விழியோரம் கண்ணீரைச்-சுமந்து
வலியோடு தாங்கி
வலியோடுவயிற்றில்-நீ சுமந்தாய்.
உன் கருவறையில் நான் -வாழும் போது
எட்டி எட்டி எத்தனை தடவை-உதைத்திருப்பேன்
அந்த வலியையும்-விழியோரம் தாங்கி.
கண்ணீர் வடிய வடிய
பொறுமை காத்தாயே-தாயே.
உன் வயிற்றில் இருந்து-பூமா தேவியில்
குதித்தவுடன் நீயடைந்த இன்பம்-மேல்தாயே
உன் பிள்ளை கண்ணீர் வடிக்கையில்
உதிரத்தை பாலாக்கி-பசி தீர்த்தாயே
உன் பிள்ளையின் பசி போக்கி
மழளை மொழியில்-சிரிக்கையில்
உனக்கு. பசியே வரமாட்டாது தாயே.
விழியோரம் கண்ணீர் வடித்து.வடித்து.
வலியோடு என்னை சுமந்தாய்.
என்னை இளமை வரை வளர்த்தாயே-தாயே.
இரவென்றும் பகல்என்றும் பாராமல்
நீ.பட்ட துன்பத்தை நான் அறிவேன்- தாயே.
நீ என்னை இளமை வரை வளத்து விட்டாய்
ஆனால் உன்னை முதுமை வரை-பார்க்க
நீ இருக்க வில்லை தாயே.
இப்போ உன் மகன் உயர் பதவியில்-இருக்கின்றேன்.
அதைப் பார்க்க நீ இல்லை -தாயே
நீ உயிருடன் இருந்திருந்தாள்
உன் மகனை பார்த்து-நீ
ஆனந்த புன்னனக பூத்திருப்பாய்.
உன் நினைவுகளை சுமந்து -கொண்டு
தனிமையில் வாழும் போது.
என் விழியோரம் வலிகள்-தாங்கிய
கண்ணீ வடிக்குதம்மா.
என் துன்பத்தை அறிய-நீஇல்லை தாயே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-