43 comments on “தாயே நீ இருந்திருந்தால்……!!!

  1. தாய் இல்லாவிட்டால் குழந்தைகளின் நிலை சீர் அடையாது என்பது உண்மை என்று சொல்கிறது கவிதை.
    பிஞ்சு கைகள் கடினமான் கல்லை சுமக்க வைத்த வயிற்று பசி கொடுமை.
    தன் வயிற்றுக்கு உழைத்து பிழைக்கும் சிறுவர்களை வாழ்த்த சொல்கிறது. பிச்சை எடுக்காமல், திருடாமல் உழைக்கிரார்களே உழைப்பு கை கொடுக்கும்.

  2. என் முந்தையகருத்து ஏற்கப்பட்டதா ? அதில் குழந்தைகள் துன்பங்களை அதன் இயல்பிலேயே ஏற்கின்றனர். ஆதலால் இதே கருத்தை வேறொருவர் பார்வையில் சொல்லீருந்தால் இன்னும் எடுப்பாய் இருந்திருக்கும் என்று எழுதி இருந்தேன்.இது என் கருத்து. தாராளமாக வேறுபடலாம். கவிதை எழுதிய விதம் அதன் கரு எல்லாம் பாராட்டுக்குரியது. வாழ்த்துக்களுடன்.ஜீஎம்பி

  3. ‘குழ்ந்தை பாடும் தாலாட்டு’ என்று அந்த நாளில் டி.ராஜேந்தர் எழுதினர். தங்களுடையது குழந்தை பாடும் அவலப்பாட்டு. இன்னும் எவ்வளவு குழந்தைகள் இதேபோல் கதறிக்கொண்டிருக்கிரார்களோ! காலமும் இறையருளும் கருணை செய்யட்டும்.

  4. // என் பிஞ்சு மனசு வேக வேக
    உன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.????
    செங்கல்ச்சூழ வெப்பத்திலே
    பட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா. //

    சின்ன வயதில், எங்கள் அம்மா ஊர்ப் பக்கம், நான் பார்த்த அந்த செங்கற்சூளைகள் புகையும், அங்கு வேலை பார்த்த சின்ன வயது பெண்களும் நினைவுக்கு வந்தனர். உங்கள் வரிகள் … உள்ளம் உருகுதைய்யா!

  5. மனதை ஏனோ பிசைகிறது கவிதை…
    ஏதேதோ எண்ணங்கள் என்னை ஆட்டுவிக்கின்றன…
    பூவின் சுமைதாங்கா தலையில்
    செங்கற்களா ..
    குழந்தை தொழில் அடியோடு ஒழியவேண்டும்…
    ஆழமான கவிதை நண்பரே…

  6. தாயிழந்த குழந்தையின் வேதனை செங்கற்சூளையைப் போன்றே நம்மையும் சுடுகிறது. இளவயதில் தகாத வழியில் போகாமல் தன்மானத்துடன் தலையில் செங்கல் சுமந்தேனும் வாழும் வழியைக் கற்றுக்கொண்ட குழந்தையைப் பாராட்டவேண்டும். தகப்பனிழந்து தாயிருந்தால் அந்தக் குழந்தையின் தலையெழுத்தே மாறிப்போயிருந்திருக்கும். இளமையில் கல் என்பது எவ்வளவு கொடுமையான வாசகமாகிப் போய்விட்டது இக்குழந்தையின் வாழ்வில். மனம் தொட்ட கவி வரிகள்.

    • வணக்கம்

      நீங்கள் சொல்வது சரிதான்(தன்மானம்) தாய் தந்தை குடித்து விட்டு வீட்டில் இருக்க படிக்கும் வயது சிறுவர்களின் உழைப்பில் வாழும் தாய் தந்தையர் எத்தனை… சொல்லவா வேண்டும்…..

      வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  7. என்னைப் பெத்த தாயே-என்னைஎதுக்கு பெத்தா?
    தலையில் கல்லை சுமக்க பெத்தாயா
    தரணியில் புகழ் சூட பெத்தாயா?
    என் பிஞ்சு மனசு வேக வேக
    உன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.????
    செங்கல்ச்சூழ வெப்பத்திலே
    பட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா.
    புத்தகத்தை சுமக்க வேண்டிய கையில்
    தலையில் கல்லைச் சுமக்கிறேன்-தாயே

    அருமை….! பிஞ்சு நெஞ்சு வெந்ததனால் பண்பான உங்கள் நெஞ்சு புண்பட்டு போனதையும் கண்டேன். விதி இன்றி வாழ ஒரு வழி இல்லையா என்று இதனை ஒட்டி( நெற்றிக்கண்ணனே )என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.

    நன்றி ……!தொடர வாழ்த்துக்கள்….!

    • வணக்கம்

      பார்த்தேன்.. வித்தியாசம் உண்டு என்னுடைய கவிதை பெற்ற தாய் இறந்த பின் பிள்ளைகளின் துயரம் சுமந்தது…

      உங்களின் படைப்பில் உலகமே துயரசுமையில் உள்ளது போல உள்ளது…..
      வருகைக்கு மிக்க நன்றி. வாருங்கள் வந்து கருத்தை சொல்லுங்கள்…..

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

  8. அன்பு சகோதரரே…
    வணக்கம். தங்கள் கவியும் படமும் நெஞ்சத்தை நெருடிச் செல்கிறது. ஒரு சாண் வயிற்றுக்கு நமது உடன் பிறப்புகள் படும் வேதனைகள் எத்தனை எத்தனை… சொல்லி மாளாது துயரங்கள். இளமையில் வறுமை கொடிது. சமூக நோக்கம் கொண்ட படைப்பிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே…

  9. கருவில் அழிந்திருந்தால் அகன்றிடுமிடர் ஆயினும்
    பெருகும் துயரிதன் பொறுப்பினைக் கேட்பார்யார்!
    உருகிடக் கவிதந்தாய் உவக்கின்றேன்! இருந்தும்
    அருகிடாமல் இனங்காப்போம்! அழிப்போம் அவலத்தை!.

    உளம் நெருடும் கவிதை! படமும் அவ்வாறே!

    வாழ்த்துக்கள் சகோ!

  10. படமும் அது தங்கள் மனதில் விளைவித்த
    உணர்வுகளும் அற்புதக் கவியாகி எம்மனமும்
    கலங்கச் செய்து போகிறது
    மனம் தொட்ட கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  11. வணக்கம்

    கருத்தைக் கவரும் கவிதையைக் கண்டேன்
    உருகி ஒழுகும் உயிர்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  12. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தாயே நீ இருந்திருந்தால்)
    என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள(கவிதையைப்படித்து) அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

என் வாசக நெஞ்சங்களேஇரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன் எழுதப்பட்டுள்ள படைப்பை படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்