என்னைப் பெத்த தாயே-என்னைஎதுக்கு பெத்தா?
தலையில் கல்லை சுமக்க பெத்தாயா
தரணியில் புகழ் சூட பெத்தாயா?
என் பிஞ்சு மனசு வேக வேக
உன் கல்லு நெஞ்சு இளக வில்லையா.????
செங்கல்ச்சூழ வெப்பத்திலே
பட்டு பட்டு என்மனம் வெந்து வெந்து -போனதம்மா.
புத்தகத்தை சுமக்க வேண்டிய கையில்
தலையில் கல்லைச் சுமக்கிறேன்-தாயே
பெத்துவிட்ட நீ கண்மறைந்து போனாயே
பெத்து வளத்த அப்பனும் வேறஒருத்தியை-தொட்டதனால்
கடசியில் என்னை விட்டு விட்டுப்போனாறே
இத்தனை துன்பத்தையும் தரணியில்
சுமக்கவைத்த தாயே.
இதனை பார்ப்பதற்கு நீ இல்லையே –தாயே
உன் பிள்ளை மனம் வெந்து வெந்து
ஒரு சான் வயிற்றுக்காய்
தினம் தினம் தரணியில் கண்ணீரை -வடித்து வடித்து
தினம் தினம் கல்லை சுமக்கிறேன் தாயே.
என்னை பெத்த தாயே என்னை
உன் வயிற்றில் நான் வளரும் போது.
என்னை கருவிலே அழித்திருக்கலாம்-தாயே…!!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-