
அன்று ஒருநாள்
அமைதி கொண்ட பூங்காவில்
மரக் கிளைகளும் இன்னிசை பாட
பறவைகளும் இன்னிசை பாட
துள்ளி விளையாடும் மானினம் கண்டு
பரவசமடைந்த காதல் ஜோடிகள்
அன்பினால் முத்த மழை பொழிய
பகலவனும் மலைக் குகையில்
சங்கமித்தான்
அன்று ஒரு பகல் கலவாக் குருவி
அலறிஅடித்து பறந்தது
அன்று ஒரு இரவு ஆந்தையின்
சப்தம் ஒலித்தது
நரியும் நாயும் ஊளையிட்டது
ஏதோ நடக்கும் என்று அம்மாவின்
வாக்கு தெய்வ வாக்காக
சொல்லியது
விடியப்பொழுதில் ஒலித்தது
மின்னலும் இடியும்
மூட்டை மூடிச்சோடு
வீதிக்குபுறப்பட்டது உறவுகள்
கந்தக துகள்களின் புகை
பனிபடலமாய் தேசத்தை மூழ்கடித்தது
துவண்டு அழுதது எம்மினம்
இதயத்திலும் முகத்திலும்
சோகத்தின் வடுக்கள்தவழ்ந்தது
உறவுகளையும் பெற்ற பிள்ளைகளையும்
கட்டிய கணவனையும் மனைவியையும்
இதர சொந்தங்களையும்
இழந்தது எம் உறவுகள்
பூமியில் இரத்தம் துவைந்ததுஅன்று
தேசமே மயான பூமியாய் ஆனதும்அன்று
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-