மலரின் இதழ்கள் -மலர்வது போல
மலரின் இதழில் பனித்துளி -பட்டது போல
நெல்மணி விதைத்தது -போல
அவளின் முகங்கள் எல்லாம் -முகப்பருக்கள்
அவள் கன்னமே குழி-விழுந்தது போல
அவள் பூசும் பவுடர் வாசனை என்னில்
ஒட்டிக்கொண்டது போல-ஒரு உணர்வு
ஆதவன் மலர மறுத்தாலும்
இரவுப் பொழுது விடிய -மறுத்தாலும்
விடியும் பொழுதை காட்ட
சேவல் கூவ -மறுத்தாலும்
ஆனால் அவளின் நினைவு
கடிகார முட்கள் போல
சுற்றிக்கொண்டே -இருக்குது….
என் இதயத்துக்குளே…
கலங்கரை விளக்கை -இலக்காக வைத்து
கரையைத் தேடும் மீனவனைப் போல..
குத்து வெட்டு. அடி. உதை எல்லாம்
வேண்டி பொறுமை காக்கும் பூமாதேவி -போல
அவளின் நினைவை இலக்காக வைத்துக்கொண்டு
பொறுமையுடன் அவளை தினம் தினம்
தேடித்தேடி அலைகிறேன்….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆதவன் மலர மறுத்தாலும்
இரவுப் பொழுது விடிய -மறுத்தாலும்
விடியும் பொழுதை காட்ட
சேவல் கூவ -மறுத்தாலும்
ஆனால் அவளின் நினைவு
கடிகார முட்கள் போல
சுற்றிக்கொண்டே -இருக்குது….
என் இதயத்துக்குளே…
இதயத்தில் இருக்கும் இனியவள் வருகை இனி அவள் தான் என்று அருகில் வர வாழ்த்துக்கள்.
வலி மிகுந்த தேடல்… மென்சோகம் மகிழ்வாக மலர வாழ்த்துக்கள்…
சில காரணங்களால் வலைப் பக்கம் அதிகம் வர முடிவதில்லை. கவிதை நன்று வாழ்த்துக்கள்
கட்டுரைப் போட்டிமுடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கலங்கரை விளக்கை -இலக்காக வைத்து
கரையைத் தேடும் மீனவனைப் போல..
குத்து வெட்டு. அடி. உதை எல்லாம்
வேண்டி பொறுமை காக்கும் பூமாதேவி -போல
Nalla uvamai…..
Vetha.Elangathilakam.
மிக மிக அருமையான கவிதை…! வாழ்த்துக்கள்…!
வணக்கம்
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும மிக்க நன்றி
நன்றி.
அன்புடன்
ரூபன்
வணக்கம் ரூபன்!
கடிகார முள்ளாய் இடைவிடாது உள்ளத்தில் சுற்றும் தேவதையை ஊரெல்லம் தேடி யலைகிறீர்களா?எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்! நெல் மணி பரவிய முகம் இஷ்டமாய், அன்பின் முன் எல்லாம் அழகாகவே தோன்றும்
வாழ்க வளமுடன்….!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி…
அருமை அருமை.
வணக்கம்
இன்றுவலைச்சரத்தில் தங்களின்வலைப்பூஅறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/03/blog-post_13.html?showComment=1394694256178#c7769498290747928189
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தேடி அலைபவள்
நாடி வருவாள்
கூடியிருந்து குதூகலிக்க
தேடுவது கிட்டட்டும்.கவிதை நன்று
அருமையான வரிகள்.
நேசம் மனதில் இருந்தால் காதலியின் எல்லா செயல்களும் கண்ணுக்கு அழகாகவே தெரியும்.. முகத்தில் பரு என்பது இயல்பான ஒன்று.. ஆனால் அதுவே காதலனின் கண்களுக்கு அழகாக தெரிகிறது என்றால் அவன் மனதில் ஆழ்ந்து சிம்மாசனமிட்டு காதலி அமர்ந்திருக்கிறாள் என்று அர்த்தம்.. ஒவ்வொரு நினைவும் காதலியோடு சம்மந்தப்பட்டதை இங்கு உவமைகளோடு இத்தனை அற்புதமாக சொல்லி இருக்கீங்கப்பா ரூபன். அன்பு வாழ்த்துகள்.
ஆஹா, எப்போதும்போலவே மீண்டும் ஒரு அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
பொறுமை நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறும்…. வாழ்த்துக்கள்…
ஆஹா …நினைவலைகளில் தேடிய மீன் கிடைக்கட்டும்.வாழ்த்துக்கள்
நீண்ட காலம் உங்களைத் தேட விடாமல், விரைவில் அவள் வரட்டும்.
‘பரு’ விற்கு திரு இராய செல்லப்பா கொடுத்திருக்கும் விளக்கம் அருமை!
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும் என்றார் ஏசுபிரான் அதுபோல் தேடுங்கள் கட்டாயம் கிடைக்கும் வாரத்தை கோர்வைகள் மிக அருமை வாழ்த்துக்கள்
// அவளின் நினைவு
கடிகார முட்கள் போல
சுற்றிக்கொண்டே -இருக்குது….
என் இதயத்துக்குளே…// அருமையோ அருமை!
பனித்துளி போல, நெல்விதைத்தது போல என்று பருவிற்கு உவமானங்கள்..மொத்தத்தில் கவிதை அருமை ரூபன்..
வாழ்த்துகள்!
அவளின் நினைவி கடிகார முட்களாய்
அருமை நண்பரே அருமை
நன்றி
அருமை…
விரைவில் வருவார்கள்… வாழ்த்துக்கள் தம்பி….
ரசித்தேன்.
//நெல்மணி விதைத்தது -போல
அவளின் முகங்கள் எல்லாம் -முகப்பருக்கள்//
வஞ்சப்புகழ்ச்சியா???
அவளின் நினைவை
அழகாக அடுக்கி வைத்து
உள எண்ணம் வெளிப்பட அடியமைத்து
அழகாகப் பாபுனைந்தீர்…
“அவளின் நினைவு
கடிகார முட்கள் போல
சுற்றிக்கொண்டே இருக்குது
என் இதயத்துக்குள்ளே…” என்ற
வெளியீடு நன்று
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(தேடுகிறேன்…….தேடுகிறேன்…என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
‘பரு’வப் பெண்களுக்குப் பரு தரும் அழகே தனி! – என்று என் இளம் ‘பரு’வத்தில் நம்பினேன்! நீங்களுமா?
வணக்கம்
ஐயா…
இளம் பெண்களுக்கு முகத்தில் வரும் பரு ஒரு அழகுதான்… தங்களைப் போல ஒரு நம்பிக்கைதான்… எனக்கும் ஐயா…இருவர் கற்பனையும் ஒன்றுதான்….
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-