விடியலைத் தேடும்-இரவு போல
எனது வாழ்வில் விடியல் காண
உனது நினைவைத் தேடுது.
உனது வாழ்வில் விடியல்-தேட
எனது நினைவைத் தேடுது…
குண்டு மணி போன்ற-கண்ணழகி
குடு குடுத்த நடைக்காரி
கட்டழகு மேனியவள்.
கண்டவுடன் என் உள்ளம் -குளிர்கிறது.
மனிதன் எல்லாம் நடந்து-செல்லும்
பாதையெல்லாம்
சிறு வீதி அமைவது போல
அவள் நடந்து சென்ற -என்
இதயப் பாதையில்
அவளின் நினைவுகள்
உறங்கி கிடக்கிறது.
நீண்ட நாட்கள் மழையின்றி
வாடிக் கருகிய புற்கள்-எல்லாம்
மழை நீர் கண்டு செழிப்பது-போல.
அவளைக் கண்ட நாட்கள் எல்லாம்
என் இதயம் துள்ளிசை -பாடுகிறது.
அவள் நடந்து சென்ற
பாதை இருமருங்கிலும்
அவள் தொட்டுச் சென்ற மூங்கில் மரங்கள்
காற்றுக்கு அசைந்து – இசை பாட
அவள் இல்லாத நாட்களில்
அவள் தொட்டுச் சென்ற-மூங்கிலின்
இசையை ரசித்துக் கொண்டே-இருப்பேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-