வணக்கம்
உறவுகளே.
உன்னைப்பற்றிய விசாரிப்பு என்ற கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
உறவுகளே.
உன்னைப்பற்றிய விசாரிப்பு என்ற கவிதையை படிக்க கீழே சொடுக்கவும்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கற்பனைக்கதவுகள்திறக்க
விழியோரம்உப்புக்கண்ணீர்கசிய
வழிமேல்விழிவைத்து
வரும்பாதையை
இமைப்பொழுதும்கண்மூடாமல்
நெற்றிப்புருவத்தில்கைவைத்து.
தொலைநோக்கியபார்வை
என்மீதுசெலுத்துவாளேஎன்தாய்யவள்
மௌனம்கலந்தபுன்கைமுகத்தில்
பூத்துமலரும்வரை
சென்றபயணம்முடிவடைந்து
வீடுதிரும்புகையில்
சிலமணித்தியாலங்கள்தான்பட்ட
துன்பதைஅழகுவார்த்தையால்
சொல்லிஅடுக்குவாளே
அழகுதமிழில்என்தாய்யவள்
அம்மாவின்வீட்டில்சோறுசமைக்க
காலம்கடந்துவிட்டால்
அம்மாவைபெற்றெடுத்த
அம்மம்மாவீட்டுக்கு துள்ளிக்குதித்து
ஓடோடிஓடோடி சென்றால்
கட்டியணைத்து உச்சந்தலையில்முத்தமிட்டு
வட்டி நிறையசோறுபோட்ட அம்மம்மாவின்
நினைவைஒருகனம் மீட்டுப்பார்கசொல்லுகிறது
பிரக்கடிக்கும்வேளையில்
உச்சந்தலையில் மூன்றுதட்டுத்தட்டி
தண்ணீரகொடுப்பாவே அம்மம்மா
ஊட்டியசோறும்காட்டியஅன்பு
என்மனத்திரையில்
விவரணச்சித்திரமாய் ஓடுகிறது
அந்தஅம்மம்மாவுடன் சிலநாட்கள்
முகம்பார்த்து பேசியபோதுஎப்பபேரான்டிவருவா
பார்த்தசிலநாட்கள்
அழுகைசப்தம்ஒலிதான்ஒலித்தது..
மரணத்தின்விழிம்பில்சாய்ந்துவிட்டாய்.
மாறாததுயரங்கள் எங்கள்நெஞ்சில்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இந்த உலகத்தில் இறைவன் ஆணையும் பெண்னையும் படைத்தது இந்த பூமி பந்தத்தில் ஒன்றாக வாழ்ந்து இல்லறம் நல்லறமாக நடத்த வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பெண் நினைத்தால் எதனையும் சாதிக்க முடியும். என்பதை அன்றோ பல நூல்களில் கூறியுள்ளார்கள்.சிலப்பதிகாரத்தில் கூட கண்ணகியை எடுத்துக்கொள்ளலாம்.ஆவாதும் பெண்ணாலே இந்தபூமி அழிவதும் பெண்ணாலே. தெற்கு மதுரை சுடர் விட்டு எரித்தும் பெண்ணாலே.தாலிக்காயிற்றுக்கு பாசக்கயிறு என்றும் வந்ததும் பெண்ணாலே.இந்தியா தங்கப்பதம் வென்றதும் பெண்ணாலே. ஒரு பெண்தான் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் காரணம் . அடுப்பங்கரையில் வேலை செய்கிறவர்கள் என்று கற்பனை பன்னக் கூடாது. அவர்களும் ஆண்களுக்கு சமமாக உள்ளார்கள் என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
திருமணம் என்ற வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சியை தருவது பிள்ளைச்செல்வம்தான் அந்த பிள்ளைச்செல்வம் பிறந்தவுடன் எவ்வளவு கற்பனைகள் கணவன் மனைவி இடையே செயல்வடிவம்மாக பிறக்கிறது அதிலும் ஒரு பெண் பிள்ளை பிறந்தால் எவ்வாறு அழைகிறார்கள் என்று பார்த்தால் என்னசின்ன மகராணி மகளாக வந்தாள் தாய் தந்தயின் முகத்தில் சிரிப்பை கொடுத்தால் தங்கள் வீட்டில் உள்ள கடிகார நேரங்கள் எல்லாம் தன் மகளுக்காகவே சுற்றுகிறது. என்கிறார்கள். றோஜாப்பூவின் இதழும் ஒன்றே உன் முகமும் ஒன்றே நீ பிறந்ததால் எங்கள் வாழ்க்கை பாதை எல்லாம் மலர்மாலைவரவேற்பது போல எங்கள் உள்ளங்களை வரவேற்கிறது என்பதை கவிஞன் மிக அழகாக சொல்லியுள்ளான்.(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
காதலன் மக்கள் கூட்டத்தில் இருக்கிறான் அந்த நேரத்தில் அவனுடைய காதலி காதலனை தேடுகிறாள் அதைப் போல காதலனும் தன் காதலியை நினைக்கிறன் அவளுடைய கொழுசு சத்தம் அவன் காதில் கேட்கும் போது தொலைபேசி மணிஒலிப்பது போல ஒரு உணர்வு.அவளைக் கண்டவுடன் அவன் மனசில் மின்னல் ஒளி பாய்ந்தது போல ஒரு உணர்வு வந்தது.
காதலன் அவளை நினைத்து பாடும் பாடலுக்கு இராகம் கொடுத்ததும் நீதானேஅந்த பாடலுக்கு அவளின் ஒளி மிக்க காதல் பார்வை அவன் நெஞ்சில் இசையாக யாழ் மீட்கிறது. வெளியில் உள்ளது எனக்கு பூக்காவனமாக தெரியவில்லை உன்னை நினைத்த நாளில் இருந்து நீயே எனக்கு பூங்கவனமும் பிரிந்தாவனமும் நீயே ஆகாயத்தில் இருக்கிற மேகத்தின் அழகை விட நீ ஒரு மேகம் நீ தான் அழகு என்று காதலியை பார்த்து சொல்லுகிறான்.(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
காதலன் பெண்னை நிலவுக்கு சமமாக ஒப்பிடுகிறான் நிலவானது பல தேசங்கள் பல நீர்ரோடைகள் கடந்து செல்லும் போது அதன் அழகு அழகுதான் அதுமட்டுமா மதுளையின் பூப்போல மலருகிறஇதழ் போலஉன் உதடு மானினங்கள் மீனினங்களும் பார்த்தவுடன் மயங்கும் விழியமைப்பும் அவளின் நெற்றி புருவம் வளைந்த வில்லைப்போலவும் அந்த வில்லுக்கு பெண்ணின் பார்வையை அம்பாக உவமிக்கிறான் காதலன் அவளின் அந்த இளைமையான கட்டளைபருவம் ஒரு களமாக அவளின் குழிவிழுத்த கன்னத்தில் தேனின் சுவைக்கு சமமான சுவை என்று வர்ணிக்கிறான் முத்த பவளங்கள் போல அவளின் விரல்கள் அவளின் கழுத்து அழ்கடலில் எடுத்த சங்காக.இப்படியாக காதலன் காதலியை வர்ணிக்கிறான்.(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
காதலன் முதல்காதல் அவனின் கற்பனையில் அவனுடைய காதலி அவனை தேடி வருகிறாள் அந்த வேலையில் வண்ணமாலைசூடவந்தாள். நூறுஜென்மங்கள் உன்னுடன் ஒன்றாக சேர்ந்திருப்பேன். அந்த நேரத்தில் பூக்கும் செடி எல்லாம் அவளின் வரவுக்காய் வரவேற்று சிரிக்கிறது அவனுடைய பார்வை அவள் வருவதற்கு முன் எட்டு திசை எங்கும் பார்த்த கண்கள்அந்த திசைகள் எல்லாவற்றையும் ஒன்றாக்கி தன் காதலியின் வருகையை பார்கிறான் என்னுடைய கண்ணுக்குள் உனது விம்பம்தான் என்னுடைய நெஞ்சுக்குள் உனதுநினைவுதான் என்னுடைய உள்ளம் கூட உன்னிடத்தில் என்னுடைய நிழலில் நீ நடக்க எனது உயிரையும் உனக்காக தருவேன் என்று காதலன் மிக அழகாக காதலியை பார்த்து வர்ணிக்கிறான்(PLAY BUTTON-கீழே சொடுக்கி பாடலை கேளுங்கள்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
1.முகம் காணாத நெஞ்சம் – என்
முகம் காணத் துடிக்கிறதே
அவளின் பிஞ்சு விரலினால்
காகிதத்தில் பலநூறு கோட்டினிடையே
வரையும் காதல் உணர்வுகளை
தேடிப் படிக்க பைத்தியமாய்
அலைவேனே தபால் நிலையங்களில்…
எனக்காக நீ வரையும் மடலில்
உன் குவிந்த உதட்டின் புன்னகை
ரோஜாப் பூப்போல சிரிக்குமடி…
விழி மூடி உறங்கும் போதும்
என் தலையணையின் கீழே
உன் குவிந்த உதட்டின் புன்னகை
முத்தமிட்டு விழி மூடி உறங்க வைக்குதடி…
2.நீ இருப்பதும் வெகு தூரம்
நான் இருப்பதும் வெகு தூரம்
உன் நினைவு இருப்பது என் விழியோரமல்லவா
உன் காதல் கடிதம் வருமென்று
என் வீட்டுச் சுவரில் தொங்கி இருக்கும்
நாள் காட்டியில்… நாட்களை
ஒவ்வொன்றாக எண்ணியபடி…
உன் நினைவை – என் நெஞ்சில்
தாங்கியபடி காலம் நகருதடி…
3.உனக்காக நான் காதல் கடிதம் எழுதும் போது
என்னவென்று தெரியாது…
என் பேனா.முனையில் இருந்து…
மைத்துளிகள்தான் சிந்தும்
ஆனால்; சில நாட்களாக என் கண்ணீர்த் துளிகளும்
அந்த காகிதத்தில் சிந்தியதடி…
நான் அனுப்பிய காதல் கடிதத்துக்கு
பதில் ஒன்றும் வரவில்லையென்று…
தபால் காரனிடம் எத்தனை தடவைதான் கேட்டிருப்பேன்…
அவரின் பதில் … வரவில்லை என்றே வருகிறது…
4.உனக்காக
கவிதையாக்கி கடிதம் எழுதினேன்
கவிதையாக்கிய காதல் கடித்ததை
இறுதியில் நீ மௌனமாக்கினாய்…
அந்த மௌனம்
என் உயிரை சிறிது சிறிதாக
போக்கிக் கொண்டிருக்கிறது…!
தந்தையும் தாயும்-இருந்தார்கள்
எங்களை தாவித் தாவி -அனைத்தார்கள்
மெல்லிய மேனியில்-அள்ளிய கரத்தாள்
கிள்ளிய பசிக்கு சோறு-ஊட்டியவர்கள்
உச்சி முகந்தவர்கள்-எங்கே???
அன்று விழுந்தது-செல்லு
அள்ளி எடுத்தது -மண்னு
துள்ளி சிதறிஓடியது-அன்று,
சப்தங்கள் ஓய்ந்தது
உறவுகளும் வந்தது
அள்ளி எடுத்தது -உடலை
கதறி அழுதோம் -அன்று
என்னைப் பெற்ற தெய்வங்களை-இழந்தேன்
சிறு வயதில் என் அவயங்களையும்-இழந்தேன்
ஊன்று கோல் ஒன்றின்-உதவியுடன்
ஊர் முழுக்க ஓலமிட்டு
ஒருசான் வயிற்றுப் பசிக்காக
ஒருநாள் பொழுதை கழிக்கிறேன்
தொட்டிலில் ஆடிய குழந்தையின்
தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததும் -அன்று
பனை மரங்களும் தென்னை -மரங்களும்
வாடி கருகிப் போனது -அன்று
மெல்லிய காற்றுவீசும் -போது
கெந்தக துகள்களின் -வாசணை
ஈழமண்ணில் மெல்ல மெல்ல
ஊயிரை மாய்க்குதே,
பாசம் காட்டி என்னைப் பெற்ற-தெய்வங்கள்
பாதி வழியினில் -போனார்கள்
பாவம் அறியாத -நான்
பாசம் காட்ட யாரும் இல்லாமல்
பரதேசியாக அலைகிறேன்-இன்று,
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய பெண்கள் ஒரு சிறு பார்வை.பெண்கள் தன்நிலை மறப்பதால் ஆபாசம்பிக்கிறது…
இரண்டாவது தொடர் ..(நிறைவுப்பகுதி)
ஆனால் 40(நாற்பது)50( ஐம்பது) ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படங்களில் இடுப்பு.மார்பகங்கள்.இடை .அரைகுறை ஆடைகளுடனான காட்சிகள் இல்லை என்றுதான் சொல்ல முடியும். அந்த திரைப்படங்களை சந்தோசமாக குடும்பத்தோடு அமர்ந்து பாக்க முடிந்தது.ஏன் அப்படி நடித்தார்கள் என்றால் பெண்கள் பெண்களாக அப்போது பார்கப்பட்டது.
ஆனால் அப்போதைய பெண்கள் சுயமரியாதைக்கு உரியவர்களாக பார்க்கப்டது ஆனால் அவர்கள் தன்னை ஒரு பெண் என்றதை மனதில் நிறுத்திக் கொண்டு நடித்தார்கள்.
அது மட்டுமா. இன்றைய காலகட்டத்தில் அம்மா யார் என்றும் .மகள் யார் என்றும் மதிக்க முடியாமல் உள்ளது ஏன் என்றால் மகள் அணியும் அரை குறை ஆடையை அம்மாஅணிகின்றா. அதனால்தான் கலாச்சார சிரலிவுகள் ஏற்படகிறது. ஒரு பெண் தன் நிலை மறப்பதால்தான். ஆபாசம் பிறக்கிறது.
அதுமட்டுமா சூதாட்டமையங்களிலும் கழியாட்டங்களிலும் என்றுஎத்தனை பெண்கள் சிக்கிக் கொண்டு வாழ்வை சிரலித்துக் கொண்டு இன்று அனாதையாக வாழ்கிறார்கள் அதையும் நம் கண்ணால் கண்டுகொண்டதான் இருக்கின்றோம்.
ஆனால் இன்றைய பெண்களை ஆண்கள்தான் ஆபாசமாக பார்கிறார்கள் என்றால் என்னால் துச்சமென நம்பமுடியாது.அப்படி இன்றைய ஆண்கள் தான் ஆபாசமாக பார்கிறார்கள் என்று வாய்கிழிய யார் கத்தினாலும் அதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஆனால் பெண்களை ஒரு ஆபாசமாக பார்ப்பது இன்றைய தென்னிந்திய சினிமாத் துறைதான்……..
எப்படி கட்டிய கணவனுடன் பழகுவது போல இன்று சினிமாத்துறையில்தான் உள்ளது அதை யாரும் மறுக்கவும் முடியாது. மறைக்கவும் முடியாது.
ஆகவேபெண்கள் பெண்களாக வாழ வேண்டும் சமுதாயத்தில் நல்ல சுயமரியாதையாக வாழ பெண்களுக்என்று உள்ள பெண்கள் அமைப்பு மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாகவும் விலை மாதுக்களாகவும் பயன் படுத்தும் தீய சக்கிகளுக்கு எதிராக போரடினாத்தான் பெண்களை பெண்களாக வாழ வைக்க முடியும்.எனவே
பெண்கள் தன்நிலை மறப்பதானால்தான் ஆபாசம் பிறக்கிறது…….இந்த நிலைக்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும்மென்றால்……..பெண்கள் போராட வேண்டும்.
யாரையும் குறை கூறவில்லை…பெண்கள் பெண்களாக திருந்தினால் போதும்
.(நிறைவுப்பகுதி)
மீண்டும் அடுத்த படைப்பில் சந்திக்கின்றேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஊரில் வாழ்ந்தது-போதுமென்று.
ஊர்மறந்து போகப் போகிறாயா.
பெற்ற பிள்ளையும் கட்டிய-மனைவியையும்.
உன் சொந்த பந்தங்களும் கதர கதர.
நீ கப்பல் ஏறி வெளிநாடு -சொல்லப் போகின்றாயா.
உன் இடைவிட்ட பிரிவாள்.
நான் தினம்…..தினம்….
செத்துப் பிழைக்கின்றேன்.
உன்மனைவி பிள்ளை பெரிதென்று-பாராமல்.
பணம்……பணம் -என்று.
உன் உள் மூச்சு வேண்டுதே.
நீ யார் இடமும் கை ஏந்தாமல்.
சுதந்திரமாய் வாழ்வதற்காய்.
நாலுபேருக்குள்-நல்ல
மனிதனாய் வாழ வேண்டும்-என்று.
உன் உள் நெஞ்சம் -துடிக்குதே.
அது எனக்கு நன்றாக -புரிகிறது
எனக்குகடவுள் எழுதிய எழுத்தோ-என்று.
எனக்கு தெரியவில்லை.
இருந்தாலும் உன்நினைவுகளில்-நான்.
தினம் தினம் செத்து செத்து வாழ்கிறேன்.
நீ அன்னியவன் நாட்டில்-இருந்து.
கற்றை கற்யையாய்-நீ
பணம் கொண்டு வந்து போட்டலும்-நீ
என் அருகில் இருப்பதற்கு இணையாகுமா?
சொல்லும் என் அன்புக் -கணவனே.
சொல்லும் என் அன்புக்-கணவனே.
நான் இல்லாவிட்டால்.
நீ மரணத்தின் விழிம்பில்
சாய்வாய் என்று-நான் நன்கு அறிந்தேன்.
என்னதான் செய்வதென்று-தெரியவில்லை.
உனக்காகவும் நம் பிள்ளைக்காகவும்.
என் உதிரத்தையும் வியர்வையும்
ஊனாக உருக்கி.
நம் வாழ்கையில் ஒளிவிளக்கு ஏற்ற.
உன்னை நான் சில.
ஆண்டுகள் பிரிந்து வாழ்கிறேன்.
நாம் ஊரில் -வாழ்ந்த காலத்தில்
நம்மிடம் பணம் இல்லை-என்று.
மாற்றானிடம் கையெந்தி -கேட்ட போது.
இல்லை என்று -சொன்னானே.
அந்த வடுக்கள் இன்னும்-என்
நெஞ்சில் அழியாமல்-இருக்கிறது.
அந்த இலட்சியத்துக்காய்.
சிறிது காலம் பிரிகிறேன்.
நீ பொறுமை காத்திடு.
என் அன்புக்குரிய பாசக் கிளியே.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகின் நான்கு பக்கமும் அதிர்ந்தது-அன்று
உலகில் உள்ள மனித குலம் மிதந்ததும்-அன்று
மாட.மாட கோபுரம் சாய்ந்ததும்-அன்று
தொலைத் தொடர்பு அற்றதும்-அன்று
மின்சார கோபுரம் சாய்ந்ததும் -அன்று
பிஞ்சு உள்ளம் தத்தளித்ததும்-அன்று.
பெரியோர்கள் சிறியோர்கள் மாண்டதும் -அன்று
மதி கெட்டு நின்றது மனித குலம்-அன்று
சந்தோசகாற்று.வீசிய பூமி எங்கும் -அன்று.
உலகெங்கும் சோக கீதங்கள் வீசியது
உயரத்தில் பறந்த உலக நாட்டுக் கொடிகள்
அரைக் கம்பத்தில் பறந்தது -அன்று
இலட்சியத்தை முழு வீச்சைக் -கொண்டு.
பள்ளிக் கூடம் சென்ற கள்ள கபடமற்ற.
மணவ உள்ளங்கள் தண்ணீரில் மூழ்கியது-அன்று
உலகில் வழும் கிறிஸ்த்தவ-உறவுகள்
பண்டிகையை கொண்டாட ஆடம்பரமாய்
இருந்தது-அன்று
சொல்லாமல் கொள்ளாமல்-பூகம்பம் வந்தது
சுமத்திரா தீவினிலே-அன்று.
பூமி தாங்க முடியாமல் கண்ணீர் விட்டது-அன்று
சாதி மத பேதமின்றி-அன்று
உயிரை காவு கொண்டது-அன்று
அதுதான் சுணாமி(ஆழிப் பேரலை)
ஆழிப் பேரலையின் வடுக்கள்-ஒவ்வெரு
ஆண்டும் வரும் கிறிஸ்மஸ் நாளில்-நினைவுவரும்.
மாண்டவர்கள் மீண்டும் வருவதில்லை.
வாழ்கின்ற மனித குலம்
மனித நேயத்துடன் வாழ்ந்தாள்
மனித குலத்தின் வாழ்வு சிறக்கும்.
அன்றைய வடுக்கள் மனித குலத்தின்.
நெஞ்சை உறைய வைத்ததும்-அன்று.
உலகை அதிர வைத்ததும்-அன்று.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-