
கடலோரம் வீடுகட்டி அலையோடு போனாம்
அலை வீசும் கடலோரம்
அழும் நெஞ்சம்மெல்லாம் துயர்றோரம்
வானுயரும் இராட்சத அலையே.
எங்கள் வாழ்வை இழக்கவைத்தாய்.
துயருறும் இதயங்களை. மீண்டும் மீண்டும் அழவைத்தாய்
கடல்ஏறப் படகில்லை நாம் வீச வலையிலை.
எங்களை வாழ வைத்த கடல் தாயே
எங்களை ஏன் கண்ணீரில் அழவைத்தாய்???
துயரங்களை யார் இடந்தான் சொல்வோம்.
அள்ளி அரவனைத்த பிள்ளைகள்
நெஞ்சுருகி பாசம் அள்ளித் தந்த –தாயவளை
அள்ளிச்சென்றாய் கடலையே.
பள்ளி செல்ல வழியிலை.
போகும்மிடமல்லாம் பினக்குவியல்
நாம் கும்பிட்ட கோயில் இல்லை நாம் வாழ்ந்த ஊரில்லை
சின்னஞ் சிறு பிஞ்சுகளை ஏன் கதற விட்டாய்.
இத்தனை துயரங்களையும் ஏன் தந்தாய் கடல்தாயே.
அழுவதற்கு என்று எவரும் மண்ணில் பிறந்ததில்லை
அழுதோம் அழுதோம் எங்கள் வாழ்வு சிறக்கவில்லை.
எங்கள் வாழ்வில் ஏன் இத்தனை காயம்
உன்னால் வந்தது வலியின் உச்சம்
உன்னால் வந்தது எங்கள் வாழ்வில் -சோகம்
தண்ணீரில் நின்று கூவிக் கூவி அழுதோம்
துரத்தி துரத்தி அடித்தது இராட்சத அலையின் கரங்கள்
மடிந்தது எங்கள் உறவுகள் –அதனால்
உப்பு நீர் சிகப்பாய் ஆனது அன்று.
இதுவென் வாழ்க்கை என்ற சோகம் வேண்டாம்-உறவுகளே.!
எம் உறவுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே
உறவினை இழந்தால் உறவுகள் முடியாதே…
புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
நம் வாழ்வை உயர்த்திவிடும் …….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-