அன்பான உறவுவைத் தேடி தேடி
வாழ்க்கை நீண்டு போனது
காதல் சுகங்கள் சுமையேற
சோர்ந்து போனது உள்ளக்கிடக்கை
அவள் ஒரு திசையில் நான்ஒரு திசையில்
திசைமாறிய பறவைகள் போல வாழ்க்கை
சோகங்களைத் தரும் காதலை விட
அவளிடம் இருந்துவரும் அழைப்பே
என் காதலுக்கு ஒரு சுகம் தரும்
அவளிடம் இருந்து வந்த கடிதங்கள்
என் செஞ்சில் ஒரு இன்னிசை
புயல் யுத்தம் செய்தது.
சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
வானத்தில் பறக்கச்சொன்னது.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா…
தாயின் வயிற்றில்பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
சாகும் வரை காதல் என்ற உறவே
பிரியாமல் எப்போதும் நிலைத்திருக்கும்
நான் அன்பு என்ற மூன்றெழுத்தை விதைத்தேன்
ஆனால் நீ பிரிவு என்றமூன்றெழுத்தை
என்னுள் விதைத்து விட்டாய்
நாலுசனம் வாழ்த்த நீ வாழ்ந்தால் போதும்
நான் உன் நினைவில் வாழ்ந்துகொண்டுடிருப்பேன்
அது உனக்கு புரியுமடி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
”..சிட்டுக்குருவியின் சிறகை வேண்டி
வானத்தில் பறக்கச்சொன்னது.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்… aha kaathal vatikal…..
Vetha.Elanagathilakam.
உங்களின் தளம் இங்கே வலைச்சரத்தில் பாராட்டப்பட்டுள்ளது..இணைப்பு http://blogintamil.blogspot.in/2014/08/4.html
வணக்கம்!
வஞ்சியின் வண்ணங்கள் வார்த்த கவியடிகள்
நெஞ்சுள் இருக்கும் நிலைத்து!
சிறப்பாய் எழுதியென் சிந்தை புகுந்தீர்!
நிறைவாய்ப் புகழும் நிலம்!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அன்பும் பிரிவும் கொடுக்கும் வலி எத்தகையது என்பதை அழகான கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு, பிரிவு இரு சொற்களுக்குமே மூன்று எழுத்துக்கள்தான். ஆனால் இவை உண்டாக்கும் தாக்கத்தை அனுபவிக்கும்போதே உணரமுடியும். தாங்கள் உணர்ந்து எழுதியுள்ள விதம் மனதில் நின்றது. நன்றி.
நிறைவேறாத ஆசைகளா? நிறைவேறிய எண்ணங்களா? எங்களுக்குப் புரியவில்லை. இருந்தாலும் தங்களின் எண்ணப் பதிவுகளைத் தாங்கள் எழுத்து வழி சொல்லும் அழகு அருமையாக உள்ளது. பாராட்டுகள்.
super na,vaalka valamudan
nice bro
எங்கிருந்தாலும் வாழ்க!
நீங்கள் விரைவில் மகிழ்ச்சி கீதம் பாட வாழ்த்துக்கள்.
யாருக்கும் தெரியாத அமைதியான இடம் நோக்கி
அவளின் காதல் கடிதங்களை வாசிப்பதில்
ஒருசுகம் இருக்கும்..ஆகா…ஆகா… Impressed with this…
பிரிவின் சோகம் கவிதையில் வெளிப்படுகிறது.
பிரிவின் துயர் கொடியது
மரணத்தைவிட கொடுமையானது பிரிவு.
நெஞ்சில் ஏற்பட்ட காயங்களின் வலியை உங்கள் வரிகள் விளக்குகின்றன. காயத்திற்கு மருந்தும் அவளது நினைவே ஆகும் காயங்கள் விரைவில் ஆறிவிடும் என்று நம்புலோம்
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
“தாயின் வயிற்றில் பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
சாகும் வரை காதல் என்ற உறவே
பிரியாமல் எப்போதும் நிலைத்திருக்கும்” என்ற
அடிகளில் அடியேனுக்கு விருப்பம்!
சிறந்த பாவரிகள்!
ஓகே. தாயன்பை காதல் பெரிதா?
வணக்கம்
ஐயா.
தங்களின் வினாவுக்கு உடன் பதில் அளிக்க முடியாமல் போனது மன்னிகவும் வேலையின் நிமிர்த்தம்
தாயன்பை விட உயர்ந்ததா காதல் ??என்று கேட்டிருந்தீர்கள்
நிச்சயம் இல்லை தாய் அன்பு தெப்பிள்கொடியுடன் வரும் உறவு தாய்தான் நாம் முதல்கண்ட தெய்வம் தாய்யன்பை பற்றி எழுதப்போனால் ஒரு நாள் போதது. அந்த புனிதமான தெய்வத்தை காதலுக்கு நான் ஒப்பிட வில்லை. ஐயா. நாம் பிறக்கும் போதும் அம்மா என்றுதான் அழுகின்றோம் அதைப்போல யாரும் அடித்தாலும் அம்மா என்றுதான் அழுகின்றோம் தாயன்பு இதில்தெரிகிறது அந்த தெய்வத்தின் நாமம்.
காதல் என்பது இடையில் வரும் உறவு அந்த உறவு சிலவேளையில் நிலைக்கும் அல்லது நிலைக்காமல் போகலாம் அப்படிப்படது காதல்
சாகும்வரை காதல் என்ற உறவே நிலைத்திருக்கும் என்னும் வரிக்கு விளக்கம்?
அதாவது ஒரு ஆண் ஒரு பெண்மீது காதல் வயப்பட்ட காலத்தில் இருந்து அந்த காதல் ஜோடி சாகும் வரை நிலைத்து நிக்கும் என்பதைதான் நான் சொல்லியுளேன்.ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தெப்பிள் கொடியுடன் தாய் பிள்ளை
உறவு அறுந்து விடும்.?இதை சிறிது மாற்றி அமைக்கலாமே ரூபன் ஜி ?
வணக்கம்
ஜீ
தங்களின் கருத்துக்கு ஏற்ப மாற்றம்செய்யப்பட்டது
தாயின் வயிற்றில்பிறக்கும் பிள்ளை
வளர்ந்தவுடன் திசைமாறிவிடும்
என்று மாற்றம் பெற்றது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சரியான மாற்றம் ரூபன் ஜி !
எங்கிருந்தாலும் வாழ்க…!
வணக்கம்
அண்ணா
தங்களின் வாழ்த்துக்கள் எப்போதும் என்னை மகிழ்விக்கும் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-