ஆயிரம் தீபங்கள் ஏற்றும் நம்
தமிழர் கூட்டமே…
அன்பு மொழி பேச்சில் அகில உலகமே குளிருதையா
மழலைச் செல்வங்கள் நம் விட்டு வாசலின்
முற்றத்தில் புத்தாடை அணிந்து
பலகாரம் உண்டு பட்டாசு கையினிலே
மனசில் மத்தாப்பூ பூத்திடவே
கொண்டாடும் எம் பிள்ளைச் செல்வங்கள்
யார் முகம் அறியாத சின்னஞ்சிறு பிஞ்சுகள்
பால் வடியும் வெள்ளை முகம்
பார்த்தால் பரவசம் அடைந்திடவோம்
வெள்ளை உடையும் அணிந்து
பள்ளிக்கு போகும் சின்னஞ்சிறு-சிறுமிகள்
பாதி வழியினிலே பாழ் பட்ட பாவிகள்
உடன் பிறப்புடன் பிறவாத
கல் நெஞ்சு கொண்ட கயவர்கள் கூட்டம்
வெள்ளையுடையில் இரத்தக் கறையும் படியும்படி
உயிரை மாய்த்து மாய்த்து காம இச்சையை தீர்க்கும்
செய்திகள் உலகெங்கும் அரங்கேறுகிறது
எம் தமிழ் நெஞ்சங்களை அழவைக்கிறது-அந்த
கயவர்கள் உயிரை காவு கொல்வாயா-
தீபாவளி நன்னாளில்-நரகாசூரா…!
உனக்கு ஆயிரம் தீபங்கள் ஏற்றிடுவோம்
நம் தமிழர்கள் கூட்டம்…
தீபாவளிக்கான கடும் புயலும் மழையும் கவிதையாக பொழிவதற்கு இணையத்தள உறவுகளுக்கு இன்னும் 14 நாட்களின் விளிம்பில் இருக்கிறார்கள்… பலஇணைத்தள உறவுகள் கேட்டதற்கிணங்க போட்டிக்கான காலம் 31.10.2013 என்று நீடிக்கப்பட்டுள்ளது…
ஏன் இப்படிப்பட்ட போட்டி வேண்டும் என்ற எண்ணங்கள் எழலாம்… சொல்கிறேன்… போட்டியை நடத்துவதன் மூலம் பல இணையத்தள உறவுகளிடம் உள்ள இலைமறை காயாக இருக்கிற திறமைகள் வெளிப்படுத்தும் நோக்கம் தான்… ஊன்று கோலின் உதவியுடன் நடக்கும் மனிதனை சொந்த காலில் நடக்கவைப்பதுபோல… நன்றி…
நானும் என்னுடைய தனபால் அண்ணாவும் தொலைபேசியில் பேசி ஒரு முடிவு எடுத்தோம். அதன் விளைவுதான் :
ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி
கவிதை எழுதுங்கள்… பரிசு அள்ளிச் செல்லுங்கள்…
போட்டிக்கான தலைப்பு :
1. நாம் சிரிக்கும் நாளே திருநாள்
2. ஒளி காட்டும் வழி
3. நாம் சிரித்தால் தீபாவளி
போட்டியின் விதிமுறைகள் :
1. கவிதை மரபு சார்ந்தும் இருக்கலாம், வசன கவிதையாகவும் இருக்கலாம், கவிதை வரிகள் 15க்கு குறையாமலும் 25க்கு மிகாமலும் இருத்தல் நலம்.
2. ஒரு பதிவரின் ஒரு தலைப்பிலான ஒரு கவிதை மட்டுமே போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படும்.
3. கவிதையினை தங்கள் தளத்தில் 310/10/2013 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
4. நடுவர்களின் தீர்ப்பே முடிவானதாக இருக்கும்
5. உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : rupanvani@yahoo.com & dindiguldhanabalan@yahoo.com
நடுவர்கள் :
திரு. ரமணி ஐயா அவர்கள் (yaathoramani.blogspot.in)
திருமதி. ரஞ்சனி நாராயணன் அவர்கள் (ranjaninarayanan.wordpress.com)
திருமதி. தென்றல் சசிகலா அவர்கள் (veesuthendral.blogspot.in)
திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்கள் (2008rupan.wordpress.com)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...