காலங்கள் உருண்டோட
வாழ்வில் வசந்தங்களும்
சோகங்களும்-வந்தாட.
உடலை விட்டுப் பிரிந்த-ஆவிபோல
அவளின் நினைவுகள்
என்னை பந்தாடுகிறது.
துள்ளி எழும் இதயம் -கூட
ஒருகனம் சிந்திக்க வைக்கிறது.
குயிலின் இன்னிசை கானம்-போல
அவளின் இன்னிசை குரலால்
என்னை நீ கூவி அழைக்கையில் காதலை சுமந்துவரும் குரலோசை
மௌனித்தது
பின்புதான் அறிந்தேன்
மின்சாரத் தடையென்று.
‘
கன்றுக்குட்டியை துலைத்த
தாய் பசு.துவண்டு அழுவது-போல.
என் விழிகள் இரண்டும்
உன்னை பார்த்த நாள் முதல்
உறங்க மறுக்கிறது…..
என் விழியில் வழிந்த கண்ணீர்துளிகள்
நான் உறங்கும்-தலையணையில்
மழைத்துளியாக -தூவியது.
உன் நினைவில் -நான் விடும்
சுவாசக்காற்றில் -ஈரம் காய்கிறது……
தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ் அச்சடிக்க வேண்டியதால் அனுப்பாதவர்கள் விபரங்களை அனுப்பவும்
கட்டுரைப் போட்டி முடிவுகளை சகோதரன் பாண்டியன் வலைப்பூவில் பார்வையிட இதோ முகவரி
http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-