“ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம்
All posts tagged “ஒஸ்தி” திரைப்படத்தின் விமர்சனம்
மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை
அவளை மரணக்குழி அழைத்தது.அன்று.
சிறுகதை
லெட்சுமிஅழகான ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் அழகான தோற்றமும் நிண்டகூந்தலும் மா நிறம் கொண்ட வெள்ளையும் அமையப்பெற்றவள்.அவள் மற்றப் பெண்களைப் போல சீரிப்பாயும் குணம் கொண்டவள் அல்ல. மிகவும் எளிமையான பண்பும் மற்றவர்களை கவரும் பேச்சு திறனும் கொண்டவள் .
அவள் திருமண பந்தத்தில் இணைந்தாள் அவளுடைய திருமண வாழ்கையில்(5)ஐந்து பிள்ளைகளைப் பெற்றால்.மூத்ததும் இரண்டாவதும் ஆண்பிள்ளை.மீதம் உள்ள (3) மூன்று பெண் பிள்ளைகள்.அவளுடைய கணவன் ஒரு விவசாயி.அவன் திடுக்கிடும் செய்தியை கேட்டால் விரக்தி அடைந்து விடுவான்.
எதிர்பாராத விதமாக ஒரு நாள் யுத்த விமானங்கள் தனது இரும்பிளான இறக்கையை விரித்துக் கொண்டு ஆகாயத்தில் வட்டமிட்டது.லெட்சுமி நினைத்தாள் .நம்மட நாட்டு அரசாங்கம் விமானம் புதுசா வாங்கியிருக்காங்க அதானால நம்ம நாட்டு மக்களுக்கு காட்டுவதற்காக பறக்கிறது என்று தன் பிள்ளைகளுக்கும் தன் கணவனுக்கும் அழகான பேச்சு தமிழில் சொன்னால்
யுத்த விமானம் (5)ஐந்து தடவை. வட்டமிட்டு தாழ்வாக பறந்தது. பறந்து (5)ஐந்து நிமிடங்கள் கழிக்கையில் லெட்சுமி வாழும் பக்கத்து ஊரில் குண்டு மழை பொழிந்தது.ஊர் எங்கும் கரும் புகை மண்டலமாய் மாறியது. அப்போதுதான் நினைத்தாள் லெட்சுமி நம்மட இனத்தை அழிக்க வந்த விரோதி என்று அவள் தன் மனதுக்குள் நினைத்தாள். சற்று (1) ஒரு நிமிடம் ஆகவில்லை அடுத்த யுத்த விமானம் (2)குண்டகளை அவள் வாழும் ஊரில் பொழிந்தது. அவளும் தன் பிளளைகளையும்.கணவனையும் அழைத்துக் கொண்டு தற்பாதுகாப்புக்காக நிலக்கீழ் சுரங்கத்துக்குள் ஒழிகிறால்(பங்கருக்குள்.ஒழிகிறால்)
ஆறு(06) யுத்த விமானங்கள் பெரிய இரச்சலுடன் ஊரை வட்டமிட்டு இருக்கிறது.அந்த வேளையில் கணவன் இடமும் தன் பிள்ளைகள் இடமும் கேட்கின்றால் நம்மட மூத்த அண்ணன் எங்கே?என்ற கேள்விக் கனையை தொடுக்கிறால் சற்று அங்கும் இங்குமாக தேடிப்பார்கின்றால் அப்போதும் யுத்த விமான் ஆகாயத்தை வட்டமிட்டு இருக்கிறது
அந்த வேளையில் பெற்ற மனசு சும்மா இருக்குமா? என் பிள்ளைதான் எனக்கு பெரிதென்று. அவள் தன் பிள்ளையை தேட புறப்படுகின்றால் அந்த வேளையில் தனது (4)நான்கு சின்னப் பிள்ளைகளையும் அவள் கட்டியிருந்த சேலையால் இறுக கட்டி மூடியபடி பரந்த வயல் வெளியில் அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து போகின்றால் கோழி பருந்தக்கு பயந்து தன்குஞ்சுகளை தன் இறகுக்குள் பாதுகாப்பது போல தன் பிள்ளைகளை பாதுகாத்துக்கொண்டு தன் மூத்த மகனை தேடப்புறப்படுகிறால்
அப்போது யுத்த விமானம் பெரிய இரச்சலுடன் ஆகாயத்தில் வட்டமிட்டுக் கொண்டுயிருக்கிறது.அவள் தன் மனதுக்குள் தன் ஸ்ட தெய்வங்களை வேண்டுக்கொண்டு.தேடுகின்றால் சற்என்று வந்த விமானம் திடீர் என்று லெட்சுமியின் மீது குண்டை.போட்டது. வயல் வெளி புகைமண்டலாமாக மாறியது.விமானங்கள் குண்டுகளை பொழிந்த.பின் தனது இடங்களை நோக்கிப் புறப்பட்டது.
அப்போது மூத்த மகன் நினைக்கின்றான் நம்மட வீட்டுக்குப் பக்கத்தில் குண்டச்சத்தம் கேட்டது அம்மா அப்பா தம்பி தங்கைகளின் நிலை என்னவென்று தெரியாது. என்று அவன் ஒரு அச்சத்துடன் நினைத்துக்கொண்டு.அகன்ற ஒற்றையடி வரம்பில் நடந்து வருகின்றான்.அப்போது பார்த்தான் தன் தாயும் தன் உறவுகளும் 20(இருபது அடி ஆழ குழியில் புதையுண்டு சிதையுண்டு தண்ணீரும் இரத்தமும்.ஒன்றாக சங்கமித்து கிடந்தது.மகன் பார்த்து அழுது புரண்டான்.
அன்று மகனை அழைத்து வரச் சென்ற தாய்யை.மரணக்குழி அழைத்தது அவளை.அன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்பு போராட்டமும் பாச போராட்டமும்தான் கதை.
நாசரின் மனைவி ரேவதி தனது கணவர் இறந்தவுடன் சிம்புவுடன், நாசரிடம் தஞ்சம் அடைகிறாள். அவருக்கு பிறக்கும் மகன் ‘ஜித்தன்’ ரமேஷ் இருவரும் சிறு வயதில் முட்டிக்கொள்வதும் மோதி கொள்வதும் பின் அதே தொடர்கதையாகி பெரியவராகும்போது சிம்பு லோக்கல் இன்ஸ்பெக்டர், ரமேஷ் தனது தந்தையுடன் மில்லில் உதவியாக இருக்கிறார்.
அங்கே தேர்தலில் நிக்க போகும் வேட்பாளர் மக்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய தனது ஆட்களிடம் பணத்தை கொடுத்தனுப்ப அதை லபக்குகிறார் சிம்பு. பணத்தை சிம்புவிடம் இருந்து திரும்ப பெற முயற்சிக்கும் வில்லனிடம் தன் புத்திசாலித்தனத்தால் தப்பிக்கிறார்.
பணம் கொடுக்காமல் இருப்பதை அறியும் மாவட்ட செயலாளர் விஜயகுமார் வில்லனை கண்டிக்க, அவர் சிம்புவின் தாயாரை கொள்கிறார், மில்லை எரிக்கிறார். நாசர் அதிர்ச்சியில் படுக்கைக்கு செல்ல திணறும் ரமேஷை தன் வசமாக்கி தன் காரியங்களை சாதிக்கிறார், விஜயகுமாரையும் கொல்கிறார்.
பின் சிம்புவை கொல்ல ரமேஷிடம் துப்பாக்கி கொடுத்து அனுப்ப அங்கே ரமேஷ் தன் தவறை உணர்ந்து அண்ணனிடம் சரண்டர் ஆக அவர்கள் இருவரும் எப்படி தங்கள் எதிரியை வென்றார்கள் என்பதுதான் ஒஸ்தியின் மீதிக்கதை.
இந்திவாவின் வரலாற்றிலேயே அதிக வசூலை குவித்த சல்மான் கான் நடித்த ‘டபாங்’ படத்தின் ரீமேக் இது. சிம்பு சல்மான் கானாக முயன்றிருக்கிறார். ஆனால் பரிதாபமாக அந்த முயற்சியில் தோற்றிருக்கிறார். அவர் காட்டும் மேனரிசங்கள் மூலம் பல சமயங்களில் எரிச்சலையும் சில சமயம் சிரிப்பையும் வரவழைக்கிறார். சும்மாவே விரலை ஆட்டும் அவர் இதில் ‘கெட்ட போலீசாக’ வருவதாலோ என்னவோ, அடாவடி என்ற பேரில் ஓவர் மேனரிசம் காட்டுகிறார்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’வில் அமைதியாக வந்த சிம்புவை ரசித்த நாம் இவர் காட்டும் ஓவர்டோசில் ஓவர்லாடாகிறோம். இதிலும் தனது அஜித் புராணத்தை கொஞ்சம் பாடியிருப்பதும், ‘ஆடுகள’த்தில் தனுஷ் ‘கொண்ணே புடுவேன்’ என்று சொல்வதுபோல ‘சுட்டே புடுவேன்’ என்று சொல்வதெல்லாம் ஐயோ ரகம்தான். என்ன! வழக்கம்போல் பாடல் காட்சிகளில் கலக்கியிருக்கிறார். சண்டை காட்சிகளுக்கும் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் அவர் 25 நாளில் வைத்த எய்ட் பேக் எங்கு தேடியும் காணோம்!
சிம்புவின் அம்மாவாக வரும் ரேவதி, சிம்புவிற்காக ஒரு புறமும் நாசர், ஜித்தன் ரமேஷிற்காக ஒரு புறமும் இருந்து கொண்டு தவிக்கும் தாயாக வந்து மனதில் நிறைகிறார். இவரை சோனு சூட் கொல்லும் போது, நடிப்பால் நம் மனதை கனக்க செய்கிறார்.
நாசர் தன் பங்கை உணர்ந்து நடித்திருக்கிறார். ஜித்தன் ரமேஷ் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார். தன் காதலியான சரண்யா மோகனிடம் குறும்பு செய்வதாகட்டும், அம்மாவிடம் மாட்டிக் கொண்டு அழுவதாகட்டும்… நிறைவாய் செய்திருக்கிறார். வழக்கமான வில்லனாக சோனு சூட் வந்தாலும், உயிரை விடும் காட்சியில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
சந்தானம், மயில்சாமி, தம்பி ராமையா எல்லாரும் நகைச்சுவை பண்றாங்கனு கடிகடினு கடிக்கிறாங்க. சந்தானம் இன்னும் தன் ஸ்டைலை மாற்ற முயற்சிக்கவே இல்லை, எல்லாரையும் ஓட்டி தள்ளுகிறார். ரிச்சாவை சிரிக்க வைக்க அப்பா கணேஷ் பாடும் ‘செண்பகமே’ பாடலில் அனைவரும் சிரிக்கலாம்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தயாரிப்பாளர் கணேஷுக்கு இதில் சோகமான கதாபாத்திரம். ரிச்சாவின் அப்பாவாக வரும் இவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பதுபோன்ற வேடம். இறுதியில் மகளின் திருமணத்திற்காக தனது உயிரையே மாய்த்துகொள்கிறார்.
‘டபாங்’ உத்தர பிரதேச வட்டார இந்தி வசனத்துடன் வெளியானது. அதில் சல்புல் பாண்டே என்ற பெயரில் சல்மான்கான் தனக்கு நன்கு தெரிந்த இந்தி வழக்கு மொழியை சரளமாகப் பேசியிருப்பார். ஆனால் இந்தப் படத்திலோ, அத்தனை கேரக்டர்களும் திருநெல்வேலித் தமிழ் என்ற பெயரில் ரசிகர்களை படுத்தி எடுக்கிறார்கள். இந்த பாவத்தைச் செய்யாத ஒரே ஆள் சந்தானம் மட்டுமே!
‘குவார்ட்டரை கருமாந்திரம்னு சொல்லாதே… அப்புறம் தமிழ்நாடே கொந்தளிக்கும்…’ என்று விடிவி கணேஷ் சொல்லும் போது போகிற போக்கில் சமூக அவலத்தை சுட்டி காட்டி விட்டு போகிறார் இயக்குநர் தரணி. ‘கலாசலா’ பாடலுக்கு மல்லிகா ஷெராவத்தின் ஆட்டம் துடிப்பாய் இருக்கிறது.
தமனின் இசையில் உருவாகியிருக்கும் மெட்டுக்கள் அத்தனையும் சிம்புவுக்காக உருவான லட்டுக்கள் போலத்தான் இருக்கிறது. ஆனால் ரீரெக்கார்டிங்கில் தமன் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய! கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டியிருக்கிறது. வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் நம்மை படத்துடன் ஒன்றவைக்கிறது. கனல் கண்ணனின் சண்டைக்காட்சிகள் அதிரடி!
தரணி மசாலா படங்களின் மன்னனாக இருந்தது ‘கில்லி’, ‘தூள்’ காலத்தில். அதனால் ‘ஒஸ்தி’யில் அதிக எதிர்பார்ப்பு அவர் மேல். ஆனால் இந்தி திரைக்கதையை சுமக்க வேண்டி வந்ததாலேயே அவரின் விறுவிறு திரைக்கதையும் இயக்கமும் ரெண்டுமே மிஸ்ஸிங்க். ‘ஒஸ்தி’யின் ஜிவ் வசனங்களால் நம் காது ஜவ் கிழிவதுதான் மிச்சம். க்ளைமேக்ஸ் நெருங்குகையில் ஓரளவு பரவாயில்லை. அண்ணன் தம்பிக்குமான பாசம் வெறுப்பு கலந்த உறவை நன்றாக காட்டியிருக்கிறார். ஆனாலும் ‘கில்லி’ ஃப்ளோவரோ ‘தூள்’ விறுவிறுப்போ இல்லாமல் ஒண்டியாகவே இருக்கிறது ‘ஒஸ்தி’!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-