
கடலோரம் வீடுகட்டி அலையோடு போனாம்
அலை வீசும் கடலோரம்
அழும் நெஞ்சம்மெல்லாம் துயர்றோரம்
வானுயரும் இராட்சத அலையே.
எங்கள் வாழ்வை இழக்கவைத்தாய்.
துயருறும் இதயங்களை. மீண்டும் மீண்டும் அழவைத்தாய்
கடல்ஏறப் படகில்லை நாம் வீச வலையிலை.
எங்களை வாழ வைத்த கடல் தாயே
எங்களை ஏன் கண்ணீரில் அழவைத்தாய்???
துயரங்களை யார் இடந்தான் சொல்வோம்.
அள்ளி அரவனைத்த பிள்ளைகள்
நெஞ்சுருகி பாசம் அள்ளித் தந்த –தாயவளை
அள்ளிச்சென்றாய் கடலையே.
பள்ளி செல்ல வழியிலை.
போகும்மிடமல்லாம் பினக்குவியல்
நாம் கும்பிட்ட கோயில் இல்லை நாம் வாழ்ந்த ஊரில்லை
சின்னஞ் சிறு பிஞ்சுகளை ஏன் கதற விட்டாய்.
இத்தனை துயரங்களையும் ஏன் தந்தாய் கடல்தாயே.
அழுவதற்கு என்று எவரும் மண்ணில் பிறந்ததில்லை
அழுதோம் அழுதோம் எங்கள் வாழ்வு சிறக்கவில்லை.
எங்கள் வாழ்வில் ஏன் இத்தனை காயம்
உன்னால் வந்தது வலியின் உச்சம்
உன்னால் வந்தது எங்கள் வாழ்வில் -சோகம்
தண்ணீரில் நின்று கூவிக் கூவி அழுதோம்
துரத்தி துரத்தி அடித்தது இராட்சத அலையின் கரங்கள்
மடிந்தது எங்கள் உறவுகள் –அதனால்
உப்பு நீர் சிகப்பாய் ஆனது அன்று.
இதுவென் வாழ்க்கை என்ற சோகம் வேண்டாம்-உறவுகளே.!
எம் உறவுகள் அழுவதால் வசந்தங்கள் விடியாதே
உறவினை இழந்தால் உறவுகள் முடியாதே…
புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
நம் வாழ்வை உயர்த்திவிடும் …….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6-part-2.html) சென்று பார்க்கவும்… நன்றி…
உள்ளத்தைத் தொடும் பதிவு
உள்ளத்தில் உருளும் உண்மையை
உணர்வோடு எடுத்தாள
முனைந்ததைப் பாராட்டுகிறேன்!
மறக்கமுடியாத நினைவலைகள்.
ஆழிப் பேரலையால் அலைக்கழிக்கப்பட்டவர்களின் துயரங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அருமை. வாழ்த்துக்கள்.
சொல்லமல் வந்த சுனாமி செய்த
கொடுமை ! மறக்க இயலா ஒன்று!
வார்த்தைகளின் ஆக்ரோஷம் சுனாமியின் ஆக்ரோஷத்தை உணர்த்துகிறது ஆண்டுகள் பத்து உருண்டோடினாலும் அந்தக் கோர சுனாமியின் சுவடுகள் இன்னும் மாறவில்லை மறையவில்லை என்பது புரிகிறது. அருமையான வரிகள் அழகிய கவிதை பாராட்டுக்கள்
கவிதை அருமை!
சுனாமி துயரங்கள் மறக்க முடியாதவை. அவற்றை கண் முன் கொண்டுவந்த கண்ணீர் கோர்க்கவைக்கிறது உங்கள் வரிகள். வாழ்த்துக்கள் சகோ!!
சுனாமியின் ஆக்ரோஷத்தை கண் முன் நிறுத்தியது உங்கள் கவிதை ..அருமை !
கடலோரம் வீடு கட்டி கனவுகளை
நாட்டி வைத்தால் காண வந்த கடலலையோ
கரைத்தழித்து சென்றதுவே காயம் மட்டும்
நெஞ்சினிலே கரையாமல் தேங்கியதே
/புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
நம் வாழ்வை உயர்த்திவிடும்//என நம்பிக்கை தரும் வார்த்தைகள். வேதனையை விரட்டிடும்.
அருமை ! நன்றி தொடர வாழ்த்துக்கள்….!
உள்ளம் உருகி பதைக்கும் காட்சி!!! கடவுளே….. ஏன்? ஏன்? என்ற கேள்விதவிர வேறொன்றும் தோன்றவில்லை….
Eniya vaalththu…….
வணக்கம்
சகோதரி
நான் இப்போது பார்த்தேன் சொல்லவந்த விடயம் ஒன்றுதான்… வரிகள் இரசனைகள் வித்தியாசம்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
நம் வாழ்வை உயர்த்திவிடும் …….
//
வாழவை உயர்த்த அருமையான நம்பிக்கை ஊட்டும் கவிதை.
வாழ்த்துக்கள்.
விடையில்லாத சோகம்…
நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது…
வணக்கம்
என் வாசக நெஞ்சங்களே
இரவுக்கும் பகலுக்கும் இடையேபுரட்சி செய்து முழு நாட்களையும் வேண்டிஎழுதிய எழுத்துக்கள் காலத்தால்அழியாத சுவடுகளாகசரித்திரம் படைக்கட்டும் என்ற உணர்வுகளுடன்(கடலோரம் வீடுகட்டி அலையோடு போனோம்……..)என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்(கவிதையை) படித்து அனைவருக்கும் பயன் உள்ளவாறு ஆக்க உங்கள் கருத்தை சொல்லுங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
//புயலடித்து போன பின்பும் கூடுகட்டும் குருவி.-போல
கடல்அடித்து போன பின்பும் வாழ்வதுதான் உறுதி.
நம்பிக்கை என்ற இலட்சிய வழிதனில்
நம் வாழ்வை உயர்த்திவிடும்//
அருமையான கவிதை! நெஞ்சை இருக்கும் வரிகள்!
நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கையில் தான் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் விடிந்து கொண்டிருக்கின்றது!
த.ம. …….