29 comments on “அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்!!!

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்… நன்றி…

    அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : http://manjusampath.blogspot.in/>கதம்ப உணர்வுகள்

    வலைச்சர தள இணைப்பு : http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_13.html

  2. கடவுள் வாழ்த்து, தமிழ்த்தாய் வாழ்த்து வரிசையில் – அம்மா வாழ்த்துப் பாடல்! கவிதையின் வரிகளைப் படிக்கும் போதே மேனியெல்லாம் சிலிர்க்கிறது!

  3. அன்று நம்மை சுமந்தவள் பட்ட வேதனையை அறிந்திருந்தும் இன்றும் அவள் நம்மைச் சுமக்க ஏங்குகிறோமே… இப்போதும் கூட நாம் சுயநலவாதிகள்தானே! தாய் எப்போதும் தாயாகவே இருக்கிறாள். பிள்ளைகள்தாம் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டிருக்கிறோம். மனம் தொட்ட கவிதைக்குப் பாராட்டுகள் ரூபன்.

  4. அருமையான ஆழமான தாய்மை போற்றும் கவிதை..மிக அருமை ரூபன்..
    //மீண்டும் உன் கருவறையை தேடுகிறேன்// சுகமான ஒன்று அல்லவா?
    பாடல் இனிமை..”தந்தாலும் தராம போனாலும் தாங்கும் அவள் கோயில்தாண்டா” – உண்மை!!
    பகிர்விற்கு நன்றி, வாழ்த்துகள்!

  5. “மீண்டும்
    உன் மடியினில் சுமப்பாயே
    தாயே!” என்று
    நாம்
    எங்கள் அம்மாவின்
    தாய் மடியில் கிடந்த சுகத்தை
    தாயின்றி நாமில்லையென்ற உண்மையை
    நினைவூட்டிய
    சிறந்த எண்ணப் பதிவிது!
    பாராட்டுகள்!

  6. வரிக்கு வரி அமைந்த வார்த்தைகள் நெஞ்சின் ஆழத்திலிருந்து வந்தவை என உணர வைக்கிறது அருமையான வரிகள் வியக்கவைக்கும் அற்புத சிந்தனைகள் வாழ்த்துக்கள் ரூபன் பாராட்டுக்களும் இதை விட உருக்கமாக ஒரு விண்ணப்பம் அம்மாவிற்கு இருக்கமுடியாது என்றே தோன்றுகிறது.

  7. உனக்காக நான் ஒரு விண்ணப்பம் எழுதுகிறேன்
    பூமியில் நடக்கும் சமூக சீர்கேடுகளை
    என் கண்ணால் பார்க்க -முடியாது தாயே.
    மீண்டும் உன் கருவறையை தேடுகிறேன்
    சில காலம் வாழ்வதற்காய்
    மீண்டும் உன் மடியினில் சுமப்பாயே –தாயே.

    அற்புதமான வரிகள்! தாயின் அன்பையும் சிறப்பையும் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் நண்பரே!

    அந்தப் பாடல் இளையாராசாவின் குரலில் அருமை! எங்களுக்கு அவரால் இசையமைக்கப் பெற்ற, ஏசுதாசின் இனிய குரலில் தவழ்ந்து வந்த இந்தப் பாடலும் நினைவுக்கு வருகின்றது!

    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே……….

  8. தாயின் கருவறையே சொர்க்கம் என்று ஏங்கித் தவிக்கும்
    மனத்தின் ஓலம் கவிதை வரிகளானது இங்கே ! அருமை !
    வாழ்த்துக்கள் சகோதரா மென்மேலும் படைப்பில் சிறந்து
    விளங்க .

  9. தாயின் வயிற்றில் சில காலம்
    கவலை அற்ற மனிதனாய் தூங்கினேன்//

    மீண்டும் உன் மடியினில் சுமப்பாயே –தாயே.//

    அருமை. நெகிழ வைத்த வரிகள்.
    பாடல் பகிர்வும் நன்றாக இருக்கிறது, தாயின் பெருமையை கூறுகிறது.
    வாழ்த்துக்கள் ரூபன்.

  10. பெற்றவளின் பெருமைகளை பாடி, அவனியின் அவலங்கள் கண்டு பொறுக்காது தாயின் மடியில் மீண்டும் தஞ்சம் புகுதல் என்பது நெஞ்சின் மிகுந்த வலியை புலப்படுத்துகிறது. அருமையான சிந்தனை.

    நன்றி…! தொடர வாழ்த்துக்கள்…..! .

  11. வணக்கம்
    என் வாசக நெஞ்சங்களே
    இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்( அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

  12. உடல் அழகை தாரைவார்த்து
    உதிரத்தை அமுதாக்கி
    உலகினில் உய்விக்க வைத்த
    உலகநாயகியாம் பெற்ற அன்னையின்
    புகழ்பாடும் அற்புதமான கவிதை நண்பரே…
    ==
    இன்றிருக்கும் சமூகம் சலித்துப்போனது..
    அன்றிருந்த கருவறை தேடுகிறேன்
    மீண்டும் அடைக்கலம் கொடுப்பாய் தாயே..
    சற்று நேரம் ஓய்வெடுக்கிறேன்..
    வார்த்தை இல்லை நண்பரே..
    பொதுவாக பல சதவிகிதத்தினர் தேடும்
    நிம்மதியான இடம்..
    கிடைத்தால் அமைதி கொள்வோம்..

  13. வணக்கம் சகோதரர்
    அற்புதமான வரிகள். தாயை ஆராதிக்கும் உங்கள் நல்ல உள்ளம் கண்டு பூரிக்கிறேன். தொடர்க. முடிவில் முத்தாய்ப்பாய் மீண்டும் தாய் மடி வேண்டியது அழகு சகோதரரே. எல்லோரும் விரும்புவது அது தானே! பகிர்வுக்கு நன்றி..

கோமதி அரசு -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி