விடியலைத் தேடும்-இரவு போல
எனது வாழ்வில் விடியல் காண
உனது நினைவைத் தேடுது.
உனது வாழ்வில் விடியல்-தேட
எனது நினைவைத் தேடுது…
குண்டு மணி போன்ற-கண்ணழகி
குடு குடுத்த நடைக்காரி
கட்டழகு மேனியவள்.
கண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.
மனிதன் எல்லாம் நடந்து-செல்லும்
பாதையெல்லாம்
சிறு வீதி அமைவது போல
அவள் நடந்து சென்ற -என்
இதயப் பாதையில்
அவளின் நினைவுகள்
உறங்கி கிடக்கிறது.
நீண்ட நாட்கள் மழையின்றி
வாடிக் கருகிய புற்கள்-எல்லாம்
மழை நீர் கண்டு செழிப்பது-போல.
அவளைக் கண்ட நாட்கள் எல்லாம்
என் இதயம் துள்ளிசை -பாடுகிறது.
அவள் நடந்து சென்ற
பாதை இருமருங்கிலும்
அவள் தொட்டுச் சென்ற மூங்கில் மரங்கள்
காற்றுக்கு அசைந்து – இசை பாட
அவள் இல்லாத நாட்களில்
அவள் தொட்டுச் சென்ற-மூங்கிலின்
இசையை ரசித்துக் கொண்டே-இருப்பேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உளங்கனிந்த சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்
வணக்கம்
ஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்…..
ஐயா
நன்றி
அன்புடன்
ரூபன்
“குண்டு மணி போன்ற-கண்ணழகி
குடு குடுத்த நடைக்காரி
கட்டழகு மேனியவள்.
கண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.” என்ற
அழகான வரிகள் கவிதைக்கு அழகு சேர்க்கிறதே!
தொடருங்கள். என்ன கவிதைகளைப் புரிந்துகொள்ளும் அளவிற்கு என்னைப் போன்ற நுனிப்புற்களுக்குத் தெரியாது.
வணக்கம்
சகோதரன்.
நீங்கள் நுனிபுற்கள் இல்லை..புற்களின் அடிப்பகுதி.எனக்கு கிடைத்த அன்பின் அறிவின் சுரங்கம்…எனக்கு நல்ல வழிகாட்டி எத்தனை தடவை ஆலோசனை சொல்லியிருப்பிர்கள் சகோ… நீங்கள்.
எல்லாம் விரைவில் நடக்கும்……சகோதரன்
நன்றி
அன்புடன்
ரூபன்
கவிதை அருமை ரூபன்….
ரொம்ப நாளாச்சே…. தொடர்ந்து எழுதுங்கள்…
வணக்கம் சகோதரர்
நினைவு சுமந்து நிற்கும் தங்கள் கவிதை காற்றின் வழியே இசை பாடுவது உண்மை தான்.விரைவில் உறங்கிக்கிடக்கும் அவளின் நினைவுகள் நனவாகட்டும். அழகான வரிகளைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் எனது பாராட்டுகளும். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..
ரசனையான வரிகள்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
நீண்ட நாட்கள் மழையின்றி
வாடிக் கருகிய புற்கள்-எல்லாம்
மழை நீர் கண்டு செழிப்பது-போல.
அவளைக் கண்ட நாட்கள் எல்லாம்
என் இதயம் துள்ளிசை -பாடுகிறது
ஓஹோ! அப்படியா சங்கதி! பாடட்டுமே நாங்களும் கேட்கலாம் அல்லவா? நீண்ட நாட்களின் பின் வருகையும், கவிதையும் மகிழ்ச்சி….!
வடியட்டும் வதனத்தின் வாட்டம்
விடியட்டும் வெகு விரைவில்…!
தொடர வாழ்த்துக்கள் ….!
வணக்கம் ரூபன்,
நீண்ட நாளைக்குப் பிறகு உங்களை உங்கள் கவிதை மூலம் சந்திப்பதில் மிகவும் சந்தோஷம்.
உங்களின் காதலியை சந்திக்க நானும் ஆவலாக உள்ளேன்.
பாராட்டுக்கள்!
வணக்கம் அம்மா
நானும் அவரின் காதலி பற்றிக் கேட்டேன். எல்லாம் கற்பனை எனக்கு அப்படி யாரும் இல்லை என்று சொல்லி விட்டாரே அம்மா. ஒரு வேளை உண்மையாகத் தான் இருக்குமோ!!
வணக்கம்
சகோதரன்
உங்களின் அன்பும் பாசமு கண்டு நான் மகிழ்ச்சியாக உள்ளேன்…விரைவில் நல்லது நடக்கும்….சகோ
-நன்றி
அன்புடன்
ரூபன்
வணக்கம் …செமக் கவிதை …பின்னிடீங்க போங்க ….நல்லா இருக்கு
ரசிச்சுதான் எழுதியிருக்கீங்க!
வணக்கம்
ஐயா.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…எல்லாம் நிஜம் இல்லை கற்பனை வரிகள் அதுவும ஒரு வித இரசிப்புத்தான்…..
நன்றி
அன்புடன்
ரூபன்
விடியலைத்தேடி கவிதை அழகாகவே உள்ளது
சரஸ்வதி ராஜேந்திரன் on
ஏப்ரல் 5,2014
இந்த இசையால் வசமாக இதயம் எது ?
நல்ல நினைவுகள் படைத்த கவிதை நன்று..
ஆமாம், அது என்ன குடுகுடுத்த நடைக்காரி? 🙂
இனிமையான வரிகள் மகிழ்ச்சியாய்….
வாழ்த்துக்கள் தம்பி…
அருமை நண்பரே
//////அவள் இல்லாத நாட்களில்
அவள் தொட்டுச் சென்ற-மூங்கிலின்
இசையை ரசித்துக் கொண்டே-இருப்பேன்/////
சுகமான சிந்தனைகள்
அருமை நண்பரே
வணக்கம்
ஐயா
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா
நன்றி
அன்புடன்
ரூபன்
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(ஒரு விடியலைத் தேடிஎன்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-