
அன்று ஒருநாள்
அமைதி கொண்ட பூங்காவில்
மரக் கிளைகளும் இன்னிசை பாட
பறவைகளும் இன்னிசை பாட
துள்ளி விளையாடும் மானினம் கண்டு
பரவசமடைந்த காதல் ஜோடிகள்
அன்பினால் முத்த மழை பொழிய
பகலவனும் மலைக் குகையில்
சங்கமித்தான்
அன்று ஒரு பகல் கலவாக் குருவி
அலறிஅடித்து பறந்தது
அன்று ஒரு இரவு ஆந்தையின்
சப்தம் ஒலித்தது
நரியும் நாயும் ஊளையிட்டது
ஏதோ நடக்கும் என்று அம்மாவின்
வாக்கு தெய்வ வாக்காக
சொல்லியது
விடியப்பொழுதில் ஒலித்தது
மின்னலும் இடியும்
மூட்டை மூடிச்சோடு
வீதிக்குபுறப்பட்டது உறவுகள்
கந்தக துகள்களின் புகை
பனிபடலமாய் தேசத்தை மூழ்கடித்தது
துவண்டு அழுதது எம்மினம்
இதயத்திலும் முகத்திலும்
சோகத்தின் வடுக்கள்தவழ்ந்தது
உறவுகளையும் பெற்ற பிள்ளைகளையும்
கட்டிய கணவனையும் மனைவியையும்
இதர சொந்தங்களையும்
இழந்தது எம் உறவுகள்
பூமியில் இரத்தம் துவைந்ததுஅன்று
தேசமே மயான பூமியாய் ஆனதும்அன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வலிததும்பும் வரிகள் ரூபன்…
ஒருகவிதையில் அடங்கா அத்துணை வேதனையும் …
ஈழம் என்றாவது ஒரு நாள் மலர்ந்தே தீரும்…
இதைபோன்ற போராட்டங்கள்தான் கொஞ்சம் ஆறுதல் தருகின்றன ..
http://www.malartharu.org/2013/03/blog-post_19.html
அனுபவித்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியவில்லை. அடுத்தவர்களுக்கு ஒரு செய்தியாக மறைந்துவிட்டது. காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.
சோகம் ததும்பும் கவிதை…
வணக்கம் சகோதரர்
ஒரு இன அழிப்பைக் கண்டு ஆற்றாமையால் எழுந்த வரிகள் நெஞ்சை கணக்க வைக்கிறது சகோதரா. இழந்த சொந்தங்களுக்கும் உடமைகளுக்கும் யாராலும் ஆறுதல் சொல்லி விட முடியாது. மிச்சம் இருக்கும் சொந்தங்களுக்காவது நல்லது நடக்க சம்மந்தப்பட்ட அரசாங்கம் என்ன செய்ய போகிறது என்பதும் கேள்விக் குறியாக இருப்பது வேதனையிலும் வேதனை. தங்கள் மனத்துயருக்கு மருந்து போடும் காலம் கனிந்து வரும் சகோதரரே. கவலை வேண்டாம். பகிர்வுக்கு நன்றி..
ஆரம்பம் இனிமையாக ஆரம்பித்து இறுதியில் மனதை கனக்க வைத்துவிட்டீரே ரூபன் தம்பி! தங்களின் சோகத்தில் நாங்களும் உங்கள் எல்லோருக்கும் ஆறுதலாக இருக்க விழைகின்றோம்!
சோகத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன் ஐயா
அருமை!
நெஞ்சை விட்டு அகலாது அந்த நாள் துயரம். கவிதை அருமை சகோ!
அன்று ஒரு நாள்
அப்படி ஒரு நிகழ்வில்
நானும்
சிக்கித் தப்பி வாழ்ந்தாலும்
அந்த நாள் நினைவு
நெஞ்சை விட்டு அகலாதே!
உங்கள் கவிதை வரிகள் மனதை பிழிந்துவிட்டன, ரூபன்.
காலங்கள் மாறி, இவையெல்லாம் ஒரு கனவாக மாறும் காலம் சீக்கிரம் வரட்டும்.
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி தமிழர்களின் ஆசை இதுதான்
நன்றி
அன்புடன்
ரூபன்
துயரங்கள் மாறட்டும்..!
துயர நினைவுகள் நெஞ்சவை விட்டு எளிதில் அகல்வதில்லை என்பதை உணர்த்திவிட்டது. கவிதை. காலம்தான் பதில் சொல்லவேண்டும்
தமிழ் இனத்திற்கே மோசமான அந்த தினத்தை எப்படி மறக்க இயலும் ?
மனம் நெகிழ வைக்கும் வரிகள் தம்பி…
வணக்கம் ரூபன் !
வரப்போகும் பேரழிவை வாயில்லா ஜீவன்கள் வழிமொழிய நிகழ்ந்த நிர்க்கதியான அந்த நாட்கள். எண்ணிடவே நெஞ்சம் கலங்குகிறது. உள்ளத்தை வாட்டும் உலராத உணர்வுகளோடு என்றும் வாழும் எம்மினம் …… நன்றி ரூபன்! நினைவு கூர்ந்தமைக்கும் உணர்வு பூர்வமான கவிதை தந்தமைக்கும். வாழ்த்துக்கள் ….!
வணக்கம்
அம்மா
வருகைக்கும் தங்களின் சொல் வீச்சுக் கருத்தை கண்டு உவகை கொண்டேன் நன்றி
நன்றி
அன்புடன்
ரூபன்
மனம் கனக்க வைக்கும் பொருள் கொண்ட கவிதை.
வணக்கம்
ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.திருத்தங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
நன்றி
அன்புடன்
ரூபன்
நன்றி… ஆனால் சொல்லப் பட்ட திருத்தங்களை மட்டும் எப்படி பின்னூட்டத்தில் எடிட் செய்தீர்கள்? ஆச்சர்யம்.
///பூமியில் இரத்தம் துவைந்ததுஅன்று
தேசமே மயான பூமியாய் ஆனதும்அன்று///
நெஞ்சை கனக்கச் செய்யும் வரிகள் நண்பரே
வணக்கம்
ஐயா
முதல் வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றி…
நன்றி
அன்புடன்
ரூபன்