காலங்கள் உருண்டோட
வாழ்வில் வசந்தங்களும்
சோகங்களும்-வந்தாட.
உடலை விட்டுப் பிரிந்த-ஆவிபோல
அவளின் நினைவுகள்
என்னை பந்தாடுகிறது.
துள்ளி எழும் இதயம் -கூட
ஒருகனம் சிந்திக்க வைக்கிறது.
குயிலின் இன்னிசை கானம்-போல
அவளின் இன்னிசை குரலால்
என்னை நீ கூவி அழைக்கையில் காதலை சுமந்துவரும் குரலோசை
மௌனித்தது
பின்புதான் அறிந்தேன்
மின்சாரத் தடையென்று.
‘
கன்றுக்குட்டியை துலைத்த
தாய் பசு.துவண்டு அழுவது-போல.
என் விழிகள் இரண்டும்
உன்னை பார்த்த நாள் முதல்
உறங்க மறுக்கிறது…..
என் விழியில் வழிந்த கண்ணீர்துளிகள்
நான் உறங்கும்-தலையணையில்
மழைத்துளியாக -தூவியது.
உன் நினைவில் -நான் விடும்
சுவாசக்காற்றில் -ஈரம் காய்கிறது……
தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கான சான்றிதழ் அச்சடிக்க வேண்டியதால் அனுப்பாதவர்கள் விபரங்களை அனுப்பவும்
கட்டுரைப் போட்டி முடிவுகளை சகோதரன் பாண்டியன் வலைப்பூவில் பார்வையிட இதோ முகவரி
http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காலம் சுமக்கும் நினைவுகள் என்றாலே பாரம் தான்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!
கவிதையும் சோகமும் பிரிக்க முடியாததோ? பதிவினை ரசித்தேன். நன்றி. எனது பதிவினைக் காண உங்களை அன்போடுஅழைக்கிறேன்.
வணக்கம்
ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…ஐயா
நன்றி
அன்புடன்
ரூபன்
கவிதை அருமை சகோதரரே..சோகம் தெரிகிறது..சோகம் மகிழ்ச்சியாய் மாறட்டும்
வணக்கம்
சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
அன்புடன்
ரூபன்
அற்புதமான கவிதை
(பிரிவின் துயரும் சோகமும் மட்டுமே சொல்லும்
கவிதைகளாகத்தான் காதல் கவிதைகள்
இருக்கவேண்டுமா என்ன ?
உண்மையாக அப்படி இருந்த போதும் )
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
அன்புடன்
ரூபன்
”..உன் நினைவில் -நான் விடும்
சுவாசக்காற்றில் -ஈரம் காய்கிறது..”
புது இன்பம் துளிர் விடட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
ஆஹா தலையணையில் விழும் கண்ணீரை சுவாசக் காற்று காயவைக்கிறதா. இது கற்பனையா நிஜமா என்று தெரியவில்லையே. அடடா போதாதற்கு மின்சாரமும் வேற சதி செய்கிறதா.ம்…ம்.. ம்.விசனம் வேண்டாம் .காலமும் நேரமும் கூடி வரும் சீக்கிரமாகவே. கவிதை நன்றாக உள்ளது ரூபன் நன்றி வாழ்த்துக்கள் ….!
வணக்கம்
அம்மா…
கற்பனையும் நிஜமும் கலந்த வரிகள்..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
நன்றி
அன்புடன்
ரூபன்
கவிதை மிகவும் அருமை அண்ணா!
தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கான முடிவுகளை அறிவித்து விட்டீர்களா? யார் யார் வென்றது? ஒரு விவரத்தையும் காணோமே?
வணக்கம்
கட்டுரைப்போட்டிமுடிவுகள் பார்வையிட இதோ முகவரி.
http://pandianpandi.blogspot.com/2014/04/blog-post_7553.html?m=1
சகோதரன் பாண்டியன் தளத்தில்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நன்றி
அன்புடன்
ரூபன்
நண்பரே! பொழுது விடிந்தவுடன் படிக்கும் முதல் கவிதை உங்களுடையது. இது, தோல்விக் கவிதையாகத்தானா இருக்கவேண்டும்? வெற்றிக் கவிதையை எழுதக்கூடாதா? (2) தொடர்ந்து எழுதுங்கள்!
// மின்சாரத் தடையென்று // அங்கேயுமா தம்பி…! ஹிஹி…
ஏக்கம் தொனிக்கும் வார்த்தைகள் நண்பரே
அருமை
சோகக்கவிதை இனிமை கவிதையாக மாற வாழ்த்துக்கள்.
எங்கள் மகரிஷி சொல்வார் சுதந்திரம் கிடைக்கும் முன்பே கிடைத்து விட்டதாய் பாரதி பாடியது போல் . நமக்கு வேண்டியதை கிடைத்து விட்டது போல் கற்பனை செய்து கொண்டே இருந்தால் கனவு ஒருநாள் நினைவாகும்.
எண்ணத்திற்கு வலிவு உண்டு ரூபன்.
வணக்கம்
அம்மா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நன்றி
அன்புடன்
ரூபன்