


நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்.சிறுகதை(பாகம்-02) முதற் பக்கத்தின் தொடர்ச்சி……… அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழ்வாதுதான் வழக்கம்
இருந்தாலும் பெற்றமனசு சும்மா இருக்குமா? ஆனந்தியின் தாயனவள் தன் கஸ்டத்தின் பெருந்தன்மையை உணர்ந்து பாக்கத்து வீட்டுக்குப் போய் பாத்திரங்கள் சுத்தம்செய்தல் வீடுகளைசுத்தம்செய்தல் போன்ற வேலைகளை தன் நிலையை உணர்ந்து செய்து வந்தாள் அதில் ஒரு நாளைக்கு கிடைக்கும் 30ரூபா பணத்தை வைத்து அன்றாடம் வயிற்றுப் பசியை தீர்ப்பதுதான் வழக்கமாக இருந்துவந்தது.எப்படி கஸ்டப்பட்டாலு தன் மூன்று பிள்ளைகளையும் எப்படியாவது படிப்பிக்க வேண்டும் என்று முழு தன்நம்பிக்கையை மனதில். வளர்த்தாள் . அன்று ஒருநாள் ஆனந்தியின்; ஊருக்கு வெளி நாட்டில் வேலைஎன்று ஏழை மக்களின் பணத்தை பிடுங்கும் பிசாசு வந்தது.அதுதான் வெளிநாட்டக்கு வேலை என்று ஆக்களை அனுப்பும் ஏஜென். அவன் ஆனந்தியின் வீட்டக்கு வந்து ஆனந்தின் தாயிடமும் தகப்பன் இடமும்.ஆசைவார்தையை.எழும்பு இல்லாத பலபக்கம் வளைந்து நெழியும்.நாக்கினால் அதுமட்டுமா வீட்டுக்கு வந்த ஏஜென் கொஞ்ச நெஞ்ச வார்த்தையா.சொன்னான்.அம்மா நீங்கள் கஸ்டப்படுகின்றீர்கள் உங்கள் மகளை வெளிநாடு அனுப்பினால் நல்லா இருக்கலாம். உங்க கணவருக்கு இதயநோயிக்கு வைத்தியம்பார்க்கலாம்.என்றுபலஆசை வார்தைகளை வீசினான்;.அதில் மோகம் கொண்டதாயனவள் ஆனந்தியை வெளிநாட்டுக்கு அனுப்ப.தன்னிச்சையாக முடிவெடுக்கின்றால். ஆனந்தியின் தாயின்முடிவால் அவளும் தன்குடும்ப வறுமைநிலையை மனதில்சுமந்தவாறு.வெளிநாடு செல்லபுறப்படுகின்றால்………………….
பாகம் (03) தொடரும்…………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நம் நாட்டுப் பெண்களுக்கு வெளிநாட்டில் வேலையாம்….சிறுகதை பாகம்(01)
ஆனந்திஅழகான மாநிறம் கொண்ட பெண்.நீண்ட கூந்தளும் கொண்டு அமையப் பெற்றவள்.அவளுக்கு அம்மா.அப்பா.ஆசைக்கு 2தங்கையும் ஒருதம்பியும் என்று மிக அழகான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள்.அவள் பிறந்து வளர்ந்த எல்லாம் இலங்கை அவள் சாதாரணமாக 8ம் வகுப்பு படித்தவள் அவளுடைய குடும்ப சுமையால்.அவளுடைய படிப்பை தொடர முடியாமல் போயிற்று.இருந்தாலும் அவளுடை குடும்ப பின்னனியை பார்த்தாள் அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ளும் நன்றாக படித்தவர்கள்.இருந்தாலும் ஆனந்தியின் மனதில் ஒரு வீராப்பு இருந்தது.
அவளுடைய மாமா.மற்றும் சித்திமார்ள் .போன்று(அதாவது சொந்தங்களைப் போன்று) தானும் படித்து தன்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசையை வளர்த்தால்.அந்த ஆசை தீர்க்கமுடியாத ஆசையாக மாறியது.
என்னதான் செய்வது.யாரை இறைவன் விட்டு வைத்தது.அவளுடைய அப்பா ஒரு இதய நோயாளி.சில காலங்களாக துன்பபட்டு வேதனைப்பட்டு வாழ்ந்து வருகின்றார்.ஆனந்தி வாழ்ந்த வீடானது.வைக்கோலால் மேயப்பட்ட வீட்டில் வாழ்ந்து வந்தாள் அவளும். உறவுகளும்.ஆனால் ஆனந்தி.பிறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்தில்தான் மிகவும் அடக்கம் பணிவு அன்பு கொண்டவள்.இருந்தாலு.அவளது கிராமத்தில் வசதி படைத்தவர்கள் என்று.சொல்லும் அளவுக்கு யாரும் இல்லை.அன்றாடம் கூலித் தொழில் செய்து அன்றாடம் வாழ்வதுதான் வழக்கமாக இருந்த வருகிறது.
சிறுகதை.தொடரும்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-07) பெருங்கதை நிறைவுப் பகுதி
இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் தன் மனதில் இருந்த வார்தைகளை தங்கையின் மேல் கொட்டிவிட்டுச் சென்றார்.அத்தோடு அண்ணா மகள் கலியாணம் அச்சாணி உடைந்த தேர்போல நின்று விட்டது சில மாதங்கள் கழிந்த பின் அவளுடைய நண்பி லீலா போன் பன்னினால் இருவரும் சுகம் விசாரித்தன பின்பு லீலா தன் மகளின் கலியணத்தைப் பற்றி பேசினால் என்னுடைய மகள் வங்கியில்தான் வேலை செய்கின்றால் அவலுக்கும் வயதாகிற்று நானு பல இடங்களில் ஓடி ஆடி மாப்பிள்ளை பார்தேன் வரதட்சனை மிகவும் அதிகமாக கேட்கின்றார்கள் என்னதான் செய்வது என்று தொரியாமல் அலை மோதினால் லீலா.
அந்த வேளையில் மாலா சொல்லுகின்றால் நீ என் வாழ்விலும் என் மகன் வாழ்விலும் ஒளி விளக்கு ஏற்றினாய் உன்னை எப்படி மறப்பது என கம்பீரமான குரலில் சொன்னால் அதலாம் விடு மனிதனாய் பிறந்தால் மனிதனுக்கு மனிதன் உதவி செய்து வாழ்வதுதான் பண்பு.என்றால் லீலா.அந்த வேளையில் மாலா சொல்லுகின்றால்
“நீ எங்கேயும் ஓடி அலை மோத வேண்டாம் என் மகனை உன் மகளுக்கு திருமணம் செய்து தருகின்றேன் என்மகனும் வங்கியில்தான் வேலை செய்கின்றான். அந்த கனப் பொழுதில் லீலாவின் மனதில் புன்னகை
பூத்தது அந்த “சிமணி நேரம் சிலமுடிவு” மாலா எடுத்த முடிவாள் இருவருக்கும் திருமண நாள் நிச்சைக்கப் பட்டு சில நாட்களில் இனிதே திருமணம் நடைபெற்றது. மாலா சில மணிநேரம் சில முடிவு எடுத்த காரணத்தாள் இரு குடும்பத்தின் வாழ்வில் ஒளிவட்டம் விசியது.”
“கடுவளவு உதவி செய்தாரை நாம் சிறிதளவும் மறக்ககூடாது”
(சிலமணி நேரம் சில முடிவுகள்) என்ற பெருங்கதை (7)வது பாகத்துடன் நிறைவு பெருகிறது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிலமணிநேரம் சில முடிவுகள்.(பாகம்-06 இது ஒரு தொடர்கதை)
அதைய நேரத்தில் மாலாவின் நண்பி லீலாவும் தன் மகளுக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்தாள் அவளுடைய வாழ்கையும் மலாவின் வாழ்கையைப் போலதான் அமையப் பெற்றது விழா முடிந்த பின்பு மாலாவும் .லீலாவும் இரண்டு பிள்ளைகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு உணவகத்தில் மதிய உணவு உண்டார்கள் அதைய நேரத்தில்தான் இருவரின் பிள்ளைகளும் சங்கமித்தார்கள்.ஆனால் ஒருவருக்கு ஒருவர் பேச வில்லை.மதிய உணவு உண்ட பின்பு வீடு சென்றார்கள்.
இருவருடைய பிள்ளைகளுக்கு பட்டமளிப்பு விழா முடிந்து (04) மாதங்கள் கழிந்த நிலையில்.இருவருக்கும் வங்கியில் வேலை கிடைத்தது அந்த வேலையில் மாலாவின் மனசு வேற்றுக் கிரகத்தில் இருப்பது போன்ற ஒரு வித மகிழ்ச்சிவந்தது வேலைசெய்து மாதாந்தம் (5000 ரிங்கிற்)வெள்ளி பணம் கிடைத்தது. இப்படியாக வேலை செய்து கொண்டு இருக்கும் போது மாலாவின் மூத்த அண்ணன் தன் மகளுக்காக மாப்பிள்ளை கேட்டு வீட்டுக்கு வந்தார்கள் இந்த விடயத்தை மாலா தன் மகனுக்கு சொன்னால்
அந்த வேலையில் மகன் சொல்லுகின்றான்
“அம்மா நம்மளை அவமதித்தவங்கள் அல்லவா? அவங்களை நம்ம அவமதிக்க இதுதான் சந்தர்ப்பம் அம்மா”
என்ன என்றுதாய் கேட்டால் அதற்கு சொல்லுகின்றான் ஆமாம் சொல்லு மகனே என்றால்
நம்மட வீட்டுக்கு பரிசம்போட பக்கத்து வீட்டு உறவுகளுடன்.வருவாங்க அந்தநேரத்தில் நாலு பேருக்கு மத்தியில் நான் வேண்டாம் என்று சொல்லுவேன் நீயும் வேண்டாம் என்று சொல்ல வேண்டும் அந்த நேரத்தில் ஏன் என்ற கேள்வியை கேட்பார்கள் அவர்கள் செய்த கொடுமையை அந்த நேரத்தில் பக்கம் பக்கமாக புட்டு வைக்க வேண்டும் என்று மகன் சொன்னான்.
முhலாவின் வீட்டுக்கு பரிசம் போட வந்தார்கள் தங்கை என்று கூப்பிடாதவங்க தன் காரியம் வெல்ல வேண்டுமென்ற காரணத்தால் மாலாவை தங்கை என்று அன்பான வார்த்தையாள் கூப்பிட்டார். என்ன என்று கேட்டாள் மாலா உன்மகனை என் மகளுக்கு திருமணம் செய்ய நீ சம்மதிக்க வேண்டும் என்று சொன்னார் அந்த வேலையில் மாலா ஆத்திரத்தில் சொல்லுகின்றாள்.
“என்மகன் துறவியா வாழ்ந்தாலும் பறவாயில்லை அல்லது ஒரு பிச்சைக் காறியை கட்டிநாலும் என் மகனை உன் மகளுக்கு கட்டித்தர மாட்டேன் என்ற பிடி வாதத்தடன் நாலு சனங்களுக்கு மத்தியில் சொன்னால்”
மாலா.இதனால் ஆத்திரமடைந்த அண்ணன்………………………..
தொடரும்………………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிலமணி நேரம் சிலமுடிவுகள்(பாகம்-05 இதுஒரு தொடர்கதை)
மாலாவும் அவளுடைய நண்பி லீலாவும் ஒன்றாக ஒரே கம்பனியில் வேலை செய்கின்றார்கள் இரண்டு பேரும் தேனீர் இடைவேலை நேரத்தில் சிற்றுண்டி சாலையில் சிற்றுண்டி உண்டபடி தங்களின் எதீர் காலாம் பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள் இப்படியாக இருவர் நட்பும் வெகு நீண்ட நாள்களாக ஓடிக் கொண்டு இருந்தது.
மாலாவின சகோதரங்கள் மாலாவின் கணவர்; இறக்க முன்பு மாலாவின் வீட்டுக்கு வருவதில்லை. ஒரே ஒரே தங்கச்சி இருக்கின்றாள் என்று கூட மனதால் கூட நினைத்து கூட பார்ப்பதில்லை. இதனால் மாலாவும் இந்த விடயத்தை கருத்தில் கொள்வதில்லை. இதனால் அவளுடைய மனதில் ஒரு வெறுப்புத் தன்மை ஏற்ப்பட்டது. நம்மட அண்;ணா சகோதரந்தான் நினைத்துப் பார்ப்பதில்லை என்றாலும் பெண்சகோதரம் கூட நினைத்துப் பார்ப்பதில்லை. என்று தன் மனதுக்குள் நினைக்கின்றாள.;
“எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள் தான்” என்று தன் மனதுக்குள் நினைத்தாள்.
மாலாவின் மகன் கமல் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றான் அவனுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறுகின்றது அதற்காக அவள் பல்கலைக் கழகத்திற்கு செல்லவேண்டிய நிலை ஏற்ப்பட்டது.மற்றப் பிள்ளைகளின் தந்தையும் .தாயும் சகோதரங்களும் வரகின்றார்கள் ஆனால் மாலாவுக்கு சகோதரங்கள் கூட வரவில்லை என்று தன் மனதக்குள் நினைத்து விம்மி விம்மி அழுகின்றாள். அந்த வேலையில் கமல் சொல்லுகின்றான் நான் உனக்கு இருக்கின்றேன் உனக்கு என்ன கவலை என்னை எப்படியும் கஸ்டப் பட்டு ஆளாக்கி விட்டாய் நீ வீட்டில் காலாட்டிக் கொண்டு மகாராணி போல இரு என்று கண்ணீர் ததும்பிய படி சென்னான் கமல்
எனக்கு பட்டமளிப்புவிழா முடிஞ்ச பின் எனக்கு வேலை கிடைச்சிடும் உன்னை பைங்கிளி போல பார்ப்பேன் அம்மா என்று இரு விழிகளும் கலங்கிய படி சொன்னான் அந்த வேலையில் மாலா மகனை கட்டியனைத்து முத்தமிட்டாள் மாலாவின் மனதில் சந்தோசப் புயல் வீசியது அவள் மனதில் ஒருவித உறுதியும் ஒரு வித ஆழ்ந்த பாசமும் வந்தது. அதைய நேரத்தல்………….
தொடரும்……….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாலாவுக்கு எப்படிப் பட்ட இன்னல்கள் வந்தாலும் எப்படிப் பட்ட இடிகள் விழுந்தாலும் அவளின் இலட்சியம் தன் மகன் கமலை படிக்க வைக்க வேண்டும் என்ற சிந்தனைப் பிடிவாதம் கொண்டவளாக இருந்தாள் ஏதோ ஒரு விதமாக மகன்படித்து.பல்கலைக்கழகம் சென்று பொறியாளார் படிப்புபடித்தான்.மாலா தன் மகனை படிப்பதற்காக தன் கணவனின் இழப்பீட்டுத் தொகைப் பணம் போதாமல் இருந்தது. என்னதான் செய்வது மகன் அதுவும் பல்கலைக் கழகத்தில் பொறியாளார் பாடத் துறையில் படிக்கின்றான் அதுவும் மாதாமாதம் படிப்புக்காக பணம் கட்டவேண்டும் என்னதான் செய்வது என்று தொரியாமால் நிலத்தில் உக்காந்தபடி நிலத்தை கிறீக் கொண்டு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் போது.
அக்கா தண்ணீர் தருங்கள் என்ற ஓசை கேட்டது யார் இங்கு தண்ணீ கேட்பது என்று மாலா வினாவினால்? அந்த வேலையில் மாலா கேட்கின்றால் நீங்கள் எங்கு இருக்கின்றேர்கள் என்று கேட்டால் மாலா. அதற்க்கு.நான் மலேசியாவில் பினாங்; என்ற மானிலத்தில் இருக்கின்றேன் என்றும் என்னுடைய பெயர் (லீலா) என்றும் தன்னை அறிமுகப் படுத்துகின்றால். மாலாவின் வீட்டுக்கு தண்ணீர் குடிக்க வந்த லீலாவும் .மாலாவும் நண்பார்கள் ஆகின. அதன்பின்பு.இருவரும் சிலமனி நேரம் பேசிக் கொண்டார்கள்.மாலாவி வாழ்கை போலதான் லீலாவின் வாழ்கையும் உள்ளது. என்று தங்களுக்குள் தாங்கள் பேசிக் கொண்டார்கள் அப்போது மாலாவிடம் லீலா தன்னுடைய தொலைபேசி இலக்கத்தை கொடுத்தாள் மாலா நீங்கள் பினாங் வந்தாள் போன் பன்னுங்க என்று மாலாவிடம் லீலா கூறினால்
ஆனால் லீலாவுக்க அழகான ஒரு பெண் பிள்னை உள்ளால் ஒன்றாக ஒரே பல்கலைக் கழகத்தில் படிக்கின்றார்கள் இந்த விடயம் இரு தாயுக்கும் தொரியவில்லை. சில நாட்கள் கழித்த பின் மாலா லீலாவின் தொலைபேசிக்கு போன் பன்னினால் அந்த வேலையில் இருவரும் மனமிட்டு பேசினார்கள் ஆனால் மாலாவுக்கு இரத்த சகோதரம் உள்ளது அண்ணா அக்கா அவர்கள் இருந்தும் எந்த வித நண்மையும் இல்லை ஆனால் அவள் மனதில் நினைப்பது சகோதரம் இல்லை என்றுதான் லீலாவிடம் உதவி ஒன்று கேட்கின்றால் உன்னால் செய்ய முடியுமா? என்று கேட்டால் அதற்கு லீலா செல்லுகின்றால் என்னால் முடிந்தளவு செய்கின்றேன் என்றால் என்ன உதவி என்று கேட்டால்
நீ வேலை செய்கின்ற கம்பனியில் எனக்கு ஒரு வேலை பார்க்க முடியுமா? என்று கேட்டால் மாலா ஆமாம் கட்டாயம் இந்த உதவியை நான் செய்கின்றேன் என்று லீலா கம்பிரமான குரலில் கூறினால்(4) நான்கு நாட்கள் கழித்த பின்பு கம்பனி முதலாளியிடம் போகின்றால் லீலா அந்த வேலையில் லீலா தன் மனதுக்குள் நினைக்கின்றால் சில நாட்கள் பளகி சில மணி நேரம் முகம் பார்த்து பேசிய நண்பிக்காக நான் இந்த உதவியை கட்டாயம் செய்ய வேண்டும் தன் மனதில் உறுதி எடுக்கின்றால்..தன் கம்பணி முதலாளியிடம் வேலை கேட்கின்றால் லீலா.தன் நண்பிக்காக….. அதை முதலாளி கேட்கின்றார்……
தொடரும்……………………
-நன்றி-
அன்புடன்-
-ரூபன்-
சிலமணிநேரம் சில முடிவுகள்(பாகம்-03)தொடர்கதை
நஸ்டஈடாக.200000(இரண்டு லட்சம்) பணத்தை வைத்துக் கொண்டு தன்பக்கம் வாதாடிய சட்டத் தரணிக்கு 30000(முப்பதாயிரம் பணமும்.) கொடுத்து விட்டு மிதிப்பணத்தை தன் சேமிப்பு புத்தகத்தில் வைப்பிலிட்டால்.
மாலா தன் கணவனுக்கு நஸ்டஈடு கோரியபோது கம்பனி முதலாளி வேறுமனே.20000 வெள்ளிப்பணந்தான் கொடுத்தார் அதை வாங்க மறுத்தாள் மாலாவைப்போல தத்துணிவு உள்ள பெண்கள் இன்றைய உலகில் வாழ்கிறார்கள் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள் இப்படிப்பட்ட பெண்கள் இருப்பார்கள் ஆனால் உலகில் எந்த மூலை முடுக் எங்கும் நடக்கின்ற அநிதிகளை தன்டிக் கேக்கலாம்.
மாலாவின் விட்டுக்கு கார்.மோட்டர்.வீடு வாங்கியதற்கான பத்திரம் வங்கியில் இருந்து வந்தது மாலாவின் புண்ணியத்தாள் தன் கணவனுக்கு கிடைத்த நஸ்டஈட்டுப் பணத்தை வைத்துக் கொண்டு மொத்தமாக எல்லாம் வங்கிக் கடனையும் கட்டினால் மாலாவின் மனதில் ஒருவித மனப் பூரிப்பு ஏற்ப்பட்டது ஏன் என்றால் தன்னை ஆட்டிப்படைத்த கடன் தொல்லையில் இருந்து மீன்டதாள்.மிதிப் பணத்தை வைத்துக் கொண்டு தன் மகனின் படிப்புச் செலவையும் தன் வீட்டுச் செலவையும்.பார்த்தாள்
மாலாவின் மனதில் தன் கணவனை நினைத்து ஒரு வித மனக் கீறல்கள் விழுந்தது
“தன் கணவன் உயிருடன் இருக்கும் வரைதான் மருமகள் பேரன்”என்ற உறவுகள் கணவண் இல்லாவிட்டால் அனாதைதான் சமூகத்தில் என்று தன் மனதுக்குள் வாசல் படியில் இருந்தவாறு யோசித்தாள் தன் கணவன் இறந்தும் கூட மாலாவுக்கு அவளுடைய மாமா.மாமி .மச்சான்.மச்சினிச்சி உதவி கூட இல்லை வாரத்துக்கு வாரம் மாதத்துக்குமாதம் வருடத்தக்கு வருடம் கூட வந்து பார்ப்பதில்லை இப்படியாக பல எண்ணக் கவலைகளை தன் மனதில் பூட்டிய வாறு மாலா வாழ வேண்டியவளாக ஆக்கப்பட்டால் அதையும் சகித்துக் கொண்டு……………….
தொடரும்…………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-