தொடரை படிக்காதவர்கள் படிக்க முதலில் இங்கே சொடுக்கவும்
1.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-1
2.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-2
3.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-3
4.சிறகடிக்கும் நினைவலைகள்-பகுதி-4
காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டாள்
என்ற உணர்வில் என் மனதில்
இசைவெள்ளம் புயலாக பொங்கியது
வீரியமாய் மண்ணில்
புதிதாய் முளைக்கும் வித்துப்போல்
கிளையை தாவி பிடிக்க படரும் கொடி போல
அவளும் என்னைத்தொடர்ந்தாள்
நானும் நகர்ந்து கொண்டே இருந்தேன்
அந்தியில் ஆதவன் வீடு புக
கடலோரம் கடற்கரை மண்ணிலே
அலையோடு விளையாடி
ஆர்ப்பரிக்கும் அலையோடு கை பிடித்து.
மணல் வீடு கட்டி விளையாடி
மகிழ்ந்த காலங்கள்.
தேனீகளும் பறவைளும் மதுவுண்டு கழிக்கும்
நம்மவூர் பூங்காவனச் சோலையிலே
துள்ளிக் குதித்து பட்டாம் பூச்சியை
துரத்தி துரத்தி பிடித்த காலங்கள்
உன்னோடு நான் உரச என்னோடு நீ உரச
உருண்டு புரண்ட ஞாபங்கள்
என் செஞ்சில் வந்தாட
உன் ஞாபகமே தினம் தினம் ஆர்ப்பரிக்கிது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தொடரும்……
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாடல் ஒலிக்கிறது போலிருக்கிறது
இனிமையான நினைவுகள் நனவாக வாழ்த்துக்கள்.
சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்கள் ரூபன்.
நினைவு வாழ்க்கையிலும்,கற்பனை வாழ்க்கையிலும் கிடைக்கும் சுகம் அலாதியானது. நிஜ வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கத் தவறியவற்றை கற்பனையில் நாம் பெறுவது என்பதும் அதனை கவிதை வடிவில் கொணர்வது என்பதும் பிறருடன் பகிர்வது என்பதும் மன மகிழ்வை மேம்படுத்தும். நன்றி.
பலருடைய வாழ்க்கை நினைவிலும் ஏக்கத்திலும்தான் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அனுபவத்தை நான் உணர்ந்துள்ளேன். நன்றி.
இளமை துள்ளும் வரிகளில்
இமைகள் நனைக்கும் சோகம்!!
நினைவலைகளில் நீந்த வைத்துவிட்டீர்கள்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
“கடலோரம் கடற்கரை மண்ணிலே
அலையோடு விளையாடி
ஆர்ப்பரிக்கும் அலையோடு கைப்பிடித்து.
மணல் வீடுகட்டி விளையாடி
மகிழ்ந்த காலங்கள்.” என்றும்
நினைவில் உருளும் மீட்டல்கள் (ஞாபகங்கள்)!
நினைவலைகளில் நனைகிறோம். வாழ்த்துக்கள்
வணக்கம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
இனிக்கும் உன் நினைவுகள் நிழலாக என்றும் நிஜமாக தொடரும் வாழ்வில் விரைவில். அருமை தொடர வாழ்த்துக்கள் ரூபன் ….!
நினைவலைகளை ரசித்தேன்..வெகு சிறப்பு..
வணக்கம் சகோதரர் ரூபன்!
இதயத்தைத் தான்திறந்து ஏற்றிய கீதம்
உதய நிலாவோஎன் றோது!
உள்ளார்ந்த நினைவுகள் சுழன்று வருகிறதோ வார்த்தைகளாய்….
அருமை! தொடருங்கள்!..
வாழ்த்துக்கள்!
நெஞ்சின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள் மனதை நிச்சயம் நெகிழ வைக்கும் என்பதில் ஐயமில்லை. யாரை நினைத்து இத்தனை உருக்கமாக எழுதுகிறீகளோ அவர்களுக்கு மிக நன்றாகப் புரியும் என நினைக்கிறேன் படமும் உங்கள் மனம் போல் சுழல்வது அருமை பாராட்டுக்கள்
ம் ம் உண்மை வெளியே வருது வரட்டும் வரட்டும்.
சுற்றும் படமும் அட்டகாசம்…!
அந்த நாளும் வந்திடாதோ…!