வானளவு உயர்ந்து நிற்கும்
வலிமை மிக்க வெண்பா
வையத்துள் வாழும் மனிதனை
வானளவு உயர்த்தி வைக்கும்
வள்ளுவனின் வாய்மொழி!
எக்காலத்துக்கும் பொருந்தும்
நன்னெறி முறைகளை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ஈரடிக் குறளாய்
அறத்துப்பால் காமத்துப்பால்,பொருட்பால்
எனும் முப்பாலில்
எழுதிச் சென்றவன் அவன்!
வானுயரச் சிலை அமைத்துப்
போற்றிக் கொண்டிருக்கும்
நாம் – நம் வாழ்க்கையில்
அவன் சொல்லிச் சென்ற
நன்னெறியினைக் கடைப்பிடித்தால்
போதும் – நம் வாழ்க்கையில்
நிமிர்ந்து நிற்கலாம்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-