-
இங்கு குறிப்பிட்ட (10) வெற்றியாளர்கள் தங்களின் பரிசுகளை பெற கிழ்க்காணப்படும் (இரண்டு)மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 1வது.2வது.3வது நிலைபெற்ற போட்டியாளர்கள் தங்களின் பரிசுத்தொகையை பெற என்னஆவணங்கள் தேவை என்பதை மின்னஞ்சலில் தெரியப்படுத்துகிறோம்
கடல்வளிப்பயணம் தொடர்சிறுகதை-01
All posts tagged கடல்வளிப்பயணம் தொடர்சிறுகதை-01
அன்பே ஆருயிரே…..என்
அருமை றோஜாவே!……….
கணவனின் விழிப்பு மொழியாம்!!
முத்து முத்தான கணவனின்-கையெழுத்தை.
அவளின் விழிகளில் வழிந்த
முத்து முத்தான கண்ணீர் துளிகள் -நனைத்தன.
கணவனின் கையெழுத்து கவிதையை.
மெல்ல மெல்ல படிக்க.
றோஜாவின் மனப் பதட்டம் தளர்ந்தது.
உயிரும் மெய்யும் புணையப்பட்டு
உயிர் கொடுத்த உயிர் எழுத்துக்களை.-படிக்கையில்
நான் இறைவனடி சேர்ந்து இராண்டு ஆயிற்று.
என்பதை நீ அறிவாய்.
என் இறப்பை நீ தாங்குவதற்குள்.
உன் இறப்பு வந்து விடும்
என்பதை நான் அறிவேன்.
வானி இல்லாத நிலாப் போல.
நான் இல்லாமல் -நீ
என்ன செய்வாய் கண்ணே!!!!!!
நாம் வாழ்ந்தபோது ஒவ்வெரு-நாளும்
நமக்கு அன்பர் தினந்தான்
ஆனால் என் றோஜாவிடம்
றோஜாகள் மட்டும் இருக்காது.
உன் கன்னங்களைத் தவிர.
அழாகான வாழ்கை என்பதை.
அன்பான வாழ்கை என்றும்
கற்றுத் தந்தவள் -நீஅல்லவா?………….
எனக்கு பெருத்தமான காதலியும் -நீ.
மனைவியான உன்னை –என்
என் உயிரி மூச்சாக சுவாசித்தேன்.
உன் உயிர் துடிப்பை
எப்படி வெள்ளைக் காகிதத்தில்-வடிப்பது.
தயங்காமல் உன்னை வடிக்கின்றேன்.
எனக்கு தாயும் நீதான்.
எனக்கு தாரமும்- நீதான்
எனக்கு தாதியும்-நீதான்
உன்னைப் பற்றி- சிந்திக்காத.
மணித்தியாலயங்களும்-கிடையாது.
நிமிடங்களும் கிடையாது.
வருஷம் ஒன்றாகி விட்டது.
எனக்காக நீ கண்ணீர் சிந்த வேண்டாம்
அன்பர் தினத்தன்று.
அன்புப் பரிசாக-என் றோஜாவுக்கு.
நான் அனுப்பிய றோஜாப் பூக்கள்
உன் கைக்கு வருமடி.
இந்த றோஜாப் பூக்கள்
வெறும் பூக்கள் அல்ல.
உன் துயரை துடைக்க வந்த தூதுவர்கள்
அன்பே உன் அன்பு
மகத்தானது என்பது- உண்மை.
என் மரணத்தை மறந்த விடு.
என்று ………சொல்வது போல.
றோஜாக்கள் ஒவ்வெரு ஆண்டும்.
அன்பர் தினத் அன்று.உன்னை –நாடிவரும்.
உன்னை நான் தேடி வருவது-போல.
ஒவ்வெரு ஆண்டும் பிப்பரவரி-14இல்.
நீ தூங்கயில்-பூக்காரி.
உன் வாசல் மணியடிப்பாள்.
ஆனால் எப்போதாவது-ஒரு தினம்.
மணியோசை உன் செவிகளில்-விழாவிட்டால்.
உன் வாசல் கதவு திறக்கப்பட விட்டாலும்.
பூக்காரி சாளைக்க மாட்டால்.
ஐந்து முறையாவது –உன்
இல்லம் நாடி வருவாள்
இல்லாவிட்டால் அக்கம் பக்கம் விசாரிப்பாள்.
நீ தங்கையாக கருதும் பூக்காரியிடம்.
நான் முன்பு சொல்லி வைத்தது போல்.
என் கல்லறைக்குப் பக்கத்தில்-நீ உறங்கு.
உன்கல்லறையில் றோஜாக்களை.
உன்னை தொந்தரவு செய்யாமல்
வைத்து விடுவார்கள்.
மீண்டும் ஒன்றாக சொர்க்கத்தில்-இணைகின்றோம்.
என் கண்ணே!!!!!!!…. றோஜா.
நீ முத்தமிட்ட றோஜா
கண்ணீரில் கரைந்து விட்டதுஎன்று-நினைக்காதே!!
அது சொர்க்கத்தில் கண்டிப்பாக
முத்தமிடும்.-றோஜாவே.
றோஜாக்கள் என்றும்-உனக்காகத்தான்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பிறப்பு என்னு-சக்கரம்.
சுழழ்வது -போல.
இறப்பு என்ற -சக்கரமும்.
உலகில் சுழழுது.
உலகில் மனிட பிறவி -எடுத்தவன்.
வாழ்வான் என்பது-பொய்.
ஆனால் மரணம் என்பது-உண்மை.
சாவுக்கு துணிந்தவன்.
தரனியில் சரித்திரம்.
படைக்க முடியும்
ஒரு தாயும் தந்தையும்.
விதைக்கும் விதையில்-அல்லவா!.
நாம் பிறந்தோம்.
தாயனவள் பத்து மாசம்(10).
தன் வயிற்றில் சுமாந்தவள்.
அந்த நேரத்தில் தாயின்-வயிற்றில்.
எட்டி.எட்டி எத்தனை- தடவை .
உதைத்தோம்-அல்லவா!.
அந்த உதையின் -வலியையும்.
பொறுத்துக் கொண்டு வாழ்ந்தால் -அல்லவா!
தாயின் வயிற்றில் இருந்து.
பிறந்தவுடன்-முதலில்.
நாம்.அம்மா. அம்மா.
என்று அழுகின்றோம்.
அந்த வேலையில் தாயனவள்.
அடையும் இன்பம்-மேல்.
அப்படி பெற்று.வளர்த்து.
நாலுபெயர் பார்க்க-வளர்த்த விட்ட.அன்னையை.
விட்டு நிரந்தரமாக பிரிவு.
ஏற்படுமல்லவா.-அதுதான்
இறப்பு.இறப்பு.
இந்த பூமியில் வாழ்கின்ற.
ராசாவா சரி.மந்திரியா சரி.
எல்லோரும் இறுதியில்.
இறப்பு என்ற ஆறு(06) மண்னுக்குத்தான்.
சொந்தம்.அல்லவா!.
இந்த மாய உலகில் நான் பெரிது.
அவன் பெரிது-என்ற போட்டி எதற்கு?????.
என்ற இறுமாப்புடன்- வாழ்கின்றான்.
இன்றைய .மனித குலம்.
மண்னுக்காகவும். நாட்டுக்காகவும்.
போட்டி போட்டு வாழ்கின்ற -சமூகம்.
கடசியில் என்னதான் கொண்டு.-செல்வது.
ஒன்றுமேயில்லை.
எதற்காக ஏன் மனிடா சண்டை போடுகின்றாய்.????.
இறப்பு என்ற உலகை அடைய முதல்.
பிறப்பு என்ற காலத்தில் சந்தோசமாக -வாழ்.
நீயும் வாழ்.
உன் சமூகத்தையும் வாழ பழகிக் .
கற்றுக் கொடு.
இந்த உலகில் -வாழ்ந்வர் கோடி.
வாழ்ந்து மறைந்தவர் கோடி.
மக்கள் மனதில் நிலையா வாழ்பவன்-யார்????.
சத்தியம் தர்மம் நேர்மை-மூன்று.
ஒருங்கே உள்ளவன்தான்.
மக்கள் மனதில் வாழ்வான்.
உலகிலும் வாழ்வான்.
காடுவரைப் பிள்ளை கடசி வரை யாரோ??????
என்ற பாடல் அடிகள் மூலம்.
நாங்கள் எப்படி வாழ்ந்தாலும்.
எங்கள்லிடம் நிலையா நிலைத்து-நிப்பது.
நாங்கள் செய்யும் புண்ணியம்-மட்டுமே.
இறப்பு என்பது இறைவனால்
படைக்கப்பட் ஒவ்வெரு ஜீவ னுக்கும்-உண்டு.
மானிடன் இறப்பது உறுதி.
இறந்த பின்பு வாழ வேண்டும்மென்று-நினைத்தால்.
வாழும் சில நாட்களில்-தர்மம் செய்.
இறப்பையும் பிறப்பையும்.
மனிடனால் மாற்ற முடியாது.
எம்மை படைத்த -இறைவனுக்கு.
மட்டுமே.முடியும்.
பிறப்பு என்பது இறைவன் -நியதி.
இறப்பு என்பது -உலக நியதி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடல் வழிப்பயணம் சிறுகதை (தொடர்ச்சி-பாகம்-05.துடன் நிறைவு கான்கிறது)
பாகம்:-01.02.03.04.05 என எழுதப்பட்டுள்ளது……இப்போது இறுதித் தொடர் தொடர்கிறது.பாகம்-05.
உறவுகளை ஏற்றிய வாறு கனடாவை நோக்கி கப்பல் பயணிக்றது.எங்களுடைய கப்பலுக்கு இயற்கை அன்னையால் எந்த ஒரு தீங்கும் வரக்கூடாது என்று எங்கள் மனதுக்குள் எங்கள் குல தொய்வங்களை.
வேண்டி நின்றோம்.
இரவு பகலாக (90)நாட்கள் கடலில் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது ஒவ்வெரு நாட்டு எல்லையும் கடக்கும் போது எத்தனை இடையூறுகள் வந்தது.அதையும் தாங்கிக் கொண்டு எங்கள் மாலுமி.எல்லாத்தையும் சமாலித்து கப்பலை ஓட்டிக் கொண்டுயிரந்தார்.கடலில் கப்பல் சொல்லும் போது.பெரிய பெரிய.இராச்சித அலைகளுக்கும் பெரிய பெரிய பனிக்கட்டிகளுக்கும்.பாறைக் கற்களையும் கடந்து. மிகவும் நுற்பமான முறையில். கெட்டித் தனமாக.கப்பலை ஓட்டினார்கள்.இரண்டு மாலுமிகளும்.
சரியாக ஒன்டரை. மாதம் கழித்த பின்பு எங்கள் இடம் கை வசமிருந்த . தண்ணீர். உணவு எல்லாம்.ஒர் அளவு குறைந்து கொண்டு வந்தது.காலையில் சாப்பிட்டால் இரவில்தான் சாப்பிடுவது.என்ற மாதிரி.நாள் ஒன்றுக்கு.இரண்டு வேலை உணவு என்ற அடிப்படையில் உண்டு வந்தோம்.மற்ற நேரங்களில் தண்ணீரை. குடிப்பதுதான்.இருந்தாலும் கடல் மார்க்கப் பயணத்தின் போது ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர்.உணவு பரிமாரிச் சாப்பிடுவதுதான் வழக்கம். கடத்த மூன்று மாதங்களில் எங்கள் வாழ்வில் சொல்ல முடியாத துன்பங்களை சுமந்து கொண்டு வாழ்ந்தோம்.அதே போல்(03) கழித்து நாங்கள் பயணித்த கப்பல் .கனடா துறைமுகத்தை.சென்றடைந்த போதுதான். மனசு ஒரு திருப்தியடைந்தது.அதன் பின்பு நாங்கள் ஒரு. நாள் பொழுதை துறைமுகத்தில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது…
மறு நாள் எங்களை ஒவ்வெருவராக இறக்கினார்கள்.எங்களுக்கு சாப்பாடு மற்றும் உடைகளும். சிறு குழந்தைகளுக்கு. பால்மா. விஸ்கட் உணவுப் பண்டங்களையும் தந்தார்கள்.அதன் பின்பு எங்களை தனித்தனியாக .சந்திப்புக்களை மேற்க் கொன்டார்கள்.அதிலும் பல இன்னல் களை சந்தித்தோம்.அதிலும் ஒருசிலரை கூட்டில் அடைக்கப்பட்ட கிளி போல சிறை வாழ்கையும் வாழ்ந்தார்கள்.சிலரை குடியுருமை கொடுத்து அன்நாட்டு பிரஜயாக்கினார்கள் அதில் நாங்களும் உள்ளடங்கப்பட்டோம் என்று இலக்கியா சொன்னால்.
நாங்கள் கஸ்டப்பட்டு கடல் வழிப் பயணமாக புறப்பட்ட மாதிரி எத்தனை நாட்டு ஏதிலிகள் சென்றுள்ளார்கள்.எத்தனை பேர் கடலின் பனிப் பாறையுடன் மோதுண்டு.கடல் நீரில் மூல்கி வரலாறும் உண்டும்.கடலலையால் அடித்துண்டு கடல் வாழ் உயிர் இனங்களுக்கு இறையாக போன கதையும் உண்டு.இப்படியான கடல் வளிப்பயணத்துக்கு எம்பக்கம் இறைவன் துணையிந்தால் நாங்கள் எடுக்கின்ற ஒவ்வெரு பயணமும் வெற்றி நடை போடும் என்பது திண்ணம்.
(ஆனால் எங்கள் இலக்கையும் அடைந்து விட்டோம். கனடாவில் குடியுருமை பெற்று விட்டோம்.)
{சிறந்த செயல் மிக்க துணிச்சலான முடிவை .நீங்கள் தான் எடுக்க வேண்டும்.-கடல் வளிப்பயணத்துக்கு}
{கடல் வழிப் பயணம் சிறுகதை நிறைவு பெற்றது.}
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடல்வழிப்பயணம் சிறுகதையின் தொடர்ச்சி(பாகம்-04)
கனடா வந்தால் சில சமயம் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திக்கலாம் என்று கூறினால்.
ஒரு(01) வருடம் கழித்த பின்பு எனது வேலையின் நிமிர்த்தம் கனடா சென்றேன். விமான நிலையத்தில்.
இறங்கியவுடன் எனது பணியின் நிமிர்த்தம் உடனடியாக வேலைக்குப் புறப்பட்டுச் சென்றேன் மீன்டும் பணியை முடித்து வந்து ஒரு நட்சத்திர கோட்டலில் தங்கினேன்.அடுத்த நாள் சில சாமன் வேண்டுவதற்கு கனடாவில் உள்ள .சுப்பா மார்க்கட்டுக்கு சென்றேன் அங்கு பொருட்கள் வேண்டி நிக்கையில்.
“அந்த வேலையில் அண்ணா…..அண்ணா….அண்ணா…… என்ற ஒரு பெரிய சத்தம் கேட்டது .சற்று நான் திரும்பி பார்க்கையில் என்னை இறுகி அனைத்த படி கட்டிப்பிடித்தாள் ஒரு. பெண் .அந்த வேலையில் .
நான் சற்று மொளனவித்துப் போனேன்.அதன் பின்பு சொல்லுகின்றால் .”இலக்கியா என்னை மதிச்சிங்கலா.என்று கேட்டால் ” நான் இல்லை என்று பதில் கூறினேன்”பின்பு சொல்லுகின்றால் இலக்கியா.தாயிலாந்தில்.தொடர் வண்டியில் நீங்கள் பயணம் செய்த போது நீங்கள் தூங்கிய போது.உங்கள் “தினப்பதிவேடூ) டயரியை எடுத்து தந்த நான்தான் அண்ணா என்று சொன்னால்.இலக்கியா.
அந்த வேலையில் இலக்கியாவிடம் கேட்டேன்.எப்படி பயணித்து வந்தனிங்க என்றும் அம்மா அப்பா எப்படி சுகமாக இருக்காங்களா?என்று வனாவிய போது. அதற்கு இலக்கியா அழுதால். எங்கட கடல் வளிப் பயணத்தின் போது என்னுடைய ஒரு தங்கையை இழந்தோம்.அண்ணா எப்படி என்று அவள் இடம் கேட்டேன்..
எங்களுடைய பயணனம் தாயிலாந்து நாட்டில்லிருந்து சுமார் (03)மாதங்கள் உள்ளடங்களான பயணம்.அதற்காக எனது தங்க சங்கிலி.எனது கை வளையல்.அம்மாவின் தங்கள் வளையல்.எல்லாத்தையும் தாயிலாந்தில் உள்ள நகைக்கடையில் அடகு வைத்தோம்.அதற்கு வைத்து சாப்பிடக் கூடியஅதாவத பழுதடையாமல் இருக்ககூடிய உணவுகளை வேண்டி வைத்தோம்.நாங்கள் தாயிலாந்துக்கு வந்து (01) மாதம் கழித்த பின்புதான் இரவில்(11.00பி.ப)எங்கள் உறவுகளை ஏற்றிய வாறு
புறப்பட்டது…
(தொடரும்………………..)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புத்தி கெட்ட சமூதாயத்தில்.
புத்துயிர் பெறுவதற்கு.
அத்தியாயம் படைப்பதற்கு.
அத்ம ஞானம் பெற்றிருந்தேன்.
என்னை அந்திரத்தில்- வாழவேண்டும்மென்று.
யார் விதித்த விதியோ-எனக்கு?.
மத்தியானம் கடைக்குப் போகயில.
மட்டைலெரி வந்ததடா.
மத்திமமா வந்து அடித்ததடா.
இது இறைவன் வித்த்த விதியா?-அல்லது.
தண்டணை விதித்த விதியா?
பட்டணத்தில் படித்த என் தம்பி.
பள்ளிக்குட விடு முறையில்.
பாசமறிந்த சொந்தங்களை-பார்க்க.
பதினாறாம் தேதி வந்திருந்தன்.
அன்புத்தாய் சேவல்- வேண்டி.
பால்ச்சொறு கொடுக்க.
பக்கத்து வீட்டு கறுப்பன்ணா -வீட்டுக்கு.
போன தாய்.
திரும்பி வரவில்லையென்று.
காத்திருந்த எங்களுக்கு.
நிற் கதியாய் நசல் செய்தி- வந்திருந்தது.
செல்லடி வீச்சினால்-உயிர் விட்டு வட்டாய்-என்று.
இது .இறைவன் தண்டணையா?அல்லது.
விதியின் தண்டணையா?.
எம் தேசத்தில் பரந்த-அருவி வெளியினிலே.
பச்சை பசல் எனக் காட்சி தரும்.
வேளாமையும்.
வேளான்மையை தொட்டுத் தழுவி-வீசி
வரும் தென்றல் காற்றை.
சுவாசித்த எம் தேசத்தில்.
இப்போது.கந்த காற்னை.
சுவாசிக்கின்றோம்.
இதமான மாசற்ற கற்றினை.
சுவாசிக்கும் காலம் எப்பொது மலரும்.
இதுவும். இறைவன் தண்டணையா? அல்லது.
விதியின் தண்டணையா?
அம்மாவை. அப்பா-சைக்கலில்.
ஏற்றி ஒற்றையடிப்பாதையில்-ஓரமா.
புளியம்பெக்கனை சத்தியால் ஊடறுத்து.-செல்கையில்.
சீறிட்ட புக்காரா விமானம்-டப்பென்று
குண்டு போட்டதனால்.
ஒற்றையடிப் பாதையில்-இரட்டையர்கள்.
உடல் சிதறி-மான்டர்.
ஒற்றையடிப்பாதையில் -ஒருசனம்.
இல்லாத வேலையில்-யாருமற்ற.
தேசத்தில்-அனாதையா கிடந்தார்கள்.
இந்த சோதனையும் .வேதனையும்-யார் அறிவர்.
இதுவும். இறைவன் தண்டணையா? அல்லது.
விதியின் தண்டணையா?………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடல் வழிப் பயணம்(சிறுகதையின் தொடர்ச்சி-பாகம் -03).
நாங்க போய்ச் சென்றால் எங்கட வாழ்கையில் நல்லாயிருக்களாம் என்றுதான்……………..
(கடந்த வாரத் தொடர்-02)
நீங்கள் அப்படி உங்கட சொந்தங்கள்ளிடம் போறது என்றால் உங்கள்ளிடம் கடவுச் சீட்டு (பாஸ்போட்).
இல்லையே.அப்படி என்றால் என்னன்று போகப் போகப்போகின்றாய்? என்று இலக்கியாவிடம் .அதற்கு கேட்டேன்.இலக்கியா சொல்லுகின்றால்.
அண்ணா நாங்கள் 5000 (யூரோ) கொடுத்து திருட்டுத் தனமாக (03) மாத பயணமாக கடலில் போகப் போகின்றோம என்றால்.அப்படி போறது என்றால் பயம் இல்லையா என்று இலக்கியாவிடம் கேட்போது.
என்ன அண்ணா கோள்வி கேக்கிறீர்கள். எத்தனை காலங்கள் எங்கட நாட்டில.செல் தாக்குதலுக்கும்.
விமான கொத்துக் குண்ட தாக்குதலுக்கும் பதுங்கி நிலக் கீழ் பங்கரில் உயிருக்காக.வாழ்ந்த நாங்கள்
எப்படி போய் மரனிச்சாத்தான் என்ன அண்ணா? என்று கேள்வியை தொடுத்தாள் இலக்கியா…
அந்த வேலையில் என்னால் பதில் கூறவோ முடியாமல் போனது. நான் சற்று மொளனம் சாதித்தேன்.அவள்.
தாயிலாந்து நாட்டில் இறங்கினால் அந்த வேலையில் இலக்கிய குடும்பம் வேறு திசையில் நகர்ந்தது.
நானும் வேறு திசையை நோக்கி. நகர்ந்தேன்.கடசியாக இலக்கியாவை தொடர் வண்டியில் இறங்கிய.
போதுதான் தாயிலாந்தில் கண்டேன்…அதன் பின்பு பார்க்க வில்லை. கடசியாக இலக்கிய தனது மென்மையான குரலில் சொன்னால் முகம் தெரியாத உங்களுடன் சில மணித்தியாலயம் பழகிய. காலங்கள்.என்னாலும் என் அம்மா அப்பா என் சகோதரங்களாலும் மறக்க முடியாது.அண்ணா.இருந்தாலும்
ஏதாவது வேலையின் நிமிர்த்தம் கணடா வந்தால் சந்திப்போம் என்று பதில் கூறினால். இலக்கியா.
தொடரும்……………………..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஈழ தேசத்தில் விசித்திரங்கள் நடேந்தெரிய கால கட்டங்களில்.
ஈழ நாட்டில் பிறந்து வளர்ந்த.
நம் அன்னிய நாட்டுக்கு எம்யுயிரை காப்பாற்றும் முகமாக
புறப்பட்டுச் செல்வோம் என்ற சிந்தனை.
நோக்குடன் விலை மதிப்பிட முடியாத வாழி வேன்டிய
சின்னஞ்சிறு உயிர்களையும்.பெற்ற பிள்ளைகளின்.உயிர்களையும்.
எம் சொந்தங்களின் உயிர்களையும்.வினாக காவு கொடுத்துதோம்.
செல்வீச்சுக்கும்.விமானத் தாக்குதலுக்கும்
துப்பாக்கி சன்னங்களுக்கும்மாக.அது மட்டுமா.
எம்மடைய உடமைகளையும் இழந்து நிர்கதியாகிய நிலையில்
கிழிந்த உடைகளுடன்.கண்ணீரும் .தண்ணீரும் துவைந்த வாழ்கையாக
வாழ இறைவன் எம் தமிழ் இனத்தை வாழ வழி வகுத்து விட்டான்.இறைவன்….
எம் தமிழ் இனத்தின் வரலாற்றை பேனா மை. கொன்டு
எழுதப் புறப்பட்டால். பக்கம் பக்கமாக .எழுதலாம்.
அந்த வகையில் நான் பிரயாணம் செய்த தொடர் வண்டியில்
இலங்கையை சேர்ந்த குடும்பத்தை சந்திக்க நேர்ந்தது.
அந்த குடும்பத்தை மையமாக வைத்துத்தான் .(கடல்வழிப்பயணம்) என்ற
தொடர் சிறு கதையை.என் அன்புள்ளங்களுக்காக படை க்கின்றேன்…..
(இது கதைக் களம்)
தொடரும்……………