உன் நினைவில் நெஞ்சுக்குழிகாய்கிறது.
உன் நினைவில் நான்தினம் தினம் சாகிறேன்
செம்மண்சாலையில் தென் மேற்கு பருவக்காற்று
திசை மாறி சுழண்டு சுழண்டு வீசுகையில்
நீ நிழலுக்காக பிடித்து வந்த குடையை.
காற்றுத்திருடன் பிறை சூடி ஓடுகையில்
அவன் தாவி தாவி என்னிடமே கொண்டுவந்தான்
முன்பே காற்றுத் திருடனே அறிந்து விட்டான்
இவளின் காதலன் இவன்தான் என்று.
குடையை எடுத்து வந்து உன்னிடம் தந்த நினைவுகள்.
முதல்நாள் பார்த்துப் பேசிய போது.
காற்றின் காதலி நாணல் புல்
சாய்ந்து நிலமகளை பார்ப்பது போல
உன் முகமும் கால்ப்பெரு விரலும்
நிலமகளின் மேனியின் மேல்
நீ வரைந்த கோடும் எனக்கு கீறல் சித்திரமாய் இருந்தது.
நீ சென்ற பின் அந்த சித்திரத்தில்
மூன்று இலக்கம் இருந்தது.
அது என்னவென்று பார்த்தால்.
ஒன்று.நான்கு.மூன்று(1.4.3)என்ற இலக்கம் இருந்தது
அப்போதுதான் நானறிந்தேன்
என் காதலியே நம் காதலுக்கு
பச்சைக்கொடி காட்டிவிட்டாய்.
அந்த நாளும் அந்த நேரமும் ஆண்டும்
தனிமைப் பொழுதில்
ஒருகனம் மீட்டுப்பார்க்க சொல்லுகிறது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடரும்………..