அரும்பு மீசை துளிர் விடும்-காலம்
உன்னை உயிருக்கு உயிராய்-காதலிச்சேன்
நீ இல்லாமல் நான்- இல்லை
நான் இல்லாமல் -நீ இல்லை
என்ற ஈறெடுக்கு தொடர்களுக்குள்
சிட்டுக்குருவி போல் -பறந்து
காதல் வானில் சிறகு -விரித்தோம்
பெண்ணே தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
உன் அப்பன் உன் ஆத்தாள்
என்னப்பன் என்னாஆத்தாள்
இரண்டுபேரும் சங்க கூட்டம்- போட்டு
ஊர்முழுக்க விலாசமாய்
திருமண வாழ்த்து மடல்-கொடுத்து
அக்கினி சாட்சியாய்
அருந்ததி-பார்த்து
அம்மி மிதித்து-நடக்க இருக்குது
இருவரி மணக்கோலம்
அதை மறந்து போகப்போகிறாயா?-பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
காதலன் காதலியிடையே
வாய்ப் பேச்சால் வீன் பழிவருவது-வழக்கம்
அந்த வீன் பேச்சை நிறுத்தி விடும்-பெண்ணே
போர்கோலம் கொள்ளாமல்
பொறுமை காத்திடும் பெண்ணே,
நம் இருவரின் பாச உறவை
தூக்கி எறிந்து விடாதே -பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
காதல் வானில் சிறகை விரிக்கும்-காலத்தில்
நாம் இருவர் நமக்கிருவர்
என்று அடிக்கடி சொல்வாயே-பெண்ணே
அந்த வார்தைக்கு கை விலங்கு
பூட்டுப் போட்டுவிட்டாய் -பெண்ணே
அந்த கை விலங்குப் பூட்டை
உடைத்தெறிய -வந்திடும் பெண்ணே
வந்திடும் பெண்ணே
தாண்டாதே தாண்டாதே
வாசற் படியைத்தான் -தாண்டாதே
பிரியாதே பிரியாதே
காதலனை விட்டுப் பிரியாதே
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-