அன்பான உறவுவைத் தேடி தேடி
வாழ்க்கை நீண்டு போனது
காதல் சுகங்கள் சுமையேற
சோர்ந்து போனது உள்ளக்கிடக்கை
அவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்
திசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை
சோகங்களைத் தரும் காதலை விட
அவளிடம் இருந்துவரும் அழைப்பே
என் காதலுக்கு ஒரு சுகம் தரும்
அவளிடம் இருந்து வந்த கடிதங்கள்
என் செஞ்சில் ஒரு இன்னிசை
புயல் யுத்தம் செய்தது.
சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
வானத்தில் பறக்கச்சொன்னது.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா…
தாயின் வயிற்றில்பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
சாகும் வரை காதல் என்ற உறவே
பிரியாமல் எப்போதும் நிலைத்திருக்கும்
நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
என்னுள் விதைத்து விட்டாய்
நாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்
நான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்
அது உனக்கு புரியுமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-