
அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்
அன்டத்தில் நீ சுமந்தாய்-
தரணியில் நான் பிறக்க.
பத்து மாசம் -சுமை தாங்கி
பட்டினியும் நீ கிடந்தாய்.
பட்டபாடு யார் அறிவார்…………
கொசுக்கடியும் குளிர்காற்றும்
சில்லலென்று வீசினால்.
தாங்கமாட்டேன் என்ற காரணத்தால்
பூட்டிய அறைக்குள்ளே. என்னை
பத்து மாசம் சிறைவைத்தாயே…..
தண்ணீர்த் தாகம் பெருக்கெடுத்தால்
வற்றாத உன் உதிரக் கடலில்
தினம் தினம் நான் குளித்து
நீ உண்னும் உணவில் என் -காலம் கடந்த தம்மா.
எட்டி எட்டி எத்தனை உதை உதைத்திருப்பேன்
பூமியில் தவழ்ந்து பார்ப்பதற்கு
உன் வயிற்றின் அன்டமே வலியாய் வலித்திருக்கும்-தாயே.
தாயின் வயிற்றில் சில காலம்
கவலை அற்ற மனிதனாய் தூங்கினேன்
யார் கண்ணும் படக் கூடாது என்பதற்காய்
அவள் சுற்றி கட்டுவாள் சேலையாலே
என் தாயின் அன்பை நான் அறிந்தேன்
சேய் அறியாத தாய் மனம்
காட்டி அன்பு. என்றென்றும் அழிக்க முடியாது.
என்னை நீ பெற்றெடுக்க முதுகு வலி பொறுத்தாயே
பூமியில் நான் வந்தபோது நீ அடைந்தாய்- பரவசமே
நீ எனக்கு கருவில் உயிர் தந்து
உறவுகளை அறிய வைத்தாய்
நீ என்னை கருவில் -சுமந்த போது
அடைந்த துன்பத்தை விட-நீ
எனக்காக அடையும் துன்பம் -இப்போ அதிகம்மா.
உனக்காக நான் ஒரு விண்ணப்பம் எழுதுகிறேன்
பூமியில் நடக்கும் சமூக சீர்கேடுகளை
என் கண்ணால் பார்க்க -முடியாது தாயே.
மீண்டும் உன் கருவறையை தேடுகிறேன்
சில காலம் வாழ்வதற்காய்
மீண்டும் உன் மடியினில் சுமப்பாயே –தாயே.
கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-