தைப்பொங்கலை முன்னிட்டு ரூபன்&பாண்டியன் நடத்திய சிறப்புக்கட்டுரைப்போட்டியில் வலையுலகில் சாதனை படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் முதலில்.அத்தோடு படைப்புகளை அனுப்பிய அனைவருக்கும் எனது நன்றிகள்… பல.
பரிசுப்பொருட்கள்:-சான்றிதழ்&பதக்கம் அனுப்பட்டுள்ளது சிலநாட்களில் வந்தடையும் என்பதை மிக மகிழ்ச்சியாக அறியத்தருகிறேன்
வலையுலகம் பரந்து வரிந்த நீலக்கடல் போன்றது அதில் தங்களின் சிந்தனை ஆற்றலில் மலர்ந்த வார்த்தைகள் எல்லாம் ஒன்றாக சேர்த்து பல கட்டுரைகளை உருவாக்கியது வந்த படைப்புகளில் எல்லாம் நன்றாகவே இருந்தது இருந்தும் மிக திறமையான கட்டுரைகளை மிகவும் திறமை மிக்க நடுவர்கள் கொண்டு இனங்காணப்பட்டது.
நடுவர்களாக கடமையாற்றிய –
கவிஞர் –திரு.நா.முத்து நிலவன் ஐயா)
கவிஞர் –திரு.இரா.செல்லப்பா ஐயா.
கவிஞர்– திரு.ரமணி ஐயா
கவிஞர்–திரு.குவைத் வித்யாசாகர்(அண்ணா)
ஆகிய நான்கு நடுவர்களிடமும் நான் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு நடுவராக இருக்கவேண்டும் என்று சொல்லியபோது மனம் தளராமல் நாங்கள் சிறப்பாகசெய்வோம் என்று சொன்னார்கள் அவர்களுக்கு நான் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்….
போட்டி சம்மந்தமாக திரு. பாண்டியன் சகோதரன் அவர்களிடம் சொல்லியபோது. நாம் இருவரும் இணைந்து செய்வோம் என்று சொன்னார்… அவர்கள் ஒத்துழைப்பு நல்கியமைக்கு எனது நன்றிகள்….
திரு தனபாலன் (அண்ணா)அவர்கள் இடமும் சொல்லியது போது…..செய்வோம் என்று பதில் சொன்னார் வரும் கட்டுரைகளை நடுவர்களுக்கு சிறப்பாக தொகுத்துஅனுப்பும் பணியை செய்தார்… அத்தோடு இன்னும் எனக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு நல்கி வரும் தனபாலன்(அண்ணாவுக்கு )எனது நன்றிகள் பல….
வலையுலக நண்பர்களே மீண்டும் அடுத்த போட்டிக்கு தயாராக இருங்கள்….அடுத்த போட்டியில் சந்திப்போம்.
வெற்றி பெற்ற படைப்பாளிகள் கட்டுரைகளை கீழ்காணப்படும் இணைப்பில் சொடுக்கி படிக்கவும்
1.திரு.ஈ.சீ. சேஷாத்ரி
தலைப்பு:- இணையத்தின் சமூகப் பயன்பாடு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2.திருமதி-இனியா
தலைப்பு–இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3.திருமதி.கீதமஞ்சரி
தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமூக பாதிப்புகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏழு ஆறுதல் பரிசுகள்: சான்றிதழ்கள் பெறுபவர்கள் விவரம்:
>>பதிவர் பெயர் : Karthikeyan L
தளத்தின் பெயர் : கார்த்திக்கின் கிறுக்கல்கள்
கட்டுரைத் தலைப்பு : உழைப்புக்கான வழியினைச் சீர் செய்ய எண்ணாது அரசு இலவசங்களிலும் வியாபாரத்திலும் முனைவது சரியா…?
http://lkarthikeyan.blogspot.in/2014/01/blog-post_3212.html
>பதிவர் பெயர் : Dineshsanth S
தளத்தின் பெயர் : மனதின் ஓசை
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
http://imsdsanth.blogspot.in/2014/01/blog-post_8.html
>பதிவர் பெயர் : PSD PRASAD
தளத்தின் பெயர் : அரங்கேற்றம்
கட்டுரைத் தலைப்பு : இணையத்தின் சமூகப் பயன்பாடு
http://psdprasad-tamil.blogspot.in/2014/01/usesofinternet.html
>பதிவர் பெயர் : கிரேஸ்
தளத்தின் பெயர் : தேன் மதுரத் தமிழ்!
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
http://thaenmaduratamil.blogspot.com/2014/01/tharkaala-thamizhin-pokkum-edhirkaala-nilaimaiyum.html
>பதிவர் பெயர் : yarlpavanan
தளத்தின் பெயர் : தூய தமிழ் பேணும் பணி!
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்!
>பதிவர் பெயர் : கோவை மு சரளா
தளத்தின் பெயர் : பெண் என்னும் புதுமை
கட்டுரைத் தலைப்பு : தற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்
http://www.saraladevi.com/2014/01/blog-post_9207.html
>பதிவர் பெயர் : Chokkan Subramanian
தளத்தின் பெயர் : உண்மையானவன்
கட்டுரைத் தலைப்பு : இன்றைய சினிமாவின் போக்கும் சமுதாய பாதிப்புகளும்
http://unmaiyanavan.blogspot.in/2014/02/blog-post_12.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அரிய பணியை ஈடுபாட்டுடன் செய்திருக்கிறீர்கள். நல்ல கட்டுரைகள் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்தமைக்கு,ரூபன்,பாண்டியன்,மற்றும் நடுவர் பெருந்தகையோர்க்கு நன்றி
வெற்றி பெற்றவ்ர்களுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
இப்படி ஒரு போட்டியினை சிறப்புற நடத்திட்ட தங்களுக்கும்
நண்பர் பாண்டியன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
தொடரட்டும் தங்களின் பணி
எத்தனையோ தடைகளைக்குப் அப்பால்
போட்டி நாடாத்திப் பரிசில் வழங்கும்
தங்களின் தமிழ் பற்றுக்கு
எனது பாராட்டுகள்.
மிகச் சிறப்பான பணி
அருமையாகச் செய்து முடித்துள்ளீர்கள்
இரண்டு போட்டிகளை மிகச் சிறப்பாக முடித்து
பதிவுலகில் அனைவரும் தங்கள் அடுத்த போட்டியினை
எதிர்பார்க்கும்படி ஒரு நிலையான இடத்தினை
ஏற்படுத்திக் கொண்டுவிட்டீர்கள்
எப்படி நன்றி சொல்வதெனத் தெரியவில்லை
தங்கள் தொடர்பினை ஆண்டவன் கொடுத்த பாக்கியமாகக்
கருதுகிறேன்.மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
புதிய ஒரு முயற்சி செய்வோம் தம்பி…
வணக்கம் சகோதரர்
எத்தனையோ பணிச்சுமைக்களுக்கு இடையில் இனியும் காலம் தாழ்த்தினால் நன்றாக இருக்காது என்று சிரத்தையெடுத்து பரிசுப் பொருட்கள் தயார் செய்து அனுப்பி இருக்கிறீர்கள் என்பதை நானறிவேன். தங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் வலைப்பதிவால் கிடைத்தது எண்ணி நாளும் மகிழ்கிறேன். நம் நடுவர்களுக்கும் நமது உடன் பிறவா சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் தான் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வெளிநாட்டில் பணி நிமிர்த்தமாக வசித்துக் கொண்டு இப்படிப்பட்ட போட்டியை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறீர்கள் தங்களுக்கும் நன்றிகள். பரிசு பெற்ற மற்றும் பங்கு பெற்ற அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள். பரிசுகள் பொருட்களைப் பாப்பதற்கே மகிழ்ச்சியாய் இருக்கிறது. விரைவில் அனைவருக்கும் கிடைக்கப் போகும் செய்தி கூடுதல் மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றி சகோதரரே!