பேனாவின் நரம்பு-வளிஓடும்.
உதிரத்தில் உலக சரித்திரத்தை
புரட்டிப் போட்டவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.
அங்கே எல்லாம்
முதற்ப்புள்ளியும் முற்றுப்புள்ளியும்
வைப்பவன் பேனாமுனைப் போராளிதான்
பேனா சிறிய விலை என்றாலும்
அதன் நூனியில் இருந்து -வடியும்
கண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி
உலக சரித்திரத்தையோ-சொல்லிவிடும்
ஆயுத முனையில் யுத்தம்-செய்யும்
எதிரியை விட
பேனா முனையில் எழுதி
யுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்
உலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்
ஆயுதத்தாள் யுத்தம் செய்வதை- விட
பேனா முனையில் யுத்தம் செய்பவன்
மிக வலிமை படைத்தவன்
பேனா முனையில் யுத்தம்-செய்பவன்
நீதி நியாயம்.தர்மம் எல்லாம்
பக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்
எரிகின்ற தீப்பிளம்புக்கு-மத்தியில்
தன் உயிரே துச்சமென -பாராமல்
அர்ப்பணம் செய்பவன்
நாட்டு மக்களுக்கு-சுதந்திர
தாகத்தை இதமாக -சுவாசிக்க
பெற்றுக் கொடுப்பவனும்
பேனா முனைப் போராளிதான்
எங்கோ எங்கோ மனித குலத்துக்கு
எதீராக அடக்கு முறைகளும்
இன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ
ஒரு இனத்தை ஒருஇனம்
எங்கே ஒடுக்குகின்றார்கலோ
அங்கல்லாம் பேனா முனைப்
போராளியின்-குரல்
சர்வதேச அரங்கெல்லாம்
கம்பீரமாக ஓங்கி ஒலிக்கும்
சிலநேரம் அணுகுண்டு-வெடித்து
சில எல்லைகளைத் தான்-அழிக்கும்
ஆனால் பேனா முனைப் போராளி
எடுக்கும் அணுகுண்டு(பேனா)
அது உலகெங்கும் அதிர்வுகளை
உணர வைக்கும்-அந்த
நிஜமான அணுகுண்டை-விட
பல மிக்க —சக்தி
பேனாமுனைப் போராளிக்கே-அதிகம்
ஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்
யுத்தம் செய்யும்-வீரர்கள்
பல இழப்புக்களை
உதிரம் சிந்தித்தான்
நாட்டு எல்லையை மீட்க வேண்டும்
ஆனால் பேனாமுனைப் போராளி
உதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்
பேனா முனையில் எழுத்து வடிவில்
புரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.
அவன்தான் போனாமுனைப் போராளி.
யுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்
பேனா முனைப் போராளியின்
பலம்பல -மடங்கு என்று பொருள்படும்
எத்தனையோ பேனா முனைப்-போராளிகள்
தன் தாய் நாட்டுக்காகவும்
தன் சமுதாயத்துக்காகவும்
அன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்
அவர்களை இன்று இருக்கின்ற
எம் சமுதாய உறவுகள்
தினம் தினம் பூசிப்போம்……………
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Like this:
Like ஏற்றப்படுகின்றது...