மலரின் இதழ்கள் -மலர்வது போல
மலரின் இதழில் பனித்துளி -பட்டது போல
நெல்மணி விதைத்தது -போல
அவளின் முகங்கள் எல்லாம் -முகப்பருக்கள்
அவள் கன்னமே குழி-விழுந்தது போல
அவள் பூசும் பவுடர் வாசனை என்னில்
ஒட்டிக்கொண்டது போல-ஒரு உணர்வு
ஆதவன் மலர மறுத்தாலும்
இரவுப் பொழுது விடிய -மறுத்தாலும்
விடியும் பொழுதை காட்ட
சேவல் கூவ -மறுத்தாலும்
ஆனால் அவளின் நினைவு
கடிகார முட்கள் போல
சுற்றிக்கொண்டே -இருக்குது….
என் இதயத்துக்குளே…
கலங்கரை விளக்கை -இலக்காக வைத்து
கரையைத் தேடும் மீனவனைப் போல..
குத்து வெட்டு. அடி. உதை எல்லாம்
வேண்டி பொறுமை காக்கும் பூமாதேவி -போல
அவளின் நினைவை இலக்காக வைத்துக்கொண்டு
பொறுமையுடன் அவளை தினம் தினம்
தேடித்தேடி அலைகிறேன்….
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-