
எப்போது ஒளிரும் வசந்த காலம்.
பாரெங்கும் பரந்து கிடக்கும்
உலகினில்அகதி என்ற அடைமொழியுடன்
ஆயிரம் வார்த்தைகள் நெஞ்சினில்சுமந்து
வெடித்து சிதறியபட்டாசு
துகல்கள் போல
சிதறிக் கிடக்குதுஎம்மினம்.
கல்தோன்றாமண் தோன்றகாலங்களில்
கலை கலாச்சாரத்துடன் வாழ்ந்தவன்
எம்தமிழன்அல்லவா
விண்னுக்கு செய்மதியை அனுப்பி
அகிலமே வியக்கும் படி
உள்ள தகவலை உள்ளபடி
இன்றும்விஞ்ஞானத் துறைக்கு பறைசாற்றியவனும்
செய்மதி கோள் விண்ணில்பறப்பதற்கு
நேரக்கணிப்பீட்டை செய்பவனும்
எம்தழிழன்அல்லவா.
ஒரு நாட்டை அழித்து
கண்டம் விட்டு கண்டம் பாயும்
அணு ஆயுதங்கள் புதிய வடிவங்களில்
உயிர்ப்பித்து கொடுப்பவனும்.
எம் தமிழன்அல்லவா.
எத்தனையோ சாதனை
உலக அரங்கில்முத்திரை பதித்தும்
பட்டங்களும் பதவிகளும் வகிப்பதும்
எம் தமிழன்அல்லவா.
எமக்கென்று சொந்த இடமில்லாமல்
மாற்றான் நாட்டில்ஓரத்தில்
தொங்கிகொண்டு அன்றாடம்வாழ்கிறோம்.
தமிழினம் பரந்துபட்டு வாழ்ந்தாலும்
எமக்கென்று ஒரு வீடுகட்ட
ஒரு துண்டு நிலமேனும்
சொந்தமாய்இல்லையே
எப்போது ஒளிரும் வசந்தகாலம்….
எம் தமிழனுக்கு
தைப்பொங்கல் கட்டுரைப்போட்டியில்
வெற்றி பெற்றவர்களுக்கான
சான்றிதழ்&கேடயம்.பதக்கம்
இன்னும் சில நாட்களில் வந்தடையும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-