தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
போட்டியின் நெறிமுறைகள்
- கொடுக்கப்பட்டுள்ள படத்தைதோ்வு செய்து அதற்கான கவிதையை இருபத்து நான்கு அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
-
விரும்பிய தலைப்பில் மற்றொரு கவிதையை 24 அடிகளுக்கு மிகாமல் எழுத வேண்டும்.
-
படமும் பாட்டும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும், விரும்பிய தலைப்பில் எழுதும் கவிதைக்கு 50 மதிப்பெண்களும் வழங்கப்படும். இரண்டு கவிதைகளின் மதிப்பெண்களைக் கூட்டி வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.
-
மரபுக் கவிதையாகவும் பாடலாம், புதுக்கவிதையாகவும் எழுதலாம்
5.கவிதையினைத் தங்கள் பதிவில் 1/09/2014 இரவு 12 மணிக்குள் (இந்திய நேரம்) பதிவிடப் பட்டிருக்கவேண்டும்.
6.நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
- மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படா.
8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரி ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்.
9.வலைத்தளம் இல்லாதவர்கள் கவிதைகளை அஞ்சல் வழி அனுப்பலாம்
10.உங்களின் தளத்தில் கவிதையை வெளியிட்ட பின் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி : ramask614@gmail.com
நடுவர்கள் :
கவிஞர் கி. பாரதிதாசன். பிரான்சு
(http://bharathidasanfrance.blogspot.com )
கவிஞர் இரமணி. இந்தியா
( http://yaathoramani.blogspot.com)
டொக்டர் திருமிகு முருகானந்தன். இலங்கை
(http://muruganandanclics.wordpress.com)
நிருவாகக்குழு
திரு.பொன்.தனபாலன்(அண்ணா)- இந்தியா
திரு.இராஜ முகுந்தன் (அண்ணா)- கனடா
திரு.அ. பாண்டியன்– இந்தியா
திரு. கா. யாழ்பாவாணன்-. இலங்கை
திரு.த. ரூபன்– மலேசியா
பரிசுகள்
முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு
(பதக்கமும் + சான்றிதழும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
ஏழுஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,+புத்தகம் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)
பெருவாரியானஎண்ணிக்கையில்பங்கெடுத்துக்கொண்டுதமிழ்வளர்க்கவாரீர்வாரீர்என்றுவரவேற்கிறோம்…!மேற்கொண்டுவிளக்கம்தேவையெனில்தயங்காது கீழ்குறிப்பிட்டுள்ளமின்னஞ்சல்முகவரிகளில்தொடர்புகொள்ளுங்கள்…கருத்திடும்அன்பர்கள்தங்களின்பெயர்,மின்னஞ்சல்மற்றும்வலைத்தளமுகவரியைபின்னூட்டத்தில்தெரிவிக்கவும்
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல்-
rupanvani@yahoo.com&dindiguldhanabalan@yahoo.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உலகத் தமிழை வளர்க்கும் உங்களின் முயற்சிக்கும்,
போட்டியில் பங்கெடுக்க விழைந்தோர்க்கும்,
வெற்றிபெற்ற கவிஞர்களுக்கும் இனிய வாழ்த்துகள்!
உலகத் தமிழ் வளர்ககும் உங்கள் பணிக்கும் போட்டியில் வென்ற அனைவர்கும் வாழ்த்துகள்!!!
அருமையான நோக்கத்திற்காக ,உண்மையாகவும் ,உலமாரவும் உருவாக்கப்பட்ட இந்த தளம் ,வளம் பெற வாழ்த்துக்கள்
போட்டியில் பலரும் கலந்து வெற்றிவாகைசூட என் வாழ்த்துக்கள்
வணக்கம்!
மாபெறும் என்பதை மாபெரும் என்று மாற்றவும்
தமிழ்வளர்க்க தங்களின் தொண்டு சிறப்பானது! போட்டி சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள்
Vetha.Elanagthilakam
தமிழ்வளர்க்க தங்களின் தொண்டு சிறப்பானது! போட்டி சிறப்பாக வெற்றிபெற வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோதரரே!
எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உங்கள் உயர்ந்த எண்ணம் உன்னதமானது! சென்ற வருடம் போல் இவ்வருடமும் போட்டி சிறக்கட்டும்!
அருமையான நேரத்தை இதற்கென ஈந்து செயலாற்றும் நடுவர்களுக்கும் நிர்வாகக் குழுவினருக்கும் உங்களுக்கும் ஐயா யாழ்பாவாணன் அவர்களுக்கும் உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
போட்டியாளர்களும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துக்கள்!
தாங்கள் மேற்கொண்டுள்ள இந்த கவிதைப்போட்டி சிறப்புற அமைய வாழ்த்துக்கள்.
பணி சிறக்க வாழ்த்துக்கள்
வணக்கம்!
உலகம் தழுவிய ஒண்கவிதைப் போட்டி!
பலரும் பயன்பெறுக! பாடும் – கலைவளர்க!
இன்பத் தமிழின் எழில்ஒளிர்க! எத்திசையும்
அன்பு மழைபொழிக ஆழ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
மற்றொரு கவிதைப் போட்டியா? சென்றமுறை நடத்தியது போலவே இந்த முறையும் வெற்றிகரமாக நடத்தி பரிசுகளை அள்ளிஅள்ளி வழங்க வாழ்த்துகள், ரூபன்.
கவிதைப் போட்டி சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே
தங்களின் பணி தொடரட்டும்
கவிதைப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நடத்தும் உங்களுக்கும், யாழ்பாவாணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.