அம்மா அப்பா தம்பி தங்கை.அண்ணா
என்ற பாச உறவுகளுடன் –கூடி மகிழ்ந்த வீடல்லவா.
சுற்றி திரிந்தோம் திண்ணைகளில்.
சுகமாய் இருந்தோம் – அப்போது.
அன்பும் உறவும் சூழ்ந்திடவே.
சுகமாய் இனிதாய் இருந்த வீடல்லவா.
முன்பு மூடிய சுவருடன் உள்ளது -எங்கள் வீடு
இப்போ திறந்த வெளிதனில்
ஒற்றை சுவருடன் நிக்கிறது
வீட்டை சுற்றி பூஞ்செடி வைத்து
நந்தவனம் போல இருந்த வீடு.
இப்போ பாலைவனமாக இருக்கிறது.
எங்கள் குடும்பத்தில் உள்ள கல்விமான்கள்
அத்தனைபேரும் பிறந்து வளர்ந்து
படித்த வீடு- இதுஅல்லவோ.
வீட்டை உருவாக்கா என்அப்பா என் ஆத்தால்
என்ன வியர்வை சிந்திருப்பார்கள். ??
எங்கள் வீட்டிடைப் பாரும்
பட்ட துன்பம் அழகாய் தெரியும்
புத்தாண்டே நீ வந்திடுவாய்
எங்கள் வீட்டில் நாங்கள் –வாழ்ந்திட
வாழ வழி செய்யும்-எத்தனையோ
மனிதப் பிறவிகள் துன்பத்தில் –வாடுகிறது.
அவர்கள் வாழ்விலும் எங்கள் வாழ்விலும்
புது இல்லங்களில் புகுந்திட
புது வசந்தம் வீசிடுவாய்..புத்தாண்டே.
கொட்டும் பனியிலும் கொட்டும்-மழையிலும்
குடும்பத்தை பிரிந்து தன் குடும்பத்தை விட
நாடே நமக்கு மேலானது என்று எண்ணியபடி.
உள்ளக் கிடக்கையில் உணர்வுகள் தேங்கி நிக்க
இரவு பகல் விழித்து. நாட்டு எல்லைப்புறத்தில்
காவல் காக்கும் வீரர்கள் எத்தனை.
நாட்டுக்கு நாடு நடைபெறு யுத்தத்தை
மலருகிற புத்தாண்டில் அமைதியாக்கிடுவாய்.-புத்தாண்டே.
துன்பப்படும் மக்களுக்கு புதவசந்தம் வீசும்-புத்தாண்டே
நாட்டுக்கு உழவே தலைசிறந்து என்று
எண்ணியபடி அல்லும் பகலும் வியர்வை-சிந்தி
எண்ணிய சிந்தனையில் ஏர்பிடித்து
நிலம் உழுதும் விவசாயின் வாழ்க்கையில்.
வரலாறு கானாத.விளைச்சளை –அள்ளி
கொடுத்துடுவாய் புத்தாண்டே.
புத்தாண்டே நீவருக.
எங்கள் வாழ்வில் புதுவசந்தம்-தந்திடுவாய்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-