
எழுந்ததுஉணர்வு வெடித்ததுபுரட்சி
உலகநாட்டின் மேதினக்குரலே
ஒருநாட்டின் எழுச்சிக்குரல்
சிகப்பு நிறக் கொடியே
எங்கள்உழைப்பில் சிந்தியஉதிரத்தின்நிறமே
நாலுகாசுஎடுப்பதற்கு
நாள்முழுதும்வேலைசெய்து
கால்களும்வலிக்கவலிக்க
கண்களும் துயில்கொள்ளமறுக்க
நெஞ்சமது துடிதுடிக்க
நேர்தியாய் வேலைசெய்து.
கல்மனசு கொண்டமுதலாளி
வேதனம் தரமறுக்கிறானே.
சினம்கொண்டுசிந்தித்தமனிதனது
புரட்சிகளும்வெடித்தெழ
ஒருமித்தகுரலோசை
உலகில்புதிய பரிநாமமாய்விழித்தெழ
பணம் தின்னும் அட்டைகளின்
குரல் வளையை நசுக்கியது
உதிரம் குடிக்கும்பிசாசுகள் உழைப்பாளிகளின்
எந்திரஉடலில் கனப்பொழுது
கனலீற்றர் உதிரத்தைஉறிஞ்சுகுடிக்கும்
முதலாளிவர்க்கத்துக்கு எதிராக
சர்வதேசத்தின்அறைகூவலால்
முதலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைந்தது
பூட்டியஅடிமை விலங்குதெறித்தது
உழைப்பாளிவாழ்வில் சுதந்திரதாகம்மலர்ந்தது.
உழைப்பாளி உழைப்பில்தான்
உலகம் சுற்றுதென்று சிந்து பாடுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-