
இதயங்களை உடைக்கும் உள்ளங்கள்
சின்னஞ் சிறு வயதிலே
அன்னை மடியிலும் தந்தை- தோளிலும்
துள்ளி விளையாடும் உள்ளங்கள்.
துவண்டு துவண்டு அழுகிறது இந்த -உலகத்தில்.
படைத்தவனும் எங்கே? பெற்றவனும் பெற்றவளும் எங்கே?
பார் எங்கும் சுமையை சுமக்கிறது.
இந்த பிஞ்சு உள்ளங்கள்.
புத்தகப்பை தாங்கும் –தோளில்.
நித்தம் நித்தம் சுமைகளை சுமக்கிறது
பேனா பிடித்து எழுதும் பிஞ்சு -விரல்கள் எல்லாம்
துவிச்சக்ர வண்டியை- தள்ளுகிறது
குறைந்த வேதனத்தில் -கூடிய உழைப்பில்
பிஞ்சு விரல்களும் பிஞ்சு மேனியும்
மெல்ல மெல்ல வலிக்க
வலிக்கும் வலியையும் தாங்கி.
செங்கல் தொழில்ச்சாலையில்
நித்தம் நித்தம் உப்பு வியர்வை- படியப் படிய
நித்தம் நித்தம் உடலை வருத்தும்- உள்ளங்களே
சுட்டபின் செங்கல் சிகப்பாக உள்ளதுவே.
அதுவே உங்களின் குருதியின் நிறம்-அல்லவா
உங்களுக்கு விடிவு காலம் பிறக்காதா.??
இன்றைய சிறுவர்கள் நாளைய இளைஞர்கள்
என்ற மெய்யா மொழி அருள் வாக்கு எங்கே போனது????
கந்தக படிமம் பட்டுப் பட்டு
நித்தம் நித்தம் வேதனையை –சுமக்கிறது உள்ளங்கள்
நித்தம் நித்தம் உன் காலம் கடக்கிறது-தம்பி
நீ செய்த தீப்பெட்டியை திறந்து பார்த்தால்
உன் பிஞ்சு விரல்கள் அத்தனையும்- உறங்கி கிடக்கிறது.
அதை உரைசி பத்த வைக்கும் போது.
உன் பிஞ்சு விரல்கள் -எரியும் ஞாபகமே.
சீறும் தீக்குச்சியாக- எழுவாய் தம்பி
உன் வாழ்வின் அடிமை விலங்கை
உடைத்திடுவாய். தம்பி.
யார் பெற்ற பிள்ளையோ.
பிள்ளையை பிள்ளை சுமக்கிறது.
வீட்டில் உறங்க வேண்டிய -இந்த இரு உள்ளங்கள்
வீட்டுவாசல் படியில் உறங்குகிறது
உலக நாடுகளே சிறுவர் உரிமை – சிறுவர் உரிமை
என்று பதாதைகள் -தாங்கியபடி
அச்சு ஊடகங்களிலும் இலத்திரனியல் -ஊடகங்களிலும்
சிறுவர் அடிமையை -ஒழிப்போம்என்ற
விளம்பரம் அழகு தமிழில் -சொல்லியும் கூட.
சிறுவர் அடிமை -அரங்கேறுகிறதே…..
உலகமே கண்விழித்துப் பாரும்.
பார் எங்கும் பிறந்திட்ட பாலகனின்.
வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிடுவாய்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...