![images[1]](https://2008rupan.files.wordpress.com/2013/08/images1.jpg?w=160&h=145)
![images[1]](https://2008rupan.files.wordpress.com/2013/08/images1.jpg?w=160&h=145)
தெய்வத்தின் மேல் தெய்வம்
எங்கள் கண்கன்ட-தெய்வம்
தாயும் தந்தையும் அல்லவா?
தரணியில் புகழ் படைத்து
புது வாழ்க்கை அமைத்துக் கொடுத்த
எம் இதய தெய்வங்கள் -அல்லவா?
அவர்கள் அல்லவோ-நம்
தாயும் தந்தையும் -அல்லவா
குட்டிப்பையானக வாழ்ந்த காலத்தில்
சுட்டிப் பையனுக்கு அன்னையானவள்-கையால்
சோறு பிசைந்து உருண்டை வடிவில்-தருவள்
அது சுவையிலும் சுவையப்பா-
அது சுவையிலும் சுவைதான்.
அன்று சிறியவனாய் இருக்கையில்
கடந்த கால நினைவுகள்-என்
சிகரத்துக்கு எட்ட வில்லை-இன்று
பெரியவனாய் இருக்கும் போது
கடந்த கால நினைவுகள்-எம்மை
ஒருகனம் தடம் புரட்டிப் போட்டது.
பாலகப் பருவத்தில் பள்ளியில்- படிக்கையில்
சக மாணவர்களுடன் கை-கோர்த்து
சிரித்து மகிழ்ந்த காலங்களும்
பள்ளியில் ஒன்றையாய் படித்த -நண்பர்கள்
இன்று எந்திர வாழ்கையை -தேடி
வெளிநாடுகளில் வாழ்கிறார்கள்
ஒன்றாக படித்த எத்தனை -நண்பர்கள்
தன் துணை தேடி மணவாழ்கையில்-புகுந்து விட்டார்கள்
எத்தனை பேர் மரணத்தை தளுவி விட்டார்கள்
ஒன்றாக பழகிய உறவுகள் -எத்தனை போர்
தற்காலிக பரிவுகளாகவும்.
நிரந்தரப் பிரிவுகளாகவும்-ஆகி விட்டார்கள்
அந்த கடந்த கால -நினைவுகளை
நினைத்துப் பார்கையில்-கடந்த காலநினைவுகள்
ஒருகனம் எம் இதயத்தை துடிக்க வைக்கிறது.
பள்ளிக்கூடம் விட்டவுடன்
எம் செம்மண் வீதியிலே
கிட்டியும் புள்ளும் -விளையாடினோம்
அதிலு ஒற்றையடியா-இரட்டையடியா?
என்று அடித்து மகிழ்வதுதான்.
அது மட்டுமா விளையாட்டில்.
ஜெயிக்க வேண்டும்-என்று
இறு மாப்புடன்-மூச்சி விடாமல்
“ஆலயிலே சோலையிலே”
“ஆலம்பாடிச் சந்தியிலே”
“கிட்டியும் புள்ளும் கிறுவியடிக்க”
“பாலாறு…….பாலாறு……..பாலாறு”…..என்று
மூச்சி விடாமல் கிட்டியும் புள்ளும் -விளையாடும்
குழியை நோக்கி -ஓடுவதுதான்
எம் நண்பர்களுடன்-விளையாடிய.
காலங்களை நினைக்கையில்
எம் மனக் கதவுகள் திறக்கப்படுகிறது
கண்களில் இருந்து கண்ணீரும்-வடிகிறது.
மே.ஏப்பரல் என்றால்-ஒரே
கொண்டாட்டம் என்னவென்றால்
வரண்ட காற்று வீசும் காலம்
காலையில் சாப்பிட்டல்
10 மணிக்கும் 11.மணிக்கெல்லாம்
வரிசையாக நின்று
பட்டம் விட்டு விளையாடுவதுதான்
அந்த வேலையில் ஆகாயத்தில்
பல பல வண்ணங்களில்-பட்டம் பறக்கும்.
யார் பட்டம் உயரப் பறப்பது-என்ற.
ஆதங்கத்துடன் எல்லோரும்-கூட்டமாக
நின்று பட்டம் விட்டு மகிந்தோம்
கடந்த கால நினைவுகளை
ஒரு கனம் மீட்டுப் பார்த்தேன்
என் மனதில்தோன்றிய
நினைவுகளை சொல்லிருக்கேன்
எம் நெஞ்சங்களுக்காக…….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே……..
மாம்பழம் போல உன்கன்னம் .
ரெண்டும் சிவந்தடி.
உண்முகம்சந்திரவதனத்தின்-விம்பமடி
உன் விழின் அழகில்-நான்மயங்கிட
விடை தெரியாமல் விதியில்.
பைத்தியமாய் அலைந்தேனடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
முகவரி தெரியாமல்
முந்தி கைபிடிக்க நினைத்தேன்.
நீ முடிந்த வரை ஆபாசம் காட்டினாய்.
முற்றும் துறந்த முனிவராய்.
முகம் கோணாமல்.
முதல் பாசம் காட்டினேன்.
நீ என்னை மூச்சடக்க-வைத்தாயே.
முதல் பாசம் காட்டினேன்.
அது என்னில்-முதல் தப்புத்தானடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
என்னை விட்டு விட்டு ஏன்.
மெதுவாய் அகன்று போகிறாய்.
நெஞ்சம் வெடித்து துடிக்கிதடி.
என் நிம்மதி வாழ்வும் கலைந்ததடி.
என்னை வஞ்சனை செய்து.
உரலில் துவைத்த துவையல்-போல.
என்னை துவைத்து விட்டாயடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
கொஞ்சமும் உன்மனதில்
கருணை இல்லையடி.
கொடுங்கோலான உன்மனசு.
என்னை வஞ்சித்து விட்டதடி.
உன்நிடத்தில் வாழவேண்டுமென்று.
என்மனசு துடியாய் துடிக்குதடி.
நீ செய்த துன்பத்தால்.
சோகப் பட்டியலில் விழுகிறேன்
உன்னை என்னி வாழ நினைத்ததால்.
என் வாழ்வை நானே –புதைகுழியில்
புதைத்து விட்டேனடி.
காலம் செய்த சதியென்றோ.
கோலம் செய்த விதியன்றோ
புரியவில்லையடி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
என்னுறவு வேண்டாம் என்றுதான்.
நீ உன் உறவை துண்டி விட்டாய்.
சிவனே என்று-அமைதியாய்.
இருந்த என்னை-ஒருதடவை.
நீ என் இதயத்தை நெகிலவைத்தாயே.
காதல்வேண்டாம் காதல்வேண்டாம்.
என்று எத்தனை தடைவசொல்லியிருப்பேன்.
நீ அதையும் கேட்காமல்
என்னை காதலிச்சிவிட்டாய்.
நீ காதலிக்கும் போது.
வார்த்தைக்கு வார்த்தையாய்-பேசினாய்.
நானே என் இதயத்தை
உனக்காக உரமாக்கினேன்.
பாசக்கயிராக –உன்னை.
சுற்றிக் கட்டி வைத்தேன்.-ஆனால்
பாசம் என்னும் வெசக்கயிறுகாட்டி.
வஞ்சித்து விட்டாய்.
இது உனக்கு சரியா??
இது உனக்கு சரியா???
எதீர் பாராத விதமாக.
புகைவண்டி பிரயாணத்தால்.
நான் யன்னல் ஓரஇருக்கையில்.
புகை வண்டி தரிப்படத்தில்.
இரண்டு புகைவண்டி-தனது.
ஓடு பாதை மாறுகிறது.
அந்த நேரத்தில்-அவள் .
யன்னல் அருகே இருந்தால்.
என்னுடைய முகம் அவளுக்கு-தோன்றியது.
அவளின் வழிகளில்.
உப்பு நீர் கசிந்தது.
உப்பு நீர் தன் கணவன்-தூங்கும்.
மடியை நனைத்தது.
அவளின் மௌன அழுகையால்.
என் இதயம் ஒருகணம் நெகிலவைத்தது.
நாம் யாரை யார்.
ஏப்படி காதலிச்சாளும்.
சேர்வோம் என்ப உறுதியில்லை.
இன்னார்க்கு இன்னார்தான்-என்று.
இறைவன் எழுதி விட்டான்.
இறைவனின் எழுத்துப்படிதான் .
காதலும் வாழும்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஏத்தனை பொய்களையும்.
பித்தலாட்டங்களையும்.
இந்த உலகம் எப்படி
பொறுக்கும்
எத்தனை கொடுமைகளையும்
தாங்கும்.
நித்தமும் வணங்கி
நிஜத்தையுடைத்தால்.
புத்தன் ஜெசு.காந்தி.
பூமியில் பிறந்தது எதற்கு.
சத்தியம் தர்மம்.
மங்கிப் போச்சி.
நிதி நியாயம்.
சொத்துப் போச்சி.
தினம் தினம்.
வன் கொடுமைகள்
தினம் தினம்அழுகை
ஓலங்களும்.
கோட்டால் இந்தமி.
எப்படி பொறுக்கும்.
அசுர வேகத்தில் விஞ்ஞானம்.
நடைப் பயணம் போடுது.
அதில் எத்தனை எத்தனை.
கண்டுபிடிப்புக்கள்.நிகழுது.
அது நண்மையா? தீமையா?
என்று அறியாமல் பால்கேட்ட மனிதன்.
அதை பூமியில் அமைக்கிறான்.
அதுதானே அனு உலை வெடித்து.
சிதறி இன்றைய மனித குலம்.
பல அவஸ்த்தைக்கு முகம்.
கொடுக்க வேண்டியவனாச்சி.
இத்தனை கொடுமைகனையும்.
தாங்கிக் கொண்டு பூமி எப்படி.
பொறுக்கும் மனிதா???சொல்……
இரட்டையடுக்கு வீடும்.
சொத்து சுகம் உன் வசதியா!.???
ஆடை ஆலங்காரம் உன் தகுதியா!.???
ஏழை வாழும் இந்தப் ப+மியில்.
நீ! மடிந்தால்……
பூமியின் மேல் நீ என்ன பெரிசா?.
ஆடம்பர வாழ்கை வாழ்ந்த-உனக்கு.
ஏழ்மையா வாழும் ஏழைக்கும்.
ஆறடி(06) நிலந்தன் சொந்தமடா.
பூமியெல்லாம் சொந்தம் என்று.
ஆணவம் காட்டும் மனிதா!
நீ புரியாத மனிதன்தாண்டா!.
உண்மையின் தத்தவத்தை.
கவியாக சொல்லியிருக்கேன். மனிதா!
நீ! புரிந்து கொன்டு வாழ்ந்தால்-நீ.
நீ!……….புனிதனடா……………….
நீ! புரியாமல் பூமியில் வாழ்ந்தால்.
நீ! வாழ்ந்து என்னடா அர்த்தன்டா மனிதா!.
மனச்சாட்சி என்ற ஒன்று.இருந்தால்.
பூமிக்கு பிரச்சினை வந்துயிருக்காது-மனிதா!.
இப்படியும் கொடுமையை
பூமி எப்படி தாங்கும் மனிதா!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலம் வரை கருவறையில்.
சுமந்திட்டேன் மகனே.
நீ.காலவாகும் தேதி.
தெரியவில்லை மகனே.
கருவறையில் சுமந்திட்ட -நான்.
உன்னை பெற்றேடுக்க -நீண்ட.
நாள் காத்திருந்தேன்.
அன்னையின் கருவறையில்லிருந்து.
நீ நிலவறைக்கு வரும் போது.
தக தக வென்ற பென்போல. இருந்தாயட.-மகனே.
உன்னை சுமந்திட்ட காலத்தில்.
அளவில்லாத ஆசை வளத்தேன்-மகனே.
நீ.யார் இடமும் சொல்லாமல்.-நீ.
எட்டுக்கால்(8)பந்தலில் போவாய் என்று.
எனக்கு தெரியவில்லை-மகனே.
என்னுடைய வேதனையை யார்ரிடம்.
சொல்வதடா……..
உனக்கு ஐந்து(05) வயதினிலே.
வளர்க்க என்ன பாடு பட்டேன் மகனே.
நீயும் நாலுபேரைப் போல.நல்லா.
வாழவேண்டுமென்றுதான்-தளராத .
ஆசை வளர்த்தேன் மகனே.
இப்படியும் ஒரு நிற்கதி
வருமென்று நினைக்க வில்லை மகனே.
உன் அப்பன் சீமான்தான்.
நீ கருவறையில் இருக்கும் போது.
படைத்த இறைவன் கொண்டு போனான்.
என் கருவறையில்லிருக்கும்.-நீதான்.
மிச்சமென்று மெத்திச்சு பூரிப்படைந்தேன்.
அதவும் ஒப்பாரி கீதத்தில் போகுமென்று.
கனவில் கூட நினைக்க வில்லை.
உன் அப்பன் இறப்பினாலும்
உன் இறப்பினாலும்.-என்.
வாழ்வு.சீரழிந்து போனதடா.
உன் அப்பன் சீமான் இறந்த.
வேலையில் உடன் கட்டை.
ஏற புறப்பட்டேன்.-என்.
சொந்த பாசங்கள் முட்டுக்கட்டையா.
இருந்ததடா.ஏன் என்றால்.
என் வயிற்றில் நீ.
வளருகின்றாய் மகனே.
அப்போது தடுத்து இருக்கா விட்டால்.
மூவா உயிரும்.அமைதியா
சாந்தியடைந்திருக்கும்.
மகனையும் கணவனையும்.
இழந்து தனி மரமாய்
கலியுக காலத்தில்-காலம் கழியுதடா.
என் சோக வாழ்வை பார்க்க.
நீயும் தந்தையும் இல்லையே…….
எப்போது விடிவு வரும்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிறப்பு என்னு-சக்கரம்.
சுழழ்வது -போல.
இறப்பு என்ற -சக்கரமும்.
உலகில் சுழழுது.
உலகில் மனிட பிறவி -எடுத்தவன்.
வாழ்வான் என்பது-பொய்.
ஆனால் மரணம் என்பது-உண்மை.
சாவுக்கு துணிந்தவன்.
தரனியில் சரித்திரம்.
படைக்க முடியும்
ஒரு தாயும் தந்தையும்.
விதைக்கும் விதையில்-அல்லவா!.
நாம் பிறந்தோம்.
தாயனவள் பத்து மாசம்(10).
தன் வயிற்றில் சுமாந்தவள்.
அந்த நேரத்தில் தாயின்-வயிற்றில்.
எட்டி.எட்டி எத்தனை- தடவை .
உதைத்தோம்-அல்லவா!.
அந்த உதையின் -வலியையும்.
பொறுத்துக் கொண்டு வாழ்ந்தால் -அல்லவா!
தாயின் வயிற்றில் இருந்து.
பிறந்தவுடன்-முதலில்.
நாம்.அம்மா. அம்மா.
என்று அழுகின்றோம்.
அந்த வேலையில் தாயனவள்.
அடையும் இன்பம்-மேல்.
அப்படி பெற்று.வளர்த்து.
நாலுபெயர் பார்க்க-வளர்த்த விட்ட.அன்னையை.
விட்டு நிரந்தரமாக பிரிவு.
ஏற்படுமல்லவா.-அதுதான்
இறப்பு.இறப்பு.
இந்த பூமியில் வாழ்கின்ற.
ராசாவா சரி.மந்திரியா சரி.
எல்லோரும் இறுதியில்.
இறப்பு என்ற ஆறு(06) மண்னுக்குத்தான்.
சொந்தம்.அல்லவா!.
இந்த மாய உலகில் நான் பெரிது.
அவன் பெரிது-என்ற போட்டி எதற்கு?????.
என்ற இறுமாப்புடன்- வாழ்கின்றான்.
இன்றைய .மனித குலம்.
மண்னுக்காகவும். நாட்டுக்காகவும்.
போட்டி போட்டு வாழ்கின்ற -சமூகம்.
கடசியில் என்னதான் கொண்டு.-செல்வது.
ஒன்றுமேயில்லை.
எதற்காக ஏன் மனிடா சண்டை போடுகின்றாய்.????.
இறப்பு என்ற உலகை அடைய முதல்.
பிறப்பு என்ற காலத்தில் சந்தோசமாக -வாழ்.
நீயும் வாழ்.
உன் சமூகத்தையும் வாழ பழகிக் .
கற்றுக் கொடு.
இந்த உலகில் -வாழ்ந்வர் கோடி.
வாழ்ந்து மறைந்தவர் கோடி.
மக்கள் மனதில் நிலையா வாழ்பவன்-யார்????.
சத்தியம் தர்மம் நேர்மை-மூன்று.
ஒருங்கே உள்ளவன்தான்.
மக்கள் மனதில் வாழ்வான்.
உலகிலும் வாழ்வான்.
காடுவரைப் பிள்ளை கடசி வரை யாரோ??????
என்ற பாடல் அடிகள் மூலம்.
நாங்கள் எப்படி வாழ்ந்தாலும்.
எங்கள்லிடம் நிலையா நிலைத்து-நிப்பது.
நாங்கள் செய்யும் புண்ணியம்-மட்டுமே.
இறப்பு என்பது இறைவனால்
படைக்கப்பட் ஒவ்வெரு ஜீவ னுக்கும்-உண்டு.
மானிடன் இறப்பது உறுதி.
இறந்த பின்பு வாழ வேண்டும்மென்று-நினைத்தால்.
வாழும் சில நாட்களில்-தர்மம் செய்.
இறப்பையும் பிறப்பையும்.
மனிடனால் மாற்ற முடியாது.
எம்மை படைத்த -இறைவனுக்கு.
மட்டுமே.முடியும்.
பிறப்பு என்பது இறைவன் -நியதி.
இறப்பு என்பது -உலக நியதி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சங்க காலத்தில் பெண்ணின்.
கூந்தல் -பூ வல்லவா?.
புலவர்கள் பாடிய பாக்களில்.
ஒப்பித்து விட்டான் -அல்லவா.
பெண்ணின் கூந்தலில் ஓடும்.
தேனை மதுவுண்டு கழிக்க.
வண்டுகள். தீங்காரம் பாடி வரும்.
அன்று வண்டுகள் போல .
இன்று பெண்ணின் கூந்தல் அழகில்.
எத்தனை பேர் கவுண்ணதும்- அல்லவா.
பெண்ணின் கன்னக் குழியை
வர்ணிக்காத கவிஞ்சனே இல்லை.
அதுவும் ஒரு அழகுதான்.
ஒரு பெண்ணின் பார்வையில்.
ஆயிரம் அர்த்தங்கள்-உண்டு.
அவளின் கண்கள்.ஆகயத்தில் .
கண் சிமிட்டும் நட்சத்திரமல்லவா?.
அதனால்தான் பெண்கள் இடம்.
பல ஆண்கள் மயங்குவது .வழக்கம்.
பெண்ணின் அழகை சொல்ல.
புறப்பட்டால் 365 நாட்கள் -போதாது.
ஒரு பெண்ணின் அழகை -ஆணிடம்.
கேட்டுப்பார் -விலா வாரியா .
வாய் ஓயாமல் சொல்ல .
தொடங்கிடுவான்.
-நன்றி-.
-அன்புடன்-.
-ரூபன்-.
உழைப்பாளிகளின் வாழ்கையே.
மேன்மையானது.
உழைப்பானிகலே.-உலகிற்கு.
உண்மையான .படைப்பாளிகள்.
உங்கள் உடம்பில்லிருந்து.
சிந்தும் ஒவ்வெரு வியர்வைத்துளியும்.
உங்கள் இதயத்தில்லிரந்து ஓடுகின்ற
செங்குருதியின்-உயிர் மூச்சு.
உழைப்பாளிகலே- நீங்கதான்.
ஒரு சமூதாயத்தின்-மேன்மையான.
படைப்பாளிகள்.
உங்கள் இதயத்தில்-ஓடுகின்ற.
செங்குருதி-உங்கள்.
வலிமையின் சக்தி.
உழைப்பாளி-இன்று.
ஒரு நாட்டின் -முதுகெழும்பு.
உழைப்பாளி இல்லையென்றால்.
ஒரு தேசம்-இருட்டறைதான்.
உழைப்பாளிகலே-நீங்கதான்.
எங்கள் இதயத்தின்.
அனையாத -ஒளி விளக்கு.
நீங்கள் தான் -ஒரு தேசத்தின்.
புனிதமான கவல் தெய்வங்கள்.
உழைப்பாளிகலே-நீங்கதான்.
உலகிற்கு உண்மையான .
படைப்பாளிகள்.
அரசியல் வாதிகளும்
ஆத்ம ஞானிகளும்.
சூடு சுரனை அற்றவர்கள்.
உழைப்பாளிகள் தான் -உண்மையான.
வித்தகர்கள்.
21ம் றூற்றாண்டில்-நீங்கள்தான்.
உண்மையான கதா நாயகர்கள்.
உழைப்பாளியின்-வரலாற்றை.
பேனா மை கொண்டு- எழுதப் புறப்பட்டல்.
விலாவாரியா பக்கம் பக்கமா -எழுதலாம்.
உழைப்பாளி இல்லையென்றால்.
ஒரு தேசம் இருட்டறைதான்.
உழைப்பாளி மேன்மையானவன் .
என்று கருதித்தான்.
உலகிலே.மே-01 உழைப்பாளி.
நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது.
உழைப்பாளிகலே-உலகின்.
உண்மையான -படைப்பாளிகள்.
அதிஸ்டம்- என்பது
இஷ்டத்துக்கு வரக்கூடியது.
உழைப்பு என்பது-நம்.
இஷ்டத்துக்கு பெறக்கூடியது.
உழைப்பாளி வாழ்தலே.
ஒரு தேசம் சுவீட்சமா இருக்கும்.
வாழ்க உழைப்பாளி.
வளர்க உழைப்பாளி.
*******************************
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-