22 comments on “நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்……!

  1. நான் சிறிதுநாட்களாக வரவில்லை. அடடா.வாழ்த்து சொல்ல பார்க்கவில்லையே என்று தோன்றியது. எப்போதுமே வாழ்த்த நினைக்கிறேன். நான்காம் ஆண்டு என்ன எப்போதுமே உங்களுக்கு என் நல் வாழ்த்துகள். அன்புடன்

  2. வணக்கம் சகோதரர்
    நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். இணைய வானில் யாரும் தொட துணியாத உயரங்களைத் தொட்டு தங்களது எண்ணங்களை எழுத்தாக்கி பல சாதனைகள் நிகழ்த்த வாழ்த்துவதோடு தங்களோடு தொடர்ந்து பயணித்து உறுதுணையாக இருப்பேன் என்பதையும் மகிழ்வோடு தெரிவிக்கிறேன்.
    —————
    05/02/2014 அன்று பிறந்த நாள் கண்ட தங்களுக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்

  3. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது சகோதரருக்கு எனது அன்பான வாழ்த்துகள். தனது எண்ணங்களை எழுத்தாக்கி இன்னும் இணைய வானில் பறந்து யாரும் எட்ட முடியாத உயரங்களைக் காண வாழ்த்துவதோடு என்றும் உங்களோடு பயணித்து உறுதுணையாக இருப்பேன் என்பதையும் தெரிவித்து மகிழ்கிறேன். நன்றி சகோதரர்.
    ———
    05.02.2014 அன்று பிறந்த நாள் கண்ட தங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரர். வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று வளமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  4. வணக்கம் ரூபன் !
    நாலாவது ஆண்டில் எடுத்தடி வைக்க என் மனம் கனிந்த நல்லாசிகள்.

    எண்ணிய எண்ணம்
    எல்லாம் ஈடேற
    புகழோடு பொருளும்
    கை கூட என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்…..!

  5. என்றும் எழுது நண்பா!

    “நான்காம் ஆண்டில்
    நாலா புறமும் வருவேன்!” என்று
    இலகுவாகச் சொல்லிப் போட்டியள்…
    எழுதுகோல் ஏந்தியே
    பதிவுலகில் நடப்பதென்பது
    கூரிய கத்தி விளிம்பில்
    நடப்பது போலத் தான்
    இருக்குமென்பதை நானறிவேன்!
    என்றும் எழுது நண்பா…
    கடந்தது மூன்றாண்டு
    கற்றுக்கொண்டதோ
    முப்பதாயிரத்துக்கு மேல்
    இருக்குமென நானறிவேன்!
    நான்காம் ஆண்டில்
    நாலா புறமும் மட்டுமல்ல
    உலகின் எட்டுத் திக்காலும்
    தமிழ் பரப்பிப் புகழீட்ட
    எனது வாழ்த்துகள் ஐயா!
    “எண்ணித் துணிக கருமம்
    பின்
    எண்ணுவோம் என்பது இழுக்கு” என்று
    வள்ளுவன் கூறியதாக நினைவு – நானதை
    எழுதி வெளியிடு முன்
    பின்பற்றுவதன் நோக்கமே
    எமது எழுத்து
    எல்லோரையும் களிப்படைய வைக்கணும் – அதை
    நான் சரிபார்ப்பதற்கே!
    என்றும் எழுது நண்பா…
    தங்கள் எழுத்தால்
    எல்லோரும் களிப்படைய மட்டுமல்ல
    உலகெங்கும் தமிழ் வாழ
    என்றும் எழுது நண்பா…
    போட்டிகள் நடாத்தி
    பிறருக்கு ஒத்துழைத்து
    தமிழ் வளர்க்கப் புறப்பட்ட
    தம்பி ரூபன் அவர்களே
    நம்பி என்றும் எழுத
    எனது வாழ்த்துகள் ஐயா!

  6. வாழ்த்துக்கள் நண்பரே! நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்தமைக்கு! இனியும் தாங்கள் தொடர்ந்து மேலும் மேலும் படைப்புகள் படைத்து வளர எங்கள் இதயம் கனித வாழ்த்துக்கள்!

    த.ம.

  7. நான்காம வருடத்தில் அடியெடுத்து வைத்தமைக்குப் பாராட்டுக்கள் இன்னும் பல வருடங்கள் தமிழுக்கு சேவை செய்ய உங்களுக்கு எல்லாவிதமாக அருளும் வழங்க அந்த இறைவனை வேண்டுகிறேன் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  8. வணக்கம்
    உறவுகளே

    நான்காம் ஆண்டில் நாலா புறமும் வருவேன்-உங்களின் நட்பையும்.வாழ்த்துகளையும் தேடி…

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்