நேரில் பேசும் தெய்வங்கள்…..
உயிரைப் பெற்றவன்-இன்று
சுதந்திரப்பறவையாக –இருக்க
அந்த உயிரை கொடுத்தவன்
கொடுத்தவள் இன்று-சிறைக் கைதியாக
மனச்சாட்சிகளின் கதவுகள் அடைக்கப்பட்டு
ஏதோ ஒன்றை தேடிக்கொண்டு –வாழ்கிறார்கள்
ஒவ்வொரு விடியல் பொழுதும்
அவர்களின் வாழ்வில் –பெற்ற பிள்ளைகளை
தரணியிலே.மற்றவர்கள்- பிள்ளைகளுக்கு.
நிகராக வாழவேண்டும் என்ற
எண்ணச்சிறகு விரித்து பறந்தவர்கள்….
மகனே நீ இருக்க -உனக்கு
ஒரு கருவறை இருந்தது.
நான் உன்னுடன் வாழ –எனக்கென்று.
ஒரு கழிவரை கூட இல்லையா….?????
பெற்றவனும் பெற்றவளும் இன்று சிறைக் கைதியாக
மணிக்கு மணி மணித்துளியாக
கண்ணீர்த் துளிகள் சிந்துகிறோம் –மகனே…..
இந்த துயரங்களை எப்போது அறியப்போகிறாய்
ஆதவன் புலர்ந்திடுவான்
மண்வெட்டியை தோளில் –சுமந்து….
மாற்றான் தோட்டத்திற்கு- நீர்பாய்ச்சி
சமுதாயத்தில் நல்லவனாய் -வளர்த்தேனே
நீ செய்தது நாயமா.???நீதியா???
நான் பெற்ற மகனே சொல்லும்மட……,,,,,,,
அந்த கதிரவனும் மறைந்திடுவான்.
உங்களை தோளில் தூக்கி நிலாவினை காட்டி
உன்விழி உறங்க வைத்தேன்-மகனே
உன் சுக போக வாழ்வுக்கா
உன் சம்சாரத்தின் சொல்லுக்கா.
என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய் –
வேண்டாம் வேண்டாம் -உறவுகளே.
எம்மைப்பெற்ற தெய்வங்களை.
அரவனைக்க முதியோர் இல்லம்-வேண்டாம்.
அவர்களின் இறுதி மூச்சு உள்ளவரை
பெற்ற பிள்ளைகளின் மடியில் -சுமந்திடுவோம்……
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான வரிகள். ஆனால் முதியோர் இல்லம் பெருகுவதற்கு பிள்ளைகளை அனுசரித்துச் செல்ல கற்றுக்கொள்ளாத முதியவர்களும் ஒரு காரணம்தான். குறிப்பாக ஆண் மக்களை பெறும் பெற்றோர் பிள்ளைகள் தங்களுக்குத்தான் சொந்தம் என்று நினைத்துக்கொள்கின்றனர். பெண்களை பெறும் பெற்றோர்கள் இதற்கு முன்கூட்டியே தங்களை தயார் செய்துக்கொள்வதால் அத்தகையோர் யாரும் முதியோர் இல்லங்களில் தஞ்சம் அடைவதில்லை.
காலக்கொடுமை. முதியோர் இல்லங்கள் அதிகரித்துவிட்டன.
அருமையான சமூக விழிப்புணர்வுக் கவிதை
ஆனால் சில வயோதிபர்களுக்கு வீட்டில் பேச நேரமில்லாமல் ஆலாய் பறக்கும் பிள்ளைகளை விட தங்கள் ஒத்தவர்களுடன் பேசி மகிழ வயோதிப இல்லங்கள் உதவுகின்றன.
“என்னையும் உன் அம்மாவையும்…
முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு
நீ தொலை தேசம் போய் விட்டாய்” என
தந்தையர் அழுவதை விட
ஈழத்து முதியோர் இல்லங்கள்
இசைக்கும் தேசிய கீதமாயிற்றே!
ரூபன், நல்ல கவிதை. முதியோர் இல்லமோ,மகனின் இல்லமோ,வயோதிகம் கொடிது. எங்காகிலும் அன்பைத் தேடும்,கொடுக்கும் முதியவர்களுக்கு, அன்பில்லம்தான் தேவை. கடினமான வாழ்க்கை முதுமை. எங்கே தேடுகின்றாய் மனமேதான். அன்புடன்
யதார்த்தத்தைத் தாங்கள் பகிர்ந்துகொண்டுள்ள விதம் சிறப்பாக உள்ளது. தங்களது பதிவைப் படித்தபின் ஏதோ ஒன்று மனதில் சுமையாக
இருப்பதைப் போலத் தெரிகிறது.
மனதை கனக்கச் செய்யும் வரிகள்
நன்றி நண்பரே
கவிதைக்கரு மனத்தைக் கரையவைக்கிறது. இராய செல்லப்பா ஐயாவின் மாற்றுச்சிந்தைனையோ ஒருபக்கம் ஆசுவாசமளிக்கிறது. உற்ற பிள்ளைகளிடத்தில் கிடைக்கவேண்டிய அன்பும் அரவணைப்பும் கிடைக்காத நிலையில் யௌறவில்லாத மனிதர்களிடம் கிடைக்கும் ஆதரவும் ஆறுதலுமே வாழ்க்கையாகிப்போகிறது முதியோருக்கு.
நண்பரே! முதியோர் இல்லம் என்றாலே ஏதோ தீண்டத்தகாத ஒன்று மாதிரி நீங்களும் எழுத ஆரம்பித்துவிட்டீர்களே! ஒன்று சொல்லட்டுமா? (1) முதியோர் இல்லத்தில் சேர்த்தானே என்று மகன்-மருமகள் மீது வருத்தம் கொள்வதை விட, அவன், மாதாமாதம் இல்லத்திற்கு உரிய வாடகை முதலான பணத்தைச் செலுத்துகிறானா இல்லையா என்று பார்க்கவேண்டும். (2) மேலும், தனி வீட்டில் வசதிகளுடன் இருந்து, ஆனால், உயிருக்குப் பாதுகாப்பில்லாமல், ஒவ்வொரு கதவு தட்டலுக்கும் பயந்துகொண்டே, பூதக்கண்ணாடித்துளை வழியே பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் முதியவர்களைக் கேட்டால் அவர்களின் விருப்பம், பலரோடு சேர்ந்து வாழும் முதியோர் இல்லமாகத்தன் இருக்கும். (3) அதைவிட முக்கியமான விஷயம், சில பெற்றோர்கள், மகனுடைய வாழ்வை நிம்மதி இல்லாமல் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட காரணமாகிறது.
வணக்கம்
ஐயா.
தங்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்… ஐயா.
உண்மைதான்… உண்மைதான்…
(((சில பெற்றோர்கள், மகனுடைய வாழ்வை நிம்மதி இல்லாமல் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட காரணமாகிறது.)))
இப்படியான கொடுமைகள் நடைபெறுவதனால்தான் பராமரிக்க யாரும்மற்ற நிலையில்தான் இப்படியான இளைஞர்கள் இருப்பதனால்தான் இப்படியான முதியோர் இல்லங்கள் உருவாகிறது…
ஒவ்வொரு பிள்ளைகளும் உணர்ந்தால் இந்த நிலை தோன்றாது…. என் கருத்து….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமை கவிதை..காலம் அப்படி ஆகிவிட்டது..
அருமை…
சமூக நோய்களில்
ஒன்றை
தீர்க்கும்
பதிவு..
மனதைப் பிழியும் வரிகள் கண்களில் நீரை வரவழைத்தன அன்றாட வாழ்வில் நடப்பதை படம் பிடித்து காட்டியுள்ளீரகள் ரூபன்
சரியாகச் சொன்னீர்கள் தம்பி… வாழ்த்துக்கள்…