28 comments on “தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப் போட்டி

  1. வணக்கம் ரூபன்
    அருமையான முயற்சி சிறப்பாக நிறைவேற என் வாழ்த்துக்கள். உங்கள் நல்ல நோக்கம் என்னை கவர்ந்தது.
    நல்ல தலைப்புக்கள். அதில் கலந்து கொள்ளும் நடுவர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். மிக்க நன்றி….!

  2. வணக்கம் அண்ணா…

    சிறப்பான தலைப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்.. தங்கள் முயற்சி பாராட்டிற்குரியது… வாழ்த்துக்கள்…

    தீபாவளி போட்டியில் தான் கலந்து கொள்ள இயலவில்லை. இதில் கட்டாயம் கலந்துகொள்வேன் என நம்புகிறேன்… பாராட்டுக்கள்…

  3. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    போட்டி குறித்த நடுவர்கள் அறிவிப்பும், தலைப்புகள் குறித்த அறிவிப்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. போட்டி தொடர்பான பணிகளில் தங்கள் பங்களிப்பைக் கண்டு உண்மையில் மெய்சிலிர்த்து போனேன் சகோதரர். நிச்சயம் போட்டி மிகச் சிறப்பாக நடந்தேறும் என்பது முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. மிக அருமையான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்த நடுவர்களுக்கும் அன்பான நன்றிகள். போட்டி பற்றிய அனைத்திலும் தனது முழு பங்களிப்பை அளித்து வரும், உற்ற துணையாக, ஆனிவேராக விளங்கும் சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். பகிர்ந்த தங்களுக்கு எனது நன்றிகள். தங்களோடி இணைந்திருப்பதில் ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து எல்லாவற்றிலும் இணைந்திருப்போம். நன்றிங்க சகோ…

  4. இனிய வணக்கம் நண்பரே
    படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முகமாக
    அடுத்தடுத்து போட்டிகளை அறிமுகப்படுத்தி அதனை திறம்பட
    நடத்தும் உங்கள் அன்பார்ந்த மனதுக்கு என்
    நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்.
    ==
    தகுந்த நடுவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும்
    தேர்ந்தெடுத்திருக்கும் இந்த திருவிழா சிறப்புற நடந்தேற
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  5. நண்பர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்.
    எனது வலைப்பக்கத்தில் உங்கள் அறிவிப்பை எடுத்து இட்டிருககிறேன்.
    தங்கள் முயற்சி வெற்றியடைய என் உதவி என்றும் உண்டு. வாழ்த்துகளுடன், நா.மு. வலைப்பக்கம் -http://valarumkavithai.blogspot.in/

  6. வாழ்த்துக்கள் தங்களின் முயற்சி இதுவும் மிகச் சிறப்பாகத் தொடரட்டும் .
    முடிந்தால் தைப்பொங்கலை முன்னிட்டு மற்றுமொரு கவிதைப் போட்டியினையும்
    நிகழ்த்த ஆவனை செய்யுங்கள் சகோதரா .தைப் பொங்கல் தமிழர்களின்
    முதன்மையான பண்டிகை இந்நாளைச் சிறப்பிக்கும் வகையில் கட்டுரையோடு
    கவிதையும் கைகோர்த்துப் பயணிக்கட்டும் .இது எனது தாழ்மையான வேண்டுகோள் .
    மிக்க நன்றி பகிர்வுகளுக்கு .

  7. ரஞ்சனி நாராயணனின் வலையில் ஏதோ கட்டுரைப்போட்டி என்று பார்த்து வந்தேன்.

    இந்த தலைப்பெல்லாம் எழுதற வயசு தாண்டிப்போயிடுச்சே அய்யா…

    கட்டு சாதம் கட்டுவது எப்படி அப்படின்னு வேணா ஒரு
    கட்டுரை எழுதலாம்.

    அது இருக்கட்டும்.

    உங்க வலைக்கு வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
    இன்று தான் சாத்தியமாயிற்று. ர். நா. வுக்கு நன்றி.

    உங்கள் வலை முகப்பு அழகு.

    சுப்பு தாத்தா.

  8. என்னுடைய தளத்தில் மறுபதிவு செய்திருக்கிறேன், ரூபன். உங்கள் முயற்சிகள் நல்லவிதமாக எல்லோருக்கும் பயன்தரும்படியாக அமைந்திருக்கின்றன. பாராட்டுக்கள். இந்த கட்டுரைப் போட்டி நல்லவிதமாக நடக்க வாழ்த்துக்கள்.

  9. அனைவரும் பங்கேற்கும்படியான நோக்கத்துடன்
    இன்றைய சூழலுக்கான பிரச்சனைகளைத் தலைப்புகளாக்கி
    மிகச் சிறந்த பதிவர்களை நடுவர்களாக்கி
    பொங்கல் தின பரிசுப் போட்டிக்கு அழைப்பு விடுத்திருக்கும்
    ரூபன் மற்றும் சக பதிவர்களுக்கும்
    போட்டி சிறப்புறவும் என்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்