
என்னவளின் வருகைக்காக
என்னவளின் வருகைக்காக
தவமாய் தவமிருந்து பெற்றறெடுத்த
எங்கள் தவப்புதல்வா.
உன் அரும்பு மீசை துளிர் விடும் காலம்
துள்ளித் திரியும் உன் முகத்தின் –இளமை
பள்ளிப்பருவத்தில் கற்பனைகள் பல நினைத்து.
உன் அழகு கண்டேன்-மகனே
என் மனக் கதவுகளில் சஞ்சலமாய்-ஓடியது.
இரவு பகல் கண் விழித்து.
ஊன் உறக்கம் இல்லாமல்
நிலாச்சோறு ஊட்டி
நித்தம் நித்தம் –புன்னகை பூக்கும் வதனமடா
சில்லென்று காற்று வீசினால்-தாங்கமுயாமல்
சீக்கரமாய் ஓடிவந்து
அன்னைமடி தூங்கிடுவாய்-மகனே.
மூன்று நாள் காய்ச்சல் என்று
எழும்பி நடக்கமுடியாமல்
படுத்த படுக்கையில் கிடந்தாயே –மகனே.
வைத்தியர்தான் உன்னைப்பார்த்து.
உனக்கு டெங்கு காய்ச்சல் என்று –சொன்னாறே
என்தேகம்மெல்லாம் நடு நடுங்கி
வார்த்தைகள் பேச முடியாமல்
நாவெல்லாம் வரண்டது மகனே.
காய்ச்சல் வந்ததனால் வழமையான –தூக்கமென்று
நான் நினைத்தேன்
ஆனால் நீ நிஜமான நிரந்தர தூக்கம்-தூங்கினாய்
உயிர் பிரிந்தாய் -மகனே.
உன் பிரிவால் ஆறாத துயரத்தில்
தள்ளாடும் தாய்உள்ளம்-போல.
உலகத்தில் எத்தனை உறவுகள்
கொடிய டெங்கினால் உயிரை -காவு கொடுத்து.
உலகத்தில் எத்தனைபேர் –
கண்ணீர் கடலில் தத்தலிக்கிறார்கள்
உலகமக்களே ஒன்று கூடும்
ஐநா சபையே ஒன்று கூடும்
டெங்குவை கூட்டோடு -ஒழித்திடுவோம்.
மனித இனம் சுகமாக வாழட்டும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வானளவு உயர்ந்து நிற்கும்
வலிமை மிக்க வெண்பா
வையத்துள் வாழும் மனிதனை
வானளவு உயர்த்தி வைக்கும்
வள்ளுவனின் வாய்மொழி!
எக்காலத்துக்கும் பொருந்தும்
நன்னெறி முறைகளை
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே
ஈரடிக் குறளாய்
அறத்துப்பால் காமத்துப்பால்,பொருட்பால்
எனும் முப்பாலில்
எழுதிச் சென்றவன் அவன்!
வானுயரச் சிலை அமைத்துப்
போற்றிக் கொண்டிருக்கும்
நாம் – நம் வாழ்க்கையில்
அவன் சொல்லிச் சென்ற
நன்னெறியினைக் கடைப்பிடித்தால்
போதும் – நம் வாழ்க்கையில்
நிமிர்ந்து நிற்கலாம்!
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கடலம்மா உன் குணம்யென்னம்மா
வங்கக் கடலில்-அலையும் அலையும்
யுத்தம் செய்து பாரும்
அதை கட்டியணைத்து
தழுவி வருகிறது தென்றால்-காற்று
முட்டி மோதி இழுக்குது-எங்களின் படகை
துடுப்பு உடைந்து போகுது-கடலில்
நீர்க்கரம் கட்டியணைக்குது
எங்களின் உயிரை
முத்துக்குவியலும் பவளக் குவியலும்
உன் இடத்தில் கொட்டிக் கிடக்குது
அதை தேடி எடுப்பதற்காய்
இல்லாத ஏழையும்
உன்னை நம்பி வருகிறோம்
உன் கரத்தாள் தாவியெடுத்து
மரணம் என்ற அடைமொழியை
ஏன் கொடுக்கிறாய் கடலம்மா
இது நாயமா நீதியா -சொல்லும் கடலம்மா
பட்டினியாய் ஏழைகள் வந்தாலும்
வாரிக் கொடுக்கிறாய் -செல்வங்களை
நாவுக்கு சுவையூட்டும் -நல்ல கனியான
உப்பையும் கொடுக்கிறாய் கடலம்மா
கோடி உயிரை மரணத்தின் சூது
கவ்வுவது போல ஏன் கவ்வுகிறாய்- கடலம்மா
இது நாயமா நீதியா- சொல்லும் கடலம்மா
கருணை முகம் காட்டும் கடலம்மா,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-