சிறகடிக்கும் நினைவலைகள்
All posts tagged சிறகடிக்கும் நினைவலைகள்
உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது.
உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன்
செம்மண்சாலையில் தென் மேற்கு பருவக்காற்று
திசை மாறி சுழண்டு சுழண்டு வீசுகையில்
நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை.
காற்றுத்திருடன் பிறை சூடி ஓடுகையில்
அவன் தாவி தாவி என்னிடமே கொண்டுவந்தான்
முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான்
இவளின் காதலன் இவன்தான் என்று.
குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள்.
முதல்நாள் பார்த்துப் பேசிய போது.
காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து நிலமகளை பார்ப்பது போல
உன் முகமும் கால்ப்பெரு விரலும்
நிலமகளின் மேனியின் மேல்
நீ வரைந்த கோடும் எனக்கு கீறல் சித்திரமாய் இருந்தது.
நீ சென்ற பின் அந்த சித்திரத்தில்
மூன்று இலக்கம் இருந்தது.
அது என்னவென்று பார்த்தால்.
ஒன்று.நான்கு.மூன்று(1.4.3)என்ற இலக்கம் இருந்தது
அப்போதுதான் நானறிந்தேன்
என் காதலியே நம் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டிவிட்டாய்.
அந்த நாளும் அந்த நேரமும் ஆண்டும்
தனிமைப் பொழுதில்
ஒருகனம் மீட்டுப்பார்க்க சொல்லுகிறது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடரும்………..
சிறகடிக்கும் நினைவலைகள் என்ற தொடர்பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள்-1
சிறகடிக்கும் நினைவலைகள்-2
வண்ணக்கோலங்கள் வாசலில் போடும் போது
வானவெளி பார்க்கும்மென்று
மழை பொழியும் கரு மேகம்
இருளாக பந்திலிட
பகலவனே ஒளிந்திடுவான்.
துணையாக நீ விரும்பும்
உன் காதலனே கருமேக இருளிலே
உனக்காக காத்திருந்தான்.
அந்தி நேரத்தில் யாருமற்ற வேளையில்
பொழுதுறங்கும் நேரத்திலே
புன்னகை பூத்தாயே.
இருளிலே உன் பல்லின் வெண்மையது
பளிச்சிடும் ஒளியாக மின்னியது.
நிரல் கொண்ட யானைகள் போல.
பனைமரத்தின் காதலி ஆலமர விழுதே
பின்னிப்பினைந்த மரத்தின் கீழ்
ஆயிரம் வார்த்தைகள் பேசினோம்
யாருமே அறியவில்லை.
அந்த பனைமரமும் ஆலமரமும்
நம் காதலுக்கு சாட்சியாக இருக்கிறது.
உன் நினைவு என் நெஞ்சில்
ஊஞ்சல் ஆடுகிறது என்பதை
என் கையடக்க தொலைபேசியில்
நீ அனுப்பும் குறுஞ்செய்தி.
தினம் தினம் என் in
boxஐ
நிரப்புகிறது
அதை அழிக்கும் போது
உன் உள்ளத்தில் இருக்கும் என் நினைவை
அழிப்பது போல உணர்வுவருகிறது…
தொடரும்…..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறகடிக்கும்நினைவலைகள் என்றதலைப்பில்
தொடர் பதிவுகள்தொடர்கின்றன.
பகுதிஒன்றைப்படிக்க இங்கேசொடுக்கவும்
சிறகடிக்கும் நினைவலைகள் -1

சிறகடிக்கும் நினைவலைகள்-2
அந்தமான் காதலியே
எந்தன்ஆருயிர்காதலியே
யாரின்வயிற்றில்நீபிறந்தாய்
இன்றுஎன்தோளில் சாய்கிறாய்
மன்னவளேஎன்காதலியே
உந்தன்நினைவுதான்
என்னைநிமிடத்துக்குநிமிடம்
வடம்பிடிக்கிறது
மெல்லத்திறந்தவாயினால்
மின்னல்வெட்டும்உன்சிரிப்பு
என்னைதினம்தினம்காவுகொள்ளுதடி
துள்ளிவிளையாடும்புள்ளிமானின்
அழகைவிடஎன்மனதுக்குநீதான்அழகியடி
முதல்நாளில்முதல்நிமிடத்தில்
ஒற்றையடிபாதையில் நீ தண்ணீக்கலசம்
சுமந்துபோகும்வேலையில்
யாரும்மற்றவேளையில்
வான்மேகம்கண்ணீர்வடிக்கையில்
பறவைகளும்தவளைகளும்
இன்னிசைகச்சேரி செய்ய
உன்னிடத்தில்முதல் தடவைபேசிய
வார்த்தைகள்என்னவென்றுஉனக்குதெரியுமா?
நீமறந்தாலும்நான்மறக்கவில்லை
ஏதோஎழுதுவதற்காகஎன்தினக்குறிப்பேட்டை
திறந்தபோதுஅந்தமந்திசொல்வந்தது…
அதுதான் சீய்….போங்க சீய்…..போங்க
என்றவார்த்தைசொல்லும்போது
மௌனத்தில்வெற்கிதலைகுனிந்தாய்…
தொடரும்………….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்பனைக்கதவுகள்திறக்க
விழியோரம்உப்புக்கண்ணீர்கசிய
வழிமேல்விழிவைத்து
வரும்பாதையை
இமைப்பொழுதும்கண்மூடாமல்
நெற்றிப்புருவத்தில்கைவைத்து.
தொலைநோக்கியபார்வை
என்மீதுசெலுத்துவாளேஎன்தாய்யவள்
மௌனம்கலந்தபுன்கைமுகத்தில்
பூத்துமலரும்வரை
சென்றபயணம்முடிவடைந்து
வீடுதிரும்புகையில்
சிலமணித்தியாலங்கள்தான்பட்ட
துன்பதைஅழகுவார்த்தையால்
சொல்லிஅடுக்குவாளே
அழகுதமிழில்என்தாய்யவள்
அம்மாவின்வீட்டில்சோறுசமைக்க
காலம்கடந்துவிட்டால்
அம்மாவைபெற்றெடுத்த
அம்மம்மாவீட்டுக்கு துள்ளிக்குதித்து
ஓடோடிஓடோடி சென்றால்
கட்டியணைத்து உச்சந்தலையில்முத்தமிட்டு
வட்டி நிறையசோறுபோட்ட அம்மம்மாவின்
நினைவைஒருகனம் மீட்டுப்பார்கசொல்லுகிறது
பிரக்கடிக்கும்வேளையில்
உச்சந்தலையில் மூன்றுதட்டுத்தட்டி
தண்ணீரகொடுப்பாவே அம்மம்மா
ஊட்டியசோறும்காட்டியஅன்பு
என்மனத்திரையில்
விவரணச்சித்திரமாய் ஓடுகிறது
அந்தஅம்மம்மாவுடன் சிலநாட்கள்
முகம்பார்த்து பேசியபோதுஎப்பபேரான்டிவருவா
பார்த்தசிலநாட்கள்
அழுகைசப்தம்ஒலிதான்ஒலித்தது..
மரணத்தின்விழிம்பில்சாய்ந்துவிட்டாய்.
மாறாததுயரங்கள் எங்கள்நெஞ்சில்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-