril thattachu seithathil harddisk failure anathal naalai (11.01.2014) Anuppalaama?
இனிய வணக்கம் நண்பரே
படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக
அடுத்தடுத்து போட்டிகளை அறிமுகப்படுத்தி அதனை திறம்பட
நடத்தும் உங்கள் அன்பார்ந்த மனதுக்கு என்
நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
==
தகுந்த நடுவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும்
தேர்ந்தெடுத்திருக்கும் இந்த திருவிழா சிறப்புற நடந்தேற
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நண்பர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்.
எனது வலைப்பக்கத்தில் உங்கள் அறிவிப்பை எடுத்து இட்டிருககிறேன்.
தங்கள் முயற்சி வெற்றியடைய என் உதவி என்றும் உண்டு. வாழ்த்துகளுடன், நா.மு. வலைப்பக்கம் -http://valarumkavithai.blogspot.in/
நல்லதொரு செயல்!!! தலைப்புகள் அருமை!!
தொடருட்டும் உங்கள் கலைச் சேவை!!
வாழ்த்துக்கள் நண்பரே!!
வாழ்த்துக்கள் தங்களின் முயற்சி இதுவும் மிகச் சிறப்பாகத் தொடரட்டும் .
முடிந்தால் தைப்பொங்கலை முன்னிட்டு மற்றுமொரு கவிதைப் போட்டியினையும்
நிகழ்த்த ஆவனை செய்யுங்கள் சகோதரா .தைப் பொங்கல் தமிழர்களின்
முதன்மையான பண்டிகை இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில் கட்டுரையோடு
கவிதையும் கைகோர்த்துப் பயணிக்கட்டும் .இது எனது தாழ்மையான வேண்டுகோள் .
மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .
அசத்தி விட்டீர்கள் தம்பி…
வாழ்த்துக்கள்…
ரஞ்சனி நாராயணனின் வலையில் ஏதோ கட்டுரைப்போட்டி என்று பார்த்து வந்தேன்.
இந்த தலைப்பெல்லாம் எழுதற வயசு தாண்டிப்போயிடுச்சே அய்யா…
கட்டு சாதம் கட்டுவது எப்படி அப்படின்னு வேணா ஒரு
கட்டுரை எழுதலாம்.
அது இருக்கட்டும்.
உங்க வலைக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
இன்று தான் சாத்தியமாயிற்று. ர். நா. வுக்கு நன்றி.
உங்கள் வலை முகப்பு அழகு.
சுப்பு தாத்தா.
என்னுடைய தளத்தில் மறுபதிவு செய்திருக்கிறேன், ரூபன். உங்கள் முயற்சிகள் நல்லவிதமாக எல்லோருக்கும் பயன்தரும்படியாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள். இந்த கட்டுரைப் போட்டி நல்லவிதமாக நடக்க வாழ்த்துக்கள்.
Reblogged this on ranjani narayanan.
வாழ்த்துக்கள்!
எங்கள் ப்ளாக் பதிவில் இடது பக்க பத்தியில் இணைத்திருக்கின்றோம்.
வாழ்த்துக்கள் கூறி வரவேற்கிறோம்.
மிகச் சிறப்பான முயற்சி. வாழ்த்துகளும், பாராட்டுகளும். கலந்து கொள்ளப் போகிற அனைவருக்கும் வாழ்த்துகளும்.
அனைவரும் பங்கேற்கும்படியான நோக்கத்துடன்
இன்றைய சூழலுக்கான பிரச்சனைகளைத் தலைப்புகளாக்கி
மிகச் சிறந்த பதிவர்களை நடுவர்களாக்கி
பொங்கல் தின பரிசுப் போட்டிக்கு அழைப்பு விடுத்திருக்கும்
ரூபன் மற்றும் சக பதிவர்களுக்கும்
போட்டி சிறப்புறவும் என்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்