பிரிவுகளை தாங்கிய உறவுகள் வலிகளையும் தாங்குதே……..
எம் தமிழ் உறவுகள் பிரிவுகளையும்
வலிகளையும் தாங்கிக் கொண்டு
எரிகின்ற தீப் பிளம்பின்
மத்தியில் உறவுகளை இழந்து
வலிகள் தாங்கிய உள்ளங்களாக
வாழ்கின்றார்கள் எம் உறவுகள்
பிறப்பில் இருந்து
இறப்பு வரைக்கும் வலிகளை-தாங்கி
வாழ பளகிவிட்டது எம் உறவுகள்
சொந்த இடம் விட்டுப்-பிரிந்து
சொந்த உறவுகளை விட்டுப் பிரிந்து
அன்னியவர் நாட்டில் அனாதையாக
வாழ்விடம் கோரி வரிசையில்
கொட்டும் மழையிலும் பணியிலும்
கால் வலிக்க வலிக்க நிக்கின்றார்கள்
பிரிவுகள் தாங்கிய எம் உறவுகள்
நெஞ்சில் அனையாத
எரிகின்ற நிஜமான வலிகளை
தாங்கி வாழ்கின்றார்கள்
சொந்தமாய் கட்டிய இரண்டடுக்கு-மாளிகையில்
சுகமாக வாழ்தார்கள் அன்று
இன்று நான்கு பக்கம்
திறந்தாடியாக இருக்கின்ற
தரப்பாலால் வீடுகட்டி
பிறக்கும் குழந்தைக்கும்-இதுதான்
நம் நிரந்தர வீடு என்று
பிஞ்சு உள்ளத்தில் விதைக்கின்றார்கள்
பிஞ்சு உள்ளமும் அதை ஏற்கிறது
பிரிவுகளை தாங்கிய உள்ளங்கள்
இன்று வலிகளையும் தாங்கிக் கொண்டு
வாழ பளகி விட்டார்கள் -எம் இனம்
அன்று பசி என்றால்
வட்டி நிறைய சோறு -போட்டு
வயிறு நிறைய உண்டோம்
அன்று சோறு போட்ட தாய்
இன்று இல்லையே—-
பெற்ற தாய் இருந்திருந்தாள்
இன்று பெற்ற பிள்ளையின்-பசியறிவாள்
இன்று அந்த தாய் இல்லையே
இருந்திருந்தாள் இந்த வலிகள்-இருக்காது
இப்படியான பிரிவுகளை தாங்கிய உறவுகள்
எத்தனையே இன்றும்-அந்த
வலிகளை சுமந்த கொண்டு வாழ்கிறார்கள்
எம் தமிழ் உறவுகள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...